இந்தக் கடவுளை வழிபடுவதன் மூலம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்..!

Gods to worship to have a baby

செல்வங்களில் மிக அரிதான செல்வம் என்று கருதப்படுவது குழந்தைச்செல்வம். ஒரு குடும்பம் முழுமை அடைய வேண்டுமென்றால் அவர்களுக்குள் குழந்தை செல்வம் இருக்கவேண்டும். ஆனால் இப்போது இருக்கும் வாழ்க்கை முறைகளில் பல பேருக்கு குழந்தை பாக்கியம் தாமதமாகிறது, அதிலும் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை. இவர்கள் பல மருத்துவ மனைகளுக்கு ஏறி இறங்கியும் எந்த பயனும் கிடைக்கவில்லை என்றால் ஆன்மீகத்தின் வழியில் குழந்தை பாக்கியம் பெறுவதற்கான வழிகளையும் அதற்காக நாம் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

சிவபெருமான் வழிபாடு

சிவன், பார்வதி, முருகன், கணேசன் என அளவான குடும்பத்தை கொண்டிருப்பவர் தான் சிவபெருமான். சிவனின் கோவில்கள் இல்லாத இடத்தை நாம் பார்ப்பது அரிது. அப்பேர்ப்பட்ட சிவனின் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதினால் உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதுவும் சிவலிங்கம் இருக்கும் இடத்தில் ஆழ்ந்த தியானத்தின் மூலமாக உங்கள் வேண்டுதலை வைத்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க – சோமவார விரதம் இருந்தால் சொகுசு வாழ்க்கை கிடைக்கும்!

பைரவர் வழிபாடு

சிவனின் ஒருவிதமான அவதாரம்தான் இந்த பைரவர். இவர் நிர்வாணமாக காட்சியளிப்பார், இவருக்கான சிறப்பு வாய்ந்த கோவில் நேபாளத்தில் கத்மண்டு நகரில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்று பைரவரிடம் நாம் சாஷ்டாங்கமாக தரையில் படும்படி வணங்கினால் நிச்சயம் அவர்களுக்கு திருமண யோகம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பலராலும் நம்பப்படுகிறது.

காமதேவா வழிபாடு

பெயரில் இருப்பதைப்போல் காம என்றால் காமத்தை குறிக்கிறது, தேவா என்றால் கடவுளை குறிக்கிறது. இவரின் உருவத்தை சிவன் போரிட்டு அழித்து விட்டார் என்று புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் காமதேவன் மேலும் வலுவடைந்தார். எனவே இவரை வழிபடுவதன் மூலம் கணவன்-மனைவிக்குள் ஈர்ப்பு அதிகரித்து குழந்தை பாக்கியயின்மை விலகும்.

மேலும் படிக்க – காகத்திற்கு படைத்து பிதருக்களிடம் ஆசி பெறுங்கள்!

காளி வழிபாடு

சிவனைப் போலவும் காளியும் அழிக்கும் தன்மை கொண்டவர். எனவே இவர்கள் அழிக்கும் தன்மைகளைக் கொண்டிருந்தாலும் ஆக்கும் தன்மைக்கு உதவுவார்கள். எனவே காளியை வழிபடுவதன் மூலம் உங்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்கும். ஆண், பெண் இருவருக்கும் உள்ள உணர்வுகள் அதிகரித்து குழந்தை பாக்கியத்திற்கு தேவையான சக்திகளை இந்த காளியின் வழிபாடுகள் மூலமாக நாம் பெறமுடியும்.

மேலும் படிக்க – தர்பணம் தர சிறந்த நாள் தை அம்மாவாசை

இதுபோன்ற வழிபாடுகள் செய்வதன் மூலம் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் எப்போதும் நேர்மறை சிந்தனையுடன் இருப்பதினால் உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். முடிந்தவரை உங்கள் பூஜை அறையில் லிங்கத்தை வைத்து வழிபடுவது நல்லது. அதேபோல் எந்த சிவாலயங்கள் சென்றாலும் அங்கே லிங்கத்தை வணங்கி விட்டு உங்கள் குறைகளை மனம்விட்டு சொல்லி பூஜைகள் செய்வதன் மூலமாக மிக விரைவில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன