கர்நாடக இசையைப் பற்றி அதிகமாக கேட்கப்பட்ட கேள்விகள்..!

  • by
frequently asked question about carnatic music

இசையில் மிகவும் அற்புதமான இசையாக பார்க்கப்படுவது கர்நாடக இசை, இதை கற்றுக் கொள்வதற்காக ஏராளமான மாணவர்கள் வரிசையில் காத்து இருக்கிறார்கள். ஆனால் இதை முழுமையாக கற்க வேண்டுமென்றால் நாம் சிறந்த ஆசிரியர்களின் வகுப்பை பின் தொடர வேண்டும். அப்படி யார் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் கர்நாடக இசை சம்பந்தமான ஏராளமான கேள்விகளில் சிறந்த கேள்வி பதிவுகளை இங்கே காணலாம்.

கர்நாடக இசையை கற்பதற்கான காலம்

இசையில் ஆர்வமுள்ள அனைவரும் கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. ஒருவர் சராசரியாக கர்நாடக இசையை எத்தனை நாட்களில் கற்றுக்கொள்ள முடியும் என்பதுதான். கர்நாடக இசையை பாட ஆரம்பித்தவர்கள் கிட்டத்தட்ட 109 வகுப்புகள் வரை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே ஏற்கனவே கர்நாடக இசையைப் பற்றி தெரிந்தவர்கள் அல்லது பயின்றவர்கள் இரண்டே வருடத்தில் அதை முழுமையாக கற்றுக் கொள்ளலாம்.

சிறந்த கர்நாடக இசை பாடகர்

சினிமாவில் ஏ ஆர் ரகுமான் மற்றும் இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் ஏராளமான கர்நாடக இசை கொண்ட பாடல்களை உருவாக்கி உள்ளார்கள். அதை தவிர்த்து கர்நாடக இசையை சில சினிமாப் பாடகர்களும் பாடி மக்கள் மனதில் சிறந்த பாடகர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் உன்னிகிருஷ்ணன், சுதா ரகுநாதன், முரளிகிருஷ்ணன், நித்யஸ்ரீ மகாதேவன், கே ஜே யேசுதாஸ், அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்.

வீட்டில் இருந்தபடி கர்நாடக இசையை எப்படி கற்பது 

கர்நாடக இசைக்காண ஏராளமான இணையதளங்கள் வகுப்புகள் இருக்கின்றன. இதன் மூலமாக நீங்கள் சிறந்த இசைக் கலைஞர்களுடைய மேற்பார்வையில் கர்நாடக இசையை முழுமையாக கற்கலாம். அவர்கள் சாபசா போன்றவற்றில் துவங்கி கர்நாடக இசையை முழுமையாக நமக்குக் கற்றுக் கொடுப்பார்கள். ஒரு சில செயலிகளில் கர்நாடக இசையை கற்பதற்கான நேரடி வகுப்புகளும் ஏற்பாடு செய்துள்ளார்கள். எனவே அதை கண்டறிந்து உங்கள் இசைத் திறமையை மேம்படுத்துங்கள்.

மேலும் படிக்க – கர்நாடக இசையில் இருக்கும் ராகங்கள்..!

என்னுடைய குரல் வளத்தை எப்படி மேம்படுத்துவது

கர்நாடக இசையில் மொத்தம் மூன்று விதமான ஒலி எழுப்பும் தன்மை இருக்கிறது. அதில் முதலில் இருப்பது கிழ்த்தாய் வரிசை, இதில் நாம் மிகவும் மெலிந்து குரலில் பாட வேண்டும். இரண்டாவது வகை இடைத்தாய் வரிசை, இது நம்முடைய குரல் வளத்தை சாதாரணமாக வைத்து அதாவது நடுநிலையில் பாடுவது. மூன்றாவது இருப்பது உயர் தாய் வரிசை, இதில் நம்முடைய குரலில் ஒளியை உயர்த்தி எந்த ஒரு இரைச்சலும் இல்லாமல் பாடுவது. இதை தினமும் பாடுவதன் நீங்கள் கர்நாடக இசையை எளிதில் கற்றுக்கொள்ள முடியும்.

இதைத் தவிர்த்து ஏராளமான கேள்விகள் கர்நாடக இசையைப் பற்றி தினம்தினம் மக்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள், அது அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக இணையத்தளத்தில் சிறந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய வகுப்பை பின் தொடர்ந்து உங்கள் அனைவரின் கேள்விகளையும் போக்கிக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன