கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள்..!

Foods to eat to get great hair growth

நம்மில் பல பேரின் அழகை அதிகரிக்க உதவு வது நம்முடைய கூந்தல்தான். ஆனால் இதை பராமரிக்கிறோம் என்ற பெயரில் நாம் இதைப் பெரிதாக பாதிப்படைய வழிவகுக்குறேம். எனவே இதை தடுப்பதற்கு நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுப்பது மிக அவசியம். அதை தவிர்த்து கூந்தலுக்கான ஏதேதோ கிரீம்களும், எண்ணெய்களும் தேய்த்து அதை அழிப்பதை தவிர்க்க வேண்டும்.

ப்ரோட்டின் உணவுகள்

நம் கூந்தலுக்கு மிக முக்கியமான ஆரோக்கிய உணவு எதுவென்றால் அது புரோட்டின். எனவே புரோட்டின் அதிகமாக உள்ள உணவான முட்டையை நாம் அதிகமாக உட்கொள்ள வேண்டும். இதனால் நமது கூந்தல் வளர்ச்சி அதிகரித்து ஆரோக்கியமாக இருக்கும். அதை தவிர்த்து முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து உங்கள் கூந்தல் முழுக்கத் தேய்த்து ஊறவைத்து குளிப்பதன் மூலம் அதற்குத் தேவையான புரோட்டின் வெளிப்புறத்தில் இருந்தும் கிடைத்துவிடும்.

கொழுப்புகள் நிறைந்துள்ள மீன்கள் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கூந்தலுக்கு தேவையான கொழுப்புக்களும் கிடைக்கின்றன. ஆனால் மீன்களை முடிந்த வரை வேக வைத்து சாப்பிடுவது நல்லது.

கொழுப்புகள் அதிகமாக உள்ள மாமிசங்களை யும் பயன்படுத்தலாம். நீங்கள் தயாரிக்கும் பல கூந்தல் சாதனப் பொருள்களில் இது போன்ற கொழுப்புகளை பயன்படுத்துகிறார்கள். எனவே இது போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டு உங்கள் கூந்தல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க – தமிழ் சினிமா பிரபலங்களின் ஆரோக்கியம் மற்றும் சருமத்தை பாதுகாக்கும் உணவுகள்..!

பெரி பழங்கள்

பெர்ரி பழங்களில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் அளிக்கும் தன்மை கொண்டது. எனவே பெர்ரி பழங்களை உட்கொள்வதினாள் நம் தலைக்கு தேவையான இரும்புச்சத்து, புரதச்சத்து என அனைத்தையும் உள்வாங்கி நம் கூந்தளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

கீரை உணவுகள்

எல்லா கீரை உணவுகளிலும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து போன்ற அனைத்தும் இருக்கிறது. எனவே நாம் இதை சாப்பிடுவதன் மூலம் நமது உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் நமது கூந்தல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. எனவே கூந்தல் உதிர்தல் போன்ற பிரச்சினைகளிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது. கீரை உணவை அதிகமாக உட்கொண்டு உங்கள் கூந்தலை அதிகமாக வளருங்கள்.

மேலும் படிக்க – தேவையற்ற ரோமங்கள் நீக்க இதை செய்யுங்க

அவகோடா மற்றும் சக்கரை வள்ளி கிழங்கு

நம் கூந்தலுக்கு தேவையான சக்திகளை உருவாக்குவதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பங்கு அதிகமாக உள்ளது. எனவே இதை உட்கொள்வதினால் உங்கள் கூந்தல் நீளமாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும் அதே போல் வைட்டமின் ஈ மற்றும் சீ இருப்பதினால் உங்கள் கூந்தலுக்கு தேவையான கொழுப்புகளை தருகிறது. அவகோடவை சாப்பிடுவதனால் உங்கள் கூந்தல் வளர்ச்சியை 35 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியில் நிரூபணமாகியுள்ளது.

பருப்பு மற்றும் விதைகள்

விதைகளில் நம் கூந்தலுக்கு தேவையான கொழுப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. எனவே சூரியகாந்தி விதை, பூசணி விதை, சியா விதை போன்றவர்களில் ஒமேகா த்ரீ,  ஃபேலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. அதேபோல் உலர் திராட்சை மற்றும் பருப்பு வகைகள் உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க – இளஞ்சிவப்பு இதழுக்கு இது அவசியமுங்க

இதில் குறிப்பிட்டுள்ள அனைத்து உணவுகளும் உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரித்தாலும், இதில் இருக்கும் கொழுப்புகளினால் உங்கள் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த உணவுகளை ஒரேடியாக மொத்தமாக சாப்பிடுவதை தவிர்த்து. அவ்வப்போது சிறிது சிறிதாக சாப்பிடுவதே நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன