கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருப்பதற்கு நாம் என்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்..!

  • by
foods to eat to fight corona virus

கொரோனா வைரஸ் மட்டுமல்லாமல் நம் உடலை எந்த ஒரு நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருப்பதற்காக நாம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களே நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போதுமானது. எனவே அந்த உணவுகள் என்ன, அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

ஆரஞ்சு பழம்

கமலா பழம் அல்லது ஆரஞ்சுப் பழம் போன்றவைகளில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்களை எந்த ஒரு தொற்றுக்களும் அண்டாமல் பார்த்துக் கொள்ளும். அதைத் தவிர உங்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்யும் பண்பு ஆரஞ்சு பழத்திற்கு உண்டு.

மேலும் படிக்க – கொரானாவை தடுக்க சமூக இடைவெளி அவசியம்

பூண்டு

தினமும் காலையில் இரண்டு பூண்டுகளை பச்சையாக மென்று சாப்பிடுவதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் அதில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக இருப்பதினால் பூண்டில் எதிர்ப்புத் தன்மை அதிகம். எனவே இதை உணவில் சேர்ப்பதன் மூலமாக சுவாசப் பிரச்சினை, மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்ற அனைத்தையும் தீர்க்கும்.

இஞ்சி

இஞ்சியில் இருக்கும் பண்பு நம்முடைய உடல் பிரச்சனைகளை குறைக்கிறது. இதை உணவில் சேர்ப்பதன் மூலமாக வயிற்றில் உண்டாகும் பிரச்சனைகள், தொண்டை பிரச்சனைகள் மற்றும் வயிற்று எரிச்சல் போன்ற அனைத்தையும் தீர்க்கிறது. இதை தேநீரில் கலந்து குடிப்பதன் மூலமாக நம்முடைய சுவாசப் பிரச்சனை மற்றும் ஜலதோஷம் பிரச்சினை தீர்க்கிறது. இதில் இருக்கும் நோய் எதிர்ப்பு பண்பு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.

கீரை உணவுகள்

கீரையில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம் போன்ற பலவிதமான சத்துக்கள் இருக்கின்றன. எனவே இதை நம் உணவில் சேர்ப்பதன் மூலமாக நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பல ஆய்வுகளின் முடிவில் கீரையை உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு ஏற்படும் சளி, ஜலதோஷம் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

சக்கரவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டீன் அதிகமாக இருக்கிறது. அதேபோல் வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் இதை உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. சூரிய ஒளியில் இருந்து உண்டாகும் கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும நோய்களை தடுக்கும் பண்பு இந்த சக்கரவள்ளி கிழங்கிற்க்கு உண்டு. எனவே இதை சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு நல்ல பயன் கிடைக்கும்.

மேலும் படிக்க – தலைவலி வருவதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்!!!

வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் சி உணவுகளான ப்ரோக்கோலி, எலுமிச்சை, மீன் போன்றவைகளை எடுத்து உங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இதன் மூலமாக கொரோனா வைரஸ் மட்டுமல்லாமல் எந்த ஒரு வைரஸ் தொற்றுகளும் உங்களை பெரிதாக பாதிக்காது.

இதைத் தவிர்த்து டார்க் சாக்லேட், மஞ்சள், ப்ளூபெர்ரி, க்ரீன் டீ போன்றவைகளும் உங்கள் உடலில் எதிர்ப்பு பண்பை அதிகரிக்கும். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு சக்திகள் கொண்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன