முக அழகிற்கு ஆளி விதை ஃபேஸ் பேக்..!

  • by
for bright skin use Flax Seed Face Pack

அழகு என்பது நம் தோற்றத்தில் உள்ளது என்பதை தவறுதலாக எண்ணிக்கொண்டு ஒரு சில பெண்கள் கவர்ச்சிக்கு முன்னுரிமை தருகிறார்கள். உண்மையில் அழகு என்பது இயற்கையாக நாம் பெற்றது. இதை நாம் இயற்கை வழியில் தான் காக்க வேண்டும். இரசாயனப் பொருட்கள் மற்றும் வேதிப் பொருட்களைத் தவிர்த்து இயற்கை அளித்த ஆளிவிதையின் மூலமாக நமது சருமத்தை எப்படி மேம்படுத்துவது என்பதை இந்த பதிவில் காணலாம்.

ஆளி விதை

ஆளி செடிகளிலிருந்து வரக்கூடியது தான் இந்த ஆளி விதை, இதை சாப்பிடுவதால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. இதை தவிர்த்து நமது சரும ஆரோக்கியத்திற்கு இந்த ஆளி விதை பெரிதாக உதவுகிறது. இதைக்கொண்டு நம் சருமத்தில் போடப்படும் ஃபேஸ் பேக் நம் சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுவாக இருக்கிறது.

மேலும் படிக்க – இயற்கை எண்ணெய்யினால் நம் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்.!

முக சுருக்கத்தைப் போக்கும் ஃபேஸ் மாஸ்க்

இளம் வயதிலேயே உங்கள் சருமம் முதுமையாக காட்சியளிக்கும், இதைத் தடுப்பதற்கு ஏகப்பட்ட கிரீம்களை பயன்படுத்தி எந்த புரோஜனம் இல்லையா.? அப்போது நீங்கள் பயன்படுத்த வேண்டியது ஆளி விதை ஃபேஸ் மாஸ்க். ஆளி விதையை நன்கு அரைத்து கொண்டு அதனுள் முல்தானிமட்டி மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து முகம் முழுக்க ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும். இது வாரத்திற்கு இரண்டு முறை போட்டு 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் உங்கள் முகம் பளபளப்பாகவும் மற்றும் என்றும் இளமையாக இருக்க முடியும்.

முகப்பருக்களுக்கு தீர்வாகும்

ஆளி விதையை தண்ணீரில் ஊற வைத்து பின்பு அடுத்த நாள் அதை நன்கு அரைத்துக் கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து முகத்தில் பூச வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து உங்கள் முகத்தை கழுவினால் முக பருக்கள் படிப்படியாக குறையும்.

என்றும் இளமைக்கு

நீங்கள் என்றும் இளமையாக இருக்க வேண்டுமென்றால் உங்கள் சருமம் இளமையாக இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆளி விதை, கிராம்புத்தூள், யோகர்ட் இவை மூன்றையும் ஒன்றாக குழைத்து அதை முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் அனைத்தையும் அகன்று உங்களை எப்போதும் இளமையாக வைத்துக்கொள்ளும்.

மேலும் படிக்க – சைனிங்கான கூந்தல் பராமரிக்க சாதுரிமாக இருங்க

மினுக்கும் சருமம்

உங்கள் சருமம் நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறத. மீண்டும் உங்கள் சருமம் பொலிவு பெற்று மினுமினுக்க வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் ஆளிவிதையை தண்ணீரில் ஊறவைத்து குழைத்துக்கொண்டு அதிலும் ஒரு முட்டையை உடைத்து போட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு அதை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலமாக நீங்கள் மின்னும் சருமத்தை பெறலாம்.

ஆளி விதையை உணவில் நம் சேர்ப்பதனால் எவ்வளவு ஆரோக்கியம் கிடைக்கிறதோ, அதே அளவு நமது சருமத்திற்கும் கிடைக்கிறது. எனவே அதன் பயனை நன்கு அறிந்து மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தி உங்கள் சருமத்தை அழகாக்குங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன