மாதுளை பழத்தின் உதவியால் இளமையாகவும் கவர்ச்சியாகவும் இருக்க முடியும்.!

Get Exotic Lips Using Pomegranate

மாதுளைப்பழத்தில் ஏகப்பட்ட நற்குணங்கள் இருக்கின்றன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின்கள், தாதுக்கள் என ஏராளமான சத்துக்கள் இருக்கின்றது. இது இக்காலத்தில் அதிகளவில் உட்கொள்ளும் பழமாக பார்க்கப்படுகிறது. இதை உண்பதினால் நமது உடல் ஆரோக்யம் அடைவதைத் தவிர்த்து நமது சருமம் மற்றும் தோற்றமும் வலுவடைகிறது. மாதுளைப்பழத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன அதை பயன்படுத்தி நமது சருமம் மற்றும் நமது தோற்றத்தை இப்படி இளமையாக வைத்துக் கொள்வது என்பதை பார்ப்போம்.

மாதுளைப் பழத்தை உண்ணுவதினாள் நம் முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள் மறைந்து விடும், இதைத் தவிர்த்து முகப்பருக்கள் வராமல் பார்த்துக்கொள்ளும். நாம் மாதுளம்பழத்தை கொண்டு எளிமையான முறையில் செய்யப்படும் பேசியில் கிரீமை பார்ப்போம். சிறிதளவு மாதுளைமற்றும்  அதற்கு இணையாக பிரவுன் சுகரை எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு சிறிதளவு தேன், ஆரஞ்சு போடி இவை அனைத்தையும் ஒன்றாக பேஸ்ட்டை போன்று கலக்கிக் கொண்டு முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் முகத்தில் இருக்கும் முகப்பரு மறைந்துவிடும்.

மேலும் படிக்க – அஜீரண கோளாறு தீர்க்கும் வீட்டு வைத்தியம்

மாதுளை பழம் உங்கள் சருமத்தில் ஏற்படும் முதுமையை தடுத்து மற்றும் முதுமையை தாமத படுத்த உதவும். மாதுளைப் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. இதைத் தவிர்த்து இதை தேன் அல்லது தயிருடன் சேர்த்து பேஸ்ட் செய்து உங்கள் முகத்தில் தடவினாள் நீங்கள் எப்போதும் இளமையாக இருப்பீர்கள்.

உதடுகள் இயற்கையாகவே பளபளப்பாகவும் வண்ணமயமாக இருப்பதற்காக நாம் மாதுளம்பழத்தை பயன்படுத்தலாம் இதற்காக தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் தேனை ஒன்றாக சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும், பிறகு அதில் மாதுளை பழ சாறை ஊற்றி மேலும் சூடு செய்ய வேண்டும். பிறகு அதை எடுத்து ஆற வைத்து பின்பு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உங்கள் உதட்டின் மேல் தடவினாள் சில மாதங்களிலேயே உங்கள் உதடு சிவப்பு நிறமாக மாறிவிடும்.

மேலும் படிக்க – திணை வகைகள் தின்றால் திடகாத்திரம் ஆகலாம், வியாதிகளும் தீரும்.!

தோல் அழற்சி பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை பழத்தினால் செய்யப்படும் எண்ணெயை வாங்கி பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைக்க உதவும். இறந்த செல்களை புதுப்பிக்கும், உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் மற்றும் உங்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைப்பதற்கு மாதுளை பங்கு மிகவும் அவசியம். எனவே முடிந்தவரை மற்ற பழங்கள் வாங்குவதுடன் மாதுளை பழத்தை அதிக அளவில் வாங்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன