திருவாதிரை நடராஜருக்கு அபிசேகம் நாமங்கள் செய்யுங்கள்.!

goodness fo Thiruvaathirai Natarajan Aaruthra Abishegam

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரதேசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் உலகப்புகழ் வாய்ந்தது. இதை காண்பதற்காக உலகம் முழுக்க இருக்கும் மக்கள் இந்த நாள் அதாவது ஜனவரி 9 மற்றும் 10ம் தேதிகளில் அதிக அளவில் வருகிறார்கள். ஏனென்றால் வருடத்திற்கு ஒருமுறைதான் மரகதக் கல்லினால் செய்யப்பட்ட நடராஜரை நாம் முழுமையாக பார்க்க முடியும். இதை கொண்டாடுவதற்காக 9ஆம் தேதி மாலை 6 மணி முதல் 10ஆம் தேதி காலை 6 மணி வரை திருவிழா போல் கொண்டாடுவார்கள். இதற்காகவே இந்த கோவிலுக்கு ராமநாதபுரம் மாவட்டங்கள் முழுவதும் ஏராளமான சிறப்பு பேருந்துகளின் வசதிகளை ஏற்பாடு செய்துள்ளார்கள்.

இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு இடங்களில் ஆருத்ர தரிசனம் செய்து வருகிறார்கள் ஆனால் இவை அனைத்தையும் விட ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்தக் கோவிலில் செய்யும் ஆருத்ர தரிசனம் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இங்கு உள்ள ஆறு அடி பச்சை மரகதக்கல்லால் ஆன நடராஜர் சிலையால்தான். இந்த மரகதக் கல்லினால் ஆன நடராஜர் சிலை அதிக அளவிலான வெப்பத்தை வெளியிடுவதினால் இதன் மேல் சந்தன காப்பை பூசப்பட்டு இருக்கிறார்கள் மற்றும் வெளியில் இருந்து வரும் அதிர்வலைகள் இந்த சிலைகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவும் இந்த நடராஜர் சிலை மேல் சந்தன காப்பு பூசப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் படிக்க – அனுமானை வழிப்படும் முறைகள்…!

இதனால் மார்கழி மாதத்தில் இந்த சந்தன காப்பை முழுமையாக நீக்கி விட்டு நடராஜர் சிலை மேல் புதிய சந்தன காப்பை போடுவார்கள். இந்த நேரத்தில் மட்டும்தான் நாம் நடராஜரை முழுமையாக பார்க்க முடியும். இதற்காகவே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார்கள்.

ஆருத்ர தரிசனம் ஜனவரி 10ஆம் தேதி காலை 8 மணியில் இருந்து தொடங்குகிறது. இந்த சமயங்களில் நடராஜர் மேல் உள்ள சந்தனக் காப்பினை அகற்றி அவருக்கு 18 வகையான மகா அபிஷேகம் நடைபெறும்.

இரவு 10 மணிக்கு கூத்தபெருமாள் கல்தேர் மண்டபத்தில் கலைநிகழ்ச்சிகள் நடக்கும். பிறகு 11 மணிக்கு மீண்டும் நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும்.

மேலும் படிக்க – சிவராத்திரியில் வில்வ பூஜை செய்து வளம் பெருக

இந்த தரிசனத்தை பார்ப்பதற்காக இலவச அனுமதி மற்றும் 10 ரூபாய், 20 ரூபாய் போன்ற கட்டட அனுமதி உள்ளது. விஐபி தரிசனத்திற்கு 250 ரூபாய் வசூலிக்கப்படுகிறார்கள். இதை தவிர்த்து அன்றைய நாள் முழுவதும் இலவசமாக அன்னதானமும் போடுகிறார்கள். எனவே இத்தகைய சிறப்பு மிக்க ஆருத்ரா தரிசனத்தை மறக்காமல் எல்லா பக்தர்களும் தரிசிப்பது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன