நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..!

  • by
foods that improve your immunity power

உலகம் முழுவதும் கரேனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கு நாம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். இதனால் உங்கள் உடலில் கரேனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும் அதனுடைய தாக்கம் உங்களை ஏதும் செய்யாது. ஆனால் சிறிய குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இதுபோன்ற எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதினால் அவர்களை கரேனா மிக எளிதில் தாக்குகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் மற்றும் சிறியவர்கள் நோய் எதிர்ப்பு உள்ள உணவுகளை அதிகமாக உன்ன வேண்டும். எனவே கரேனா வைரசுக்கு எதிராக போராடக்கூடிய உணவுகளை நாம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இப்பதிவில் காணலாம்.

தயிர் சாப்பிடலாம்

தயிரில் இருக்கும் வைட்டமின் சி உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தயிர் நமது உடலில் இருக்கும் நோய்க்கு எதிராக போராடும். அதே போல் உங்கள் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. தயிரை சாப்பிட விரும்பினால் உங்கள் உணவு மிக எளிதில் ஜீரணமாகிறது. இதனால் எந்த ஒரு பாக்டீரியாக்களும் உடலில் தங்காமல் கழிவு வழியாக வெளியேறுகிறது.

மேலும் படிக்க – கொரோனோ வைரசுக்கு பயந்து கைகுலுக்க தடை விதித்த நாடு..!

சக்கரைவள்ளி கிழங்கு

இனிப்பு உருளைக்கிழங்கு என்று அழைக்கப்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நோய்க்கு எதிராகப் போராடக்கூடிய பண்புகள் அதிகமாக உள்ளது. உங்கள் குடலுக்கு ஆரேகியத்தை அதிகரிக்கும். அதே போல் முதுமை ஏற்படுவதை தடுக்கும். இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உங்களை வலுவாக பார்த்துக் கொள்ளும்.

காளான்

காளானில் செலினியம், வைட்டமின் பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலமாக உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கரேனா போன்ற கொடிய வைரஸ் பாதிப்புகளை தடுக்கும்.

பாதாம்

பாதாமில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி சத்து உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதே போல் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

கிரீன் டீ

சளி போன்ற பிரச்சனைகளை ஏற்படுவதை உடனடியாக கிரீன் டீ தடுக்கிறது. எனவே அலர்ஜி, ஜலதோஷம், இருமல் போன்ற தொற்றுகளால் ஏற்படும் உடல் உபாதைகளை கிரீன் டீ தினமும் அருந்துவதனால் குறைகிறது.

கீரை மற்றும் ப்ராக்கோலி

கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி எப்போதும் அதிகமாக இருக்கும். அதை தவிர்த்து இதில் வைட்டமின் ஏ, சி, பி, கே போன்றவைகள் ஏராளமாக உள்ளது. எனவே உங்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கீரை  மற்றும் ப்ராக்கோலி போன்ற உணவுகளை தடுக்கிறது.

மேலும் படிக்க – தைராய்டினால் ஏற்படும் நன்மைகள்..!

பூண்டு

பூண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் இருக்கிறது. இதை உணவில் சேர்ப்பதன் மூலமாக நோய் எதுவும் உங்களை தாக்காமல் ஆரோக்கியமாக இருக்க முடியும். இதை காலையில் வெறுமனே பச்சையாக மென்று சாப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இதை தவிர்த்து பெரி பழங்களையும் நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம், எனவே இதுபோன்ற ஆரோக்கியம் அதிகமாக அடங்கியுள்ள உணவுகளை எடுப்பதன் மூலமாக உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வைரஸ் தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன