சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உணவுகள்..!

  • by
foods to control diabetes

இந்தியாவில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய இன்சுலின் அளவு குறையும் போது இவர்களுக்கு நீரிழிவு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இவர்கள் தவறான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இவர்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து அது இருதய பிரச்சினையாக மாறுவதற்கான வழிகள் உண்டாகிறது. எனவே நம் உடலில் உள்ள சக்கரை அளவை எப்போதும் கட்டுப்பாடாக வைத்துக் கொள்வதற்கு ஒருசில உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கோதுமை

ஒரு சிலர் தங்கள் சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறேம் என்ற பெயரில் மைதாவால் செய்யப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் அதை முற்றிலுமாக தவிர்த்து, கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சர்க்கரை தன்மை குறைவாக இருப்பதினால், இதன்மூலமாக சப்பாத்தி, ரொட்டி போன்றவைகளை சமைத்து சாப்பிடலாம். அதேபோல் இப்போது கோதுமையால் செய்யப்பட்ட பிரட் பாக்கெட்டுகளும் கிடைக்கிறது, எனவே இதன் பயனை பிரட் மூலமாக பெறலாம்.

மேலும் படிக்க – மல்லி விதைகளில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

பழங்கள்

உங்களுக்கு பசி எடுக்கும் போதெல்லாம் உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் முடிந்தவரை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது பழச்சாறை குடியுங்கள். ஆப்பிள், திராட்சை மற்றும் ப்ளூபெர்ரி போன்ற பழங்களை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலமாக உங்களுக்கு தேவையான இனிப்பு ருசியும் கிடைக்கும் மற்றும் நீரிழிவு பிரச்சினை உண்டாகாமல் தடுக்கும். எனவே உணவு இடைவெளிகளில் பசி உணர்வு ஏற்பட்டால் இது போன்ற பழங்களை உண்ணலாம்.

சக்கரவள்ளிக் கிழங்கு

சீனர்கள் அதிக அளவில் விரும்பி சாப்பிடக்கூடிய கிழங்கு வகையான இந்த சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான நன்மைகள் அடைந்துள்ளது. எனவே உங்களுக்கு இனிப்பு சுவையுடன் கிழங்கு உணவை உண்ண வேண்டும் என்றால் இதை முயற்சி செய்யலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கை கொண்டு ஏராளமான உணவுகளை நாம் தயாரித்து அருந்தலாம். இதை தோலுடன் சாப்பிடுவதன் மூலமாக உங்கள் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துக் கொள்ளலாம்.

ஓட்ஸ் கஞ்சி

பொதுவாகவே நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக உட்கொள்வது இந்த ஓட்ஸ் கஞ்சி தான். ஆனால் ஒரு சிலர் இதை எப்படி ருசியாக சாப்பிட வேண்டும் என்பது தெரியாமல் உப்பு கூட சேர்க்காமல் சாப்பிட்டு வருகிறார்கள். எனவே நீங்கள் சாப்பிடும் ஓட்ஸ் கஞ்சியில் உங்களுக்கு பிடித்த பழங்களை நறுக்கி போட்டு கொள்ளுங்கள். இதன் மூலமாக அதன் ருசியும் அதிகரிக்கும், உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்.

நட்ஸ் உணவுகள்

பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற உணவுகளை நீங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம் இதை தவிர்த்து உலர்ந்த திராட்சையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் இனிப்புத் தன்மை உங்களுக்கு ருசியை தருவது மட்டுமல்லாமல் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும். இது அனைத்திற்கும் மேலாக நீரிழிவு நோயால் ஏற்படும் உடல் சோர்வு மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகளை தடுக்கும் தன்மை இது போன்ற உணவுகளுக்கு அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க – வேலைப்பளுவுடன் கண்களை பாதுக்காக்க வேண்டும்!

பூண்டு மற்றும் மீன்

அதேபோல் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தங்கள் உணவுகளில் தேவையான அளவு பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தினமும் காலையில் பச்சையாக 2 பூண்டுப் பற்களை மென்று சாப்பிடலாம். அதேபோல் குளிர்ந்த நீரில் இருந்து எடுக்கப்பட்ட மீன் உணவுகளை இவர்கள் சாப்பிடலாம். இதன் மூலமாக இவர்கள் உடலில்  சக்கரை அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

இதைத் தவிர்த்து சிறிதளவு உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் மற்றும் எப்போதும் உடலில் நீர்சக்தி இருக்க வேண்டும். அதேபோல் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க வேண்டும். அனைத்திற்கும் மேலாக உங்கள் உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வழிகளைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் நீரிழிவு பிரச்சனையை மிக எளிதாக எதிர்கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன