தோழியே வாழ்க்கை துணைவியானால் தொடுவானம் தொட்டுச் செல்லும்..!

friend-become-a-wife-means-what-will-be-life

புரிதலுக்கு முன்னுதாரமாக இருப்பவர்கள் நண்பர்கள்தான். நாம் எப்போது அவரிடம் பேசினாலும் என்ன பேசினாலும் அதன் உள் அர்த்தத்தை அறியாமல் உங்கள் உணர்வை மதித்து அதை அப்படியே ஏற்றுக் கொள்பவர்கள்தான் நண்பர்கள். உங்களுக்கு என கட்டுப்பாடுகளை விதிக்காமல் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே ஏற்றுக்கொண்டு உங்கள் சவுகரியத்தைப் உணர்ந்து உங்கள் வாழ்க்கைத் துணைக்கு மேலாக உங்கள் நலனை பற்றி எண்ணம் அவர்களே உயிர் நண்பர்கள். எனவே அப்படிப்பட்டவர்கள் உங்கள் மனைவி அல்லது கணவராகவும் வந்தாள் உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்ட சந்தோஷத்தை அடையும் என்பது உங்களுக்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தோழி வாழ்க்கைத் துணையானால்

ஒருவரைப் பற்றி முழுமையாக அறிந்திருப்பவர் அவர்களின் நண்பர்களாகவே இருப்பார்கள்,  அப்படி நம்மை முழுமையாக புரிந்த தோழி நமது வாழ்க்கைத் துணையானால் உன் வாழ்க்கையில் எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. உங்களுக்கு எது பிடிக்கும், பிடிக்காது உங்கள் உணர்வு ஒவ்வொரு சூழ்நிலையிலும் எதனால் மாறுகிறது, உங்களின் வாழ்க்கையின் இலட்சியம் நீங்கள் மற்றவர்களை எப்படி பார்க்கிறீர்கள், எல்லோருக்கும் மத்தியில் உங்களை எப்படி மதிப்பார்கள் என்ற எல்லா விஷயங்களையும் பற்றி நீங்கள் தெரிந்து இருப்பீர்கள். இதனால் உங்களுக்கு பிரச்சனை என்பது உண்டாகாது. அதற்கும் மேலாக உங்களுக்குள் பிரச்சினை என்பது ஒன்று உருவானால் அது சில வினாடிகளிலேயே தகர்ந்து போகும் அளவிற்கு உங்கள் நட்பு ஆழமாக இருக்கும்.

மேலும் படிக்க – ஆண் பெண் உறவு மகிழ்ச்சியாக இருப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை.!

இனிமையான நேரங்கள்

உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நாட்களை உங்கள் தோழிகளே அளித்திருப்பார்கள். இதனால் கொண்டாட்டங்களின் போது உங்கள் எதிர்பார்ப்பும், உங்கள் மனநிலையும் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். அதுவே நீங்கள் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து இருந்தால் அவர்களை ராணியைப் போல் தன் கணவர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பார்கள், இதனால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் அவர்களை சந்தோஷப்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும். அதுவே தோழியை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொண்டால் நீங்கள் உங்களுக்கான வாழ்க்கையை வாழலாம், அவருக்கான வாழ்க்கையையும் புரிந்து கொள்ளலாம்.

பெண்கள், தோழியாக சிறந்தவர்களாக இருப்பார்கள். ஒரு குடும்பத்தில் இணைந்தால் பொறுப்புகள் அதிகரிக்கும். அப்போது அவர்களின் தனித் தன்மை குறைந்து சராசரி மனைவியைப் போல் நடந்து கொள்வார்கள். அதுவே நண்பரை திருமணம் செய்து கொண்டால் அப்படி நடந்து கொள்ளாமல் அவரை நண்பராகவும், காதலனாகவும் மற்றும் கணவராகவும் பார்ப்பார். இதனால் எந்த ஒரு செயலும் உங்களை பாதிக்காதவாறு மிகத் தெளிவாக இருப்பார்.

மேலும் படிக்க – கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர புரிதலுக்கு இதை செய்யுங்க பாஸ்

குடும்பங்களைப் பற்றி அறிந்து இருப்பார்

நீங்கள் புதிதாக திருமணம் செய்து கொண்டீர்கள் என்றால் முன்பின் தெரியாத ஒரு பெண் அல்லது உங்கள் குடும்பத்தை ஓரளவுக்கு அறிந்த ஒரு பெண் உங்கள் குடும்பத்தில் இணைந்தால், அவரால் மிக எளிதில் உங்கள் உறவினர்கள் அனைவரிடமும் பழகி ஒன்றிணைய முடியாது. அதுவே உங்கள் தோழியாக இருந்தாள் உங்கள் குடும்பத்தினரைப் பற்றி நன்கு அறிந்திருப்பர். இதனால் இருவருக்கும் இடையே ஒரு நட்புறவு இருக்கும் எனவே அவர்களுக்குள் சண்டை என்பது உருவாகாது.

குறும்புத்தனம் அதிகரிக்கும்

நண்பர்கள் எப்போதும் மற்றவர்களை கிண்டலும், கேலியும் செய்வது அதிகமாக இருக்கும், இதனால் அவர்களுக்குள் மன கஷ்டம் என்பது ஒன்று இருக்காது. சாதாரண துணையை நீங்கள் ஏதேனும் வார்த்தைகளைக் கொண்டு கிண்டல் செய்தால் உடனே அவர்கள் புண்பட்டு நீங்கள் ஆழ்மனதில் இருந்து இந்த வார்த்தையை சொன்னீர்கள் என்று எண்ண தொடங்குவார். அதுவே தோழியாக இருந்தால் நீங்கள் சொன்னதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு மேலும் பதிலுக்கும் உங்களை கிண்டல் செய்வார்கள், இது இறுதியில் விளையாட்டாகவே சென்றடையும்.

மேலும் படிக்க – இதுபோன்ற ஆண்களைதான் பெண்கள் திருமணம் செய்து கொள்வார்கள்.!

உங்கள் இருவரின் எண்ணங்கள் ஒன்றாக இருக்கும், அதேபோல் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொருட்களின் விலை, தரம் என அனைத்தும் அறிந்து அதற்கேற்ப முடிவெடுப்பீர்கள். நண்பர்களாக இருக்கும் போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதையே பின்பற்றுவதால் உங்கள் உறவுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது

புதிதாக திருமணத்தில் இணைந்த கணவன் அல்லது மனைவி தாங்களில் யார் சிறந்தவர்கள் என்று காண்பிப்பதற்காக சில செயல்களை செய்து அதன் மூலமாக அவர்களுக்குள் பிரச்சினை ஏற்படும். அதுவே தோழியாகவும் அல்லது நண்பராக இருந்தால் இது போன்று நம் காண்பிக்க தேவையில்லை. அப்படியே காண்பித்தால் ஓவரா சீன் போடாத என்ற வார்த்தையை கொண்டு உங்களை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன