சினைப்பை நோய் தொற்றை தடுப்பதற்கான உணவுகள்..!

  • by
get nutritionists tips to cure pcos

பெண்களுக்குள் இருக்கும் சினைப்பையில் ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண்மை சுரப்பை அதிகரிக்கும் போது ஏற்படும் நோய் அறிகுறியாக பார்க்கப்படுவது பிசிஓஎஸ். இந்தப் பிரச்சினை மூலமாக பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், அதிகமான ரத்தப் போக்கு, உடல் மற்றும் முகத்தில் முடிகளின் வளர்ச்சி அதிகரிப்பு, இடுப்பெலும்பு வலி மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இந்தப் பிரச்சினைகள் இருந்தால் பெண்களுக்கு எளிமையாக நீரிழிவு நோய், உடல் பருமன் பிரச்சனை மற்றும் இருதய பிரச்சனை போன்றவைகள் உண்டாகும். இந்தப் பிரச்சனையை நாம் ஆரோக்கியமான உணவுகளைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் நமக்கு அறிவுரை வழங்கி உள்ளார்கள்.

நார்ச்சத்து உள்ள உணவு

இது போன்ற பிரச்சனை உள்ள பெண்கள் நார்சத்து அதிகமாக உள்ள காய்கறி உணவுகளை உண்ண வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். புரோட்டின் அதிகமாக உள்ள உணவுகள், மீன் உணவுகள் மற்றும் நெஞ்செரிச்சலை தூண்டாத உணவுகளை உட்கொள்ள வேண்டும். இவர்கள் தக்காளி மற்றும் மஞ்சளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக உங்கள் உடலில் செரிமானம் சீராக இருக்கும், இதன் மூலமாக உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சமமாக இருக்கும். இது சினைப்பை நோய் தொற்று உள்ள பெண்களுக்கு உதவியாக இருக்கும்.

சினைப்பை நோய் தொற்றை தடுப்பதற்கான உணவுகள் பற்றி தெளிவான ஆலோசனைகளை பெற எங்கள் நிபுணரை அணுகுங்கள்.

காய்கள் மற்றும் பழங்கள்

இந்த நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பெண்கள் புரோக்கோலி, காலிஃப்ளவர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதை தவிர்த்து பூசணிக்காய், பீன்ஸ், சிவப்பு மற்றும் கருப்பு மிளகு, பாதாம் போன்ற நட்ஸ் உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சேர்த்து வால்நெட், ப்ளூபெர்ரி, ஸ்டிராபெரி, ஒமேகா-3 சக்தி அதிகமாக உள்ள மீன் உணவுகள் மற்றும் ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க – இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் ஊட்டச்சத்து நிபுணரை சந்திக்க வேண்டும்..!

தவிர்க்க வேண்டிய உணவுகள்

இவர்கள் ஒரு சில உணவை கட்டுப்பாடுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் அதை முழுமையாக தவிர்க்க வேண்டும். அதில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள உணவுகளை நாம் முழுமையாக தவிர்க்க வேண்டும். பிரட் மற்றும் பேக்கரி உணவுகளில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் இருக்கிறது, எனவே இவர்கள் இது போன்ற உணவை முழுமையாக தவிர்க்க வேண்டும். பாஸ்தா, நூடுல்ஸ் என உடனடியாக சமைக்கும் அனைத்து உணவுகளையும் நாம் தவிர்க்க வேண்டும்.

இவர்கள் எப்போதும் தங்கள் மனநிலையை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும், அதற்கு அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்வதைப் போல் சரியான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அவ்வப்போது மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும், அதேபோல் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைப்படி ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன