வீட்டிலிருந்தபடியே சர்மத்தில் ஏற்படும் வெள்ளைத் திட்டுகளை அகற்றுவது எப்படி?

Get rid of white patches in the skin with these home remedies

ஒவ்வொரு காலங்களுக்கு ஏற்றார்போல், நமது சருமத்தை பாதுகாப்பது என்பது கடினமான ஒன்றாகவே மாறிவருகிறது. ஏனென்றால் சூரிய ஒளியின் தாக்கம், மாசு, மற்றும் அழகு போன்றவைகளினால் நமது சருமம் அதிகமாக பாதிப்படைகிறது. இதை தவிர்த்து மெலனின் குறைபாடினால் சருமம் தன் நிலையை தவிர்த்து பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இதை தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

வெள்ளைத் திட்டுக்கள்

ஒருசிலரின் சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் அதிகமாக இருக்கும். இதனால் அவர்கள் அவ்வப்போது அதை மறைப்பதற்காக க்ரீம்களை பயன்படுத்துவார்கள், ஆனால் இயற்கை முறையில் இதை முழுமையாக அகற்றினால் மட்டுமே அது சரியான தீர்வாக இருக்கும்.

எப்போது ஒருவருக்கு வெள்ளைத் திட்டுகள் ஏற்படுகிறதோ அப்போதிலிருந்து அவர்களுக்கு தன்னம்பிக்கையின் அளவு குறைகிறது. இதனால் வெளியே செல்வதற்கு தயங்கி தங்களின் அன்றாட வேலைகளை பாதிப்படைய செய்கிறார்கள். எனவே இது போன்றவர்கள் வெள்ளை திட்டுளை நிரந்தரமாக குறைப்பதற்கு ஒருசில உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், அது என்னவென்று பார்ப்போம்.

மேலும் படிக்க – மெலனின் நிறமி பாதிப்பை சரி செய்து சரும பளபளப்புக்கு இதை பயன்படுத்துங்க.!

செம்பு பாத்திரம்

வெள்ளைத் திட்டுக்கள் உங்கள் சருமத்தில் ஏற்படாமல் இருப்பதற்கு நீங்கள் நீரை அதிகமாக பருக வேண்டும். ஏனென்றால், உங்கள் சருமத்தில் நீர் குறைபாட்டினால் வெள்ளைத் திட்டுக்கள் ஏற்படுகிறது. எனவே முடிந்த வரை தேவைப்படும் சமயங்களில் அதிகமான நீரையும் அருந்துங்கள், முடிந்தவரை செம்பு பாத்திரத்தில் நீரை ஊற வைத்து குடியுங்கள் இதனால் உங்கள் சருமத்தில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும்.

இஞ்சி பழசாறு

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிக அதிகமாக உதவுவது இஞ்சி. இதை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை தினமும் காலையில் குடிப்பதன் மூலம் நமது சருமத்தில் ஏற்படும் திட்டுக்கள் அகன்றுவிடும். இல்லையெனில் உங்கள் உணவுகளில் அதிக அளவு இஞ்சியை எடுத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் சாதாரண தேநீரை குடிக்காமல் இஞ்சி கலந்த தேநீரை குடியுங்கள். இதனால் உங்கள் சருமம் திட்டுக்கள் இல்லாமல் அழகாக இருக்கும்.

மேலும் படிக்க – தயிரை வைத்து நம் அழகை அதிகரிப்பது எப்படி?

மாதுளம் இலை

நீங்கள் மாதுளை பழத்தை சாப்பிட்ட பிறகு அந்த தோலை கீழாக போடுபவராக இருந்தால் அதை செய்யாமல் அதை நன்கு வெயிலில் உலர வைக்க வேண்டும். அதேபோல் மாதுளை மரத்தின் இலைகளைப் பறித்து நன்கு உலர வைக்க வேண்டும். இதை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து தினமும் காலையில் குடிப்பதன் மூலம் உங்கள் சரும பிரச்சனைகள் அனைத்தும் விலகும் செரிமான பிரச்சனை, தொண்டை பிரச்சனை போன்ற அனைத்திற்கும் தீர்வாக இருக்கும். எனவே மாதுளை இலை மற்றும் பழத்தோலை வீணாக்காமல் இது போன்ற வழிகளில் பயன்படுத்துங்கள்.

ஆரோக்கியமான உணவுகள்

நீர் குடித்து அலுத்துப்  போனால் அவர்கள் மோரை குடிக்கலாம். தினமும் சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பதினால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. இதன் மூலமாக வெயில் தாக்கத்தினால் உங்கள் சருமம் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. அதேபோல் வெள்ளைத் திட்டுக்கள் உருவாகாமல் தடுப்பதற்கும் உதவுகிறது.

மேலும் படிக்க – நைட் கீரிம் போடுங்க நாள் முழுவதும் பிரெஷா இருங்க.!

அத்திப்பழத்தை உண்பதினால் உங்கள் சருமம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே வெள்ளை திட்டுக்கள் உள்ளவர்கள் அத்திப்பழத்தை தினமும் உட்கொள்ளுங்கள். இதன் மூலமாக உங்கள் ஆரோக்கியம் அதிகரிப்பது மட்டுமல்லாமல் உங்கள் சருமமும் நீங்கள் எதிர்பார்ப்பதை போல் பளபளப்பாக இருக்கும்.

இதுபோன்ற உணவுகளை தினமும் உட்கொள்வதினால் உங்கள் சருமத்தில் ஏற்படும் வெள்ளைத் திட்டுக்கள் அகன்றுவிடும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் இதற்கான சிகிச்சைகளை உடனடியாக செய்ய வேண்டும், இல்லையெனில் நாளடைவில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வெள்ளை திட்டுகளை அகற்றுவதற்கு கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை குறைத்துப் பயன்படுத்தி இதுபோன்ற உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன