ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள்..!

Foods to eat to increase sperm count and fertility in men

சமீப காலங்களாமாகவே குழந்தையின்மைப் பிரச்சனை பல தம்பதியினருக்கு வருகிறது. இது அனைத்திற்கும் காரணம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மற்றும் நம் வாழ்க்கை முறைகளும் தான். இதைத்தவிர்த்து ஆண்களுக்கு இருக்கும் குடி மற்றும் புகையிலை பழக்கங்கள் தங்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைத்துவிடுகிறது. எனவே இது போன்ற பழக்கங்களை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதினால் உங்களின் விந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

ஆண்களின் பழக்கவழக்கங்கள்

ஒரு ஆண் படிக்கும் போதிலிருந்தே தீய பழக்கத்திற்க்குள் நுழைகிறான், இதனால் அவனின் விந்தணுக்களின் ஆரோக்கியம் ஆரம்பத்திலேயே குறைந்துவிடுகிறது. இதைத் தொடர்ந்து அவன் வேலைக்கு செல்லும் பொழுது தன் உடலின் உஷ்ணத்தை கட்டுப்படுத்தாமல் அதிகரித்து விடுகிறான். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், அதிகமாக வாகனத்தில் பயணம் செய்பவர்கள், உஷ்ணம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வேலை செய்யும் ஆண்களின் விந்தணுக்கள், மிக விரைவில் குறைகிறது. இதை தடுப்பதற்கு அவர்கள் அவ்வப்போது தங்கள் உடல் சூட்டை தளர்க்கும் உணவுகளை உண்ண வேண்டும்.

மேலும் படிக்க – காதலர்களிடம் இருக்க வேண்டிய பொறுப்புணர்வு..!

அதிக விந்தணுக்களுக்கு மலிவான உணவுகள்

விந்தனுக்கள் உற்பத்தியனால் மட்டும் போதாது, அது ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அதற்கு நாம் டார்க் சாக்லெட்டை சாப்பிட வேண்டும். இதிலிருக்கும் அமினோ அமிலங்கள் உங்கள் உடலின் ஆற்றலை அதிகரித்து விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க உதவுகிறது. அதேபோல் வாழைப்பழத்திலும் ப்ரோமெலைன் என்ற வேதிப்பொருள் உள்ளதால் உங்களின் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை ஆண்கள் சாப்பிடுவது நல்லது.

வால்நட் உணவில் நல்ல கொழுப்புகள் மற்றும் ஒமேகா 3 இருப்பதினால் உங்களின் விந்தணுக்களை இது அதிகரிக்கிறது. அதேபோல் நாம் அன்றாட உணவில் பயன்படுத்துவதன் மூலம் உங்களின் பாலுணர்வை அதிகரிக்கிறது இதில் அல்லிசின் வேதிப்பொருள் இருப்பதினால் உங்கள் ரத்தத்தின் வேகத்தை அதிகரித்து விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

பெர்ரி மற்றும் எலுமிச்சை பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. அவைகள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலில் ஏற்படும் நோய்களை குறைத்து விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. அவகோடா, இதில் வைட்டமின் பி6, ஃபோலிக் அமிலங்கள் அதிகமாக இருப்பதினால் உங்கள் விந்தனுக்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

மேலும் படிக்க – ஐ லவ் யூ என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கைக்கு உதவும்..!

ஒரு சிலரின் விந்துக்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் சில பிரச்சினைகளில் மூலமாக அது அழிந்துவிடும். இதைத் தடுப்பதற்கு நாம் மாதுளை பழத்தை அதிகமாக உட்கொள்ள லாம். இது விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு அதன் ஆரோக்கியத்தையும் தருகிறது.

மாமிச உணவுகள்

விந்து அணுக்களின் உற்பத்தியை அதிகமாக அதிகரிக்கும் மாமிச உணவுகளில் முதலில் இருப்பது மாட்டிறைச்சிதான். மாட்டிறைச்சியில் பாலுணர்வைத் தூண்டும் அமிலங்களும் விந்தணுக்களை அதிகரிக்கும் சக்திகளும் அதிகமாக கொண்டுள்ளது. இதனால்தான் மேலைநாடுகளில் இதுபோல் உணவுகளை கொண்டு இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

மீன் உணவு மற்றும் கடல் சிப்பியில் அத்தியாவசிய அமிலங்கள் இருக்கின்றன. இதை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவதன் மூலம் உங்களின் விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது.

மேலும் படிக்க – கணவன்மனைவி நடுவில் காட்டாற்று வெள்ளமாக டிக்டாக்

எனவே தங்கள் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இதுபோன்ற உணவுகளை உட்கொள்ளவேண்டும். இதனுடன் சேர்ந்து அவ்வபோது சிறு சிறு உடற்பயிற்சிகளும் செய்வதன்மூலம் உங்கள் உடலில் இருக்கும் கெட்ட நீர் வெளியேறி உடலை சுறுசுறுப்பாக வைக்கும். இதனால் காலப்போக்கில் விந்தணுக்களின் உற்பத்தி அதிகரித்து உங்களுக்கென ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன