இதுபோன்ற ஆண்களைதான் பெண்கள் திருமணம் செய்து கொள்வார்கள்.!

girls expect this quality from their future husband

ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்த்த உடனே அவள் மேல் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்துகொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறான். அனைத்திற்கும் அவருக்குத் தேவையானது ஒன்றே ஒன்றுதான் அந்தப் பெண் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்தால் போதும். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணை திருமணம் செய்ய வேண்டும் என்றால் அவருக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அவைகள் என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம்.

நேர்மையாக இருக்க வேண்டும், எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதில் நேர்மையும் தெளிவும் இருக்கும் ஆண்களை பெண்கள் அதிகமாக தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்கள் செய்யும் செயலில் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் மிகத்தெளிவாக செய்யும் ஆண்கள் எப்போதும் நேர்மையாக இருப்பார்கள். இது போன்றவர்களின் உறவு மேற்கொள்ளும்போது தங்கள் உறவிலும் அவர்கள் நேர்மையாகவே இருக்க முயற்சி செய்வார்கள். எனவே ஒரு பெண் அதிக அளவில் எதிர்பார்ப்பது ஒரு ஆண் எப்படி மற்ற விஷயங்களை எதிர்கொள்கிறான் என்பதுதான் எனவே நேர்மை உள்ளவர்கள் உறவை மதிக்க தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

மேலும் படிக்க – காதலர் தினத்திற்கான ட்ரெண்டிங் பரிசுப் பொருட்கள்!

பொறுப்புடன் இருக்கும் ஆண்கள் தான் குடும்பத்தை நடத்துவதற்காக சரியானவர்கள். எப்போதும் குறும்புத்தனமாக முரட்டுத்தனமாகவும் இருக்கும் ஆண்களை பெண்கள் காதலிப்பார்கள் ஆனால் அவர்களுக்குள் பொறுப்புணர்வு இருந்தால் மட்டுமே அவர்களை திருமணம் வரை கொண்டு செல்வார்கள் இல்லை எனில் காதல் தோல்வி நிச்சயம்.

உறவில் மிக முக்கியமான ஒன்று அன்பும், அக்கறையும் இது இருந்தால் மட்டுமே பெண்கள் அந்த ஆணை திருமணம் செய்ய முன் வருவார்கள். என்னதான் காதல் இருந்தாலும் அதில் அன்பும், அக்கறையும் இல்லாமல் போனால் அவர்களை திருமணம் செய்வதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை எனவே இது போன்ற நபர்களை பெண்கள் புறக்கணித்து அன்பும் அக்கறையும் காட்டும் ஆண்களை திருமணம் செய்ய முன்வருகிறார்கள்.

வாழ்க்கையைப் பற்றிய சரியான திட்டங்களைத் தீட்டி தங்கள் நிதி நிலைகளை சமநிலையில் வைத்துக் கொள்ளும் ஆண்களை பெண்கள் திருமணம் செய்ய முன் வருகிறார்கள். பணப்பற்றாக்குறை மற்றும் போதிய வருமானம் இல்லாத ஆண்களை பெண்கள் அதிகமாக நம்புவதில்லை. யார் ஒருவர் தன் வாழ்க்கையை நடத்தும் அளவிற்கு சம்பாதிக்கிறார்களோ அவர்களுக்கு பெண்கள் முன்னுரிமை தருகிறார்கள்.

மேலும் படிக்க – இதுதான் உண்மையான நட்பு..!

சில பெண்கள் தன்னம்பிக்கையுடன் மிகப்பெரிய லட்சியங்களை கொண்ட ஆண்களை அதிகமாக விரும்புகிறார்கள் எனவே இலட்சியவாதிகள் எப்போதும் தனக்கென ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு அதை நோக்கிப் பயணிப்பார்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை நடத்துவதிலும் சரியான குறிக்கோளை கொண்டிருப்பார்கள், என்ற நம்பிக்கையில் பெண்கள் இதுபோன்ற ஆண்களை விரும்புகிறார்கள் அதுவும் இவர்களுக்கு தன்னம்பிக்கை ஏகப்பட்ட அளவில் இருப்பதினால் பிறரின் உதவியை நாடாமல் தனக்கென தனி வழி அமைத்து உறுதியாக இருக்கும் ஆண்கள் இவர்கள்தான் என இது போன்றவர்களை பெண்கள் எப்போதும் முன்னுரிமை தந்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ஒரு பெண் தன் வீட்டை விட்டு முழுமையாக தன் கணவனிடம் வந்தடைகிறாள். இப்படிப்பட்ட கணவன் இவருக்கான சரியான இடத்தை தர வேண்டும் மற்றும் இவருக்கென ஒரு வாழ்க்கை அமைக்க வேண்டும் என்பதெல்லாம் இவர்களின் கனவு. எனவே ஒரு ஆண் எப்போதும் ஒரு பெண்ணை ஊக்குவித்து கொண்டு அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் ஆணாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். இது போன்றவர்களை பெண்கள் முன்னுரிமை தருகிறார்கள்.

வாழ்க்கையில் நகைச்சுவை உணர்வு என்பது மிக முக்கியமான ஒன்று என்னதான் உறவுகள் அழகாகவும், ஆழமாகவும் இருந்தாலும் அவர்களுக்குள் மகிழ்ச்சியான தருணங்கள் இருந்தால் மட்டுமே அவர்கள் வாழ்க்கை பூர்த்தி அடையும் எனவேதான் சிடுசிடுவென இல்லாமல் நகைச்சுவை உணர் கொண்ட ஆண்களை பெண்கள் அதிகமாக விரும்புகிறார்கள்.

மேலும் படிக்க – நான் அறிந்த உலகத்தின் உத்தம காதலன்!

இது அனைத்திற்கும் மேலாக யார் ஒருவர் உடலுறவில் திருப்தி அளிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்களோ அவர்களையே பெண்கள் அதிகமாக விரும்புவார்கள். நாம் திருமணம் செய்து கொள்வது என்பது ஒரு குடும்பத்தை அமைத்து நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வழி. இதற்கு ஊன்றுகோலாக இருப்பது உடலுறவுதான். இதில் குறைபாடு உள்ள ஆண்களை பெண்கள் நாளடைவில் வெறுக்கத் தொடங்கி விடுவார்கள். எனவே இதில் சரியான அணுகு முறையுடன் ஒரு பெண்ணை கவரும் ஆண்களை அதிகமாக நேசிக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் உள்ள ஆண்களை பெண்கள் தேடுகிறார்கள். எனவே இது போன்ற குணங்கள் உங்களிடம் இருந்தால் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலை வேண்டாம் உங்களுக்கான வாழ்க்கை துணை மிக எளிதில் கிடைத்து விடுவார்கள். அதேபோல் இதில் ஏதாவது குறைகள் உங்களுக்கு இருந்தால் முடிந்தவரை அதை சரிசெய்து பெண்களின் மனதை கவர முயற்சி செய்யுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன