தமிழர்களால் மறக்கப்பட்ட பாரம்பரிய மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட உணவுகள்..!

Forgotten Traditional Foods And Its Health Benefits

அக்காலத்தில் தமிழர்கள், உணவே மருந்து, மருந்தே உணவு என்று வாழ்ந்து வந்தார்கள். அதிகாலை எழுவது முதல் இரவு உறங்குவது வரை ஆரோக்கியமான உணவுகளை உண்டு உடலை மிக வலிமையாக வைத்திருந்தார்கள். இதனால் அவர்களுக்கு புற்று நோய், ரத்தக்கொதிப்பு, இளம் வயதில் மரணம், இதய நோய், பக்கவாதம் போன்ற வியாதிகள் அதிகளவில் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். திடீரென உருவாகும் காய்ச்சல், மஞ்சள் காமாலை, அம்மை போன்ற நோய்களினால் அவ்வப்போது மட்டுமே பாதித்தார்கள், அதையும் இயற்கை மருத்துவங்கள் மற்றும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மூலமாக தங்களை பாதுகாத்து மிக எளிமையாக வாழ்ந்து வந்தார்கள். அத்தகய வலிமை மிகுந்த உணவுகளை நாம் இன்று கடைப்பிடிக்க மறந்து விட்டோம் என்பதுதான் வலிகள் மிகுந்த உண்மையாகும்.

தமிழர் பாரம்பரிய உணவுகள்

இன்று நாம் அதிகளவில் பயன்படுத்தி வரும் வெண்மை அரிசி நம் பாரம்பரிய உணவு அல்ல, அக்காலத்தில் விவசாய பாதிப்பினால் மக்கள் உணவு இல்லாமல் பஞ்சத்தில் இருந்தார்கள். அச்சமயங்களில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளை அரிசியை நமது பஞ்சத்தைப் போக்குவதற்காக சாப்பிட்டு மற்றும் அதையே விலை மண்களில் விதைத்தார்கள். பிறகு காலப்போக்கில் நம் பாரம்பரிய உணவுகளை மறந்து இன்று வரை மெழுகுகூற்றப்பட்ட வெள்ளை அரிசியை சாப்பிட்டு வருகிறோம். இதில் மேல் இருக்கும் தோல் மற்றும் தவுடுகளை அகற்றி சத்துக்கள் குறைவான அரிசியை உண்கிறோம். ஆனால் நாம் பாரம்பரிய முறையில் எந்த சத்துக்களும் அகற்றப்படாத சிவப்பரிசியைதான் நாம் சமைத்து சாப்பிட்டு வந்தோம். இதில் சாதாரண வெள்ளை அரிசியை ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிக சக்திகள் கொண்டவை.

மேலும் படிக்க – உலர்திராட்சையில் உள்ள சத்துக்கள்

வலுசேர்க்கும் தமிழர் உணவு 

நாம் அக்காலத்தில் அரிசிக்கு பதிலாக சிவப்பு அரிசி மட்டுமல்லாமல் கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, பனிவரகு, கருவரகு போன்ற சிறுதானிய உணவுகளை அதிகமாக உட்கொண்டு வந்தோம்.

அக்கால மக்கள் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதாவது ஐந்திணை என்றழைக்கப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற இடங்களில் வாழும் மக்கள் அவர்கள் வாழ்க்கைக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு விதமான பாரம்பரிய உணவுகளை அருந்து வந்தார்கள். ஆனால் இப்போது அரிசி என்ற ஒரு உணவை தான் அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.

விவசாயிகள் விவசாயத்திற்கு செல்வதற்குமுன் அதிகாலையில் கம்பங்கூழ் குடித்து விட்டு காய்கறிகளை வதக்கி சாப்பிட்டு செல்வார்கள். மதிய வேளைகளில் கொழுப்புகள் மற்றும் அவர்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ள மாமிச உணவுகளை சாப்பிட்டு வந்தார்கள். அதில் ஆட்டு இறைச்சி மீன் நாட்டுக்கோழி போன்றவைகள் இருந்தது.

அதுவே சைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் கம்பு சாதம், எள்ளு சாதம், கேழ்வரகுக் கஞ்சி போன்றவற்றை சாப்பிட்டு அதனுடன் பாசிப்பருப்பு, தட்டை பருப்பு போன்றவைகளை சேர்த்து ருசியாக சாப்பிட்டு வந்தார்கள். பிறகு முக்கனிகள் என்று அழைக்கப்படும் மா, பலா, வாழை ஏதாவது ஒன்றை உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானவையை எடுத்து சாப்பிட்டார்கள்.

மேலும் படிக்க – மகத்துவம் நிறைந்த மருத்துவ வெட்டி வேர்

இரவு உணவுகள்

இரவில் சிறுதானியங்களை வைத்து செய்யப்பட்ட கம்பு தோசை, கேழ்வரகு தோசை, சோள இட்லி, கேழ்வரகு பணியாரங்கள் போன்றவைகளை சாப்பிட்டார்கள் இதனுடன் தேங்காய், மிளகாய், இஞ்சி, பூண்டு இவைகளினால் செய்யப்பட்ட சட்னியையும் சேர்த்து ருசியாக உண்டார்கள்.

இனிப்புகளுக்காக நாம் இன்று பயன்படுத்திவரும் வெள்ளை சர்க்கரையை அவர்கள் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக ஆரோக்கியமான கரும்பு சாறில் இருந்து எடுக்கப்பட்ட ரசாயனம் கலக்காத இயற்கை வெள்ளத்தை, இனிப்பாக பயன்படுத்தினார்கள். அதேபோல் பனைமரத்தில் இருந்து எடுக்கப்பட்ட கருப்பட்டியையும் நாம் பலகாரங்களில் சேர்த்து வந்தோம்.

மேலும் படிக்க – அஜீரண கோளாறு தீர்க்கும் வீட்டு வைத்தியம்

மறைக்கப்பட்ட உணவுகள்

அக்கால உணவு முறைகளில் நாம் சிறுதானியங்களுக்கு மற்றும் மஞ்சள், மிளகு சீரகம் போன்றவையை உணவுப் பொருட்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் தந்து வந்தோம். ஆனால் இன்றும் தவிர்க்க முடியாத காரணங்களினால் இது போன்ற உணவுகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். இதற்கு மாற்று உணவாக ஏதேனும் வந்தால் நம்முடைய அடுத்த சந்ததியினருக்கும் இப்போது நாம் பயன்படுத்திவரும் குறைந்த ஆரோக்கியமான உணவுகளை மறந்துவிட்டு, மேலை நாட்டு முதலாளிகள் எந்த உணவு சிறப்பு என்று சொல்வார்களோ அதையேதான் வாங்கி கொள்வோம்.

நாம் ஏதாவது சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றோம் என்றால் அங்கே முதலில் நம் கண் முன் தோன்றுவது வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமற்ற உணவுகளாகத்தான் இருக்கும். அங்கு நம் தமிழக பாரம்பரிய உணவுகளான கம்பு, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி போன்றவைகள் எதாவது ஒரு மூலையில் அதுவும் சிறு சிறு பாக்கெட்டுகளாக இருக்கும். எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக நம் தமிழக பாரம்பரிய உணவுகளை முடிந்தவரை வாங்கி சமைத்திடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன