அன்றாடம் சாப்பிட வேண்டிய அத்தியாவசிய பழங்கள்.!

fruits which you should eat daily for good health

ஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு ஆய்வை
மேற்கொண்டது அதில் உலகில் உள்ள அனைத்து பழங்களையும் அவற்றின் கலோரி மற்றும் அதிலுள்ள சத்துக்கள் அடிப்படையில் வரிசைப்படுத்தினார்கள் அதில் முதலிடம் பெற்ற பழம் சிவப்பு கொய்யா பழம் தான். உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சரியான விகிதத்தில் பகிர்ந்தளிக்கும் பங்கு பழவகைகளுக்குத் தான் அதிகம் என்பது நாம் அறிந்ததே!

அதிலும் ஆப்பிளுக்கு நிகராக சத்துக்கள் கொண்டு விலையிலும் மிகக் குறைவாகவும் நாம் அனைவரும் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளும் எடுத்துக் கொள்ளவேண்டிய ஒரு அத்தியாவசியமான அற்புதமான பழவகை கொய்யா. இந்த அற்புதமான கொய்யாப்பழத்தில் இலைகள் ,பட்டை என அனைத்துப் பாகங்களுமே பயன் தரக்கூடியது. நோய்யை ஏற்படுத்தும பாக்டீரியா , வைரஸ்களை அழிக்கும் திறன் பெற்றுள்ள இந்த பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் உள்ளது. கொய்யாவில் இருக்கும் வைட்டமின் ஏ, மற்றும் வைட்டமின் சி குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். வைட்டமின் ஏ இதில் அதிகம் இருப்பதால் பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் இப்பழத்தை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க – பலாப்பழத்தின் பயன்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பொதுவாக இனிப்பான பழங்களை சாப்பிடாமல் தவிர்ப்பார்கள். ஆனால் அதில் விதிவிலக்கு இந்த கொய்யா மட்டும்தான்.மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு தினமும் ஒரு கொய்யாப் பழங்களை உணவிற்கு முன் எடுத்துக் கொள்ளலாம். இதில் நார்ச் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.

மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அதில் இருந்து வெளிவருவதற்கு கொய்யா பழத்தை
எடுத்துக் கொண்டால் அந்த பழக்கத்திலிருந்து அவர்கள் வெளிவர இப்பழம் உதவியாக
இருக்கும். மது அருந்த தூண்டும் எண்ணங்களை தடுக்கும் திறன் உடையது கொய்யவில்
உள்ள வேதிப்பொருள். கொய்யா பழத்தில் இருக்கும் “லைகோபை சின் “என்ற மிக முக்கிய உயிர் வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கவல்லது. கொய்யாப்பழத்தில் விதைகள் அதிகம் இருக்கும் பழத்தில்தான் சத்துகள் அதிகம் இருக்கும். கொய்யாப் பழத்தின் தோலை நீக்கி எடுத்துக் கொள்வதால் எந்த பயனும் இல்லை. அதை தோலுடன் உண்பதே நல்லது.தோலை பளபளப்பாக்க இந்த கொய்யா பழம் பயன்படுவதால் , முதுமை தோற்றம் சீக்கிரம் தெரியாமல் இருக்க வேண்டுமானால் இப்பழத்தை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.இப்பழத்தை சாப்பிடுவதற்க்கு வயது வரம்பு கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
இதன் பயன் தெரிந்து தான் இப்பழத்தை வெளிநாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்கின்றனர்.

அடுத்ததாக கொய்யா இலையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம். வைட்டமின் b6, அயர்ன் சோடியம் ,மெக்னீசியம் பொட்டாசியம்,ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கொண்ட ஒரு அற்புத இலைதான் இது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே அதிகரிக்கும் தன்மை இந்த இலைக்கு உள்ளது. இலையை ஐந்து முதல் பத்து இலைகளை நீரிலிட்டு காய்ச்சி குடிப்பதன் மூலம் தைராய்டு பிரச்சினை சரி செய்ய பயன்படுகிறது.காய்ச்சல் இருப்பவர்கள் கூட இந்த இலையை கசாயம் போட்டு குடித்தால் விரைவில் குணமாகும். காலையில் வெறும் வயிற்றில் இந்த இலைகளை சாப்பிட்டால் அதன் பலன் இன்னும் அதிகமாக நம்மை வந்தடையும். இந்த கொய்யா இலை தேநீர் பெண்களின் முடி உதிர்வு பிரச்சினைக்கு ஒரு தீர்வாக உள்ளது.தலை குளித்து முடித்த பின் இலையை கொதிக்க வைத்த நீரினை கடைசியாக உற்றி கொள்ள வேண்டும். அதன் பின் ஷாம்பு, வேறு தண்ணீர் கொண்டு அலச கூடாது.

கொய்யா இலையை காயவைத்து பொடி செய்து தினமும் இருவேளை தேனீர் வடிவில்
குடிப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இது பயன்படுகிறது.

மேலும் படிக்க – உங்கள் உடலை ரீசார்ஜ் செய்து ஆற்றலை அதிகரிப்பது எப்படி..!


யாரெல்லாம் சாப்பிடக்கூடாது


ஆஸ்துமா அதிக இருமல் இருப்பவர்கள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது. மேலும் அதிக
மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிட்டால் மருந்தின் தன்மையை முறித்து விடும் இந்த கொய்யாப்பழம்.வாதம் மற்றும் பித்த நோய் உள்ளவர்களும் கொய்யாப்பழத்தை அளவுடன் எடுத்துக் கொள்ளலாம். இவ்வளவு அற்புதங்கள் நிறைந்த கொய்யாப் பழத்தை சாப்பிடுவதற்கு முன்போ அல்லது
சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின் சாப்பிட்டால் தான் அதன் முழு சத்துக்களும்
நம்மை வந்தடையும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன