அருள் தரும் கணபதியின் ரூபங்கள், தரிசனங்கள்

  • by

கணங்களின் நாயகன் கணபதி, கணபதி ஞானக்கடவுள் ஆவார். முழு முதல் கடவுள் விநாயகப் பெருமான ஆவார். விநாயகர் வழிபாடு இந்தியாவில் தொடங்கி உலகம் முழுவது காணலாம். இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக் கம், இத்தாலி ஆகிய நாடுகளிலும் பிரபலமானதாக உள்ளது. விநாயகர் நாடு முழுதும்  பிரசித்துப் பெற்றுத் திகழ்கின்றார். இந்தியாவில் விநாயகரின் சிறப்பு மிகு வழிபாடுகள் அறிவோம்.  

அடையாற்றில்  ஆதி அந்த விநாயகர்:

சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த  பூஜை செய்து வழிபாடு நடத்தலாம். 


மேலும் படிக்க: கணபதியின் மூலமந்திரம் பயன்படுத்தி எதிலும் ஜொலிக்கலாம்.!

விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் அருள் பாலிக்கின்றார்.. இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் காணப்படுவார்.

விநாயகர்

திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள் ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர். கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பி யின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.

தும்பிக்கையில்லா பிள்ளையார்:

தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில்  நாம் பார்க்கலாம்.. இங்குள்ள பிள்ளையார் இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக  காட்சி தருகின்றார்.

விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம்.

மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கின்ற சிறப்பு நிறைந்து காணப்படுகின்றது. 

கண்ணனைப் போன்று விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில்  நாம் காண முடியும். 


விநாயகர்

தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகின்றார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர்.

கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார்.

மேலும் படிக்க: தீபம் தினமும் ஏற்றி வருவதால் வாழ்வில் திருப்பம் நடக்கும்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகராக கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் காட்சிதருகின்றார்.  முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார். 190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவாக்கப்பட்டார்.. உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி அகலம் 10 அடி, ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்களாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். விநாயகர்களை  தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் இருக்கும். 

புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.

திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.

நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும் தான் இருக்கிறது. அவை சிதம்பரம் தெற்கு வீதியிலும் திருசெங்காட்டுக்குடியும் இரண்டிலும் காணலாம். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.

ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோவிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுவது போன்ற ரூபத்தில் நமக்கு காட்சித் தருகின்றார்..

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.

விநாயகர்

மயில் மீது விநாயகர்அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர் என அழைக்கப்படுகின்றது.

யானை முகத்துடன் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுகின்றார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகின்றார்.

தஞ்சாவூர் சக்கரபாணி கோவி லில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.

விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத்துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

கண் பார்வை கோளாறு உடையவர்கள், சுவாமி மலை முருகன் கோயிலில் உள்ள ‘நேத்ர கணபதி’ எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்குகிறார்கள்.

அரை அடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் தரிசிக் கலாம். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் ‘தான்தோன்றி விநாயகர்’ எனப்படுகிறார்.

சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வழிபாட்டில் பிள்ளையாரையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட் ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊரில் 8 அடி உயரத்தில் பிரமாண்ட நவக்கிரக விநாயகர் சிலை உள்ளது. இப்பிள்ளையாரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும்.

ஈச்சனரி விநாயகருக்கு தினமும் நட்சத்திர அடிப் படையில் அலங்காரம் செய்யப்படுகிறது.

திருவாரூரில் ஆயிரம் ஆண்டு கள் பழமை வாய்ந்த சர்க்கரை பிள்ளையார் உள்ளார். திருமண தடை உள்ளவர்கள் இங்கு 108 தீபம் ஏற்றி வழிபடுவது பரிகாரமாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன