நச்சுகளில் இருந்து உடலை சுத்தப்படுத்த உதவும் உணவுகள்..!

  • by
detoxification

நாம் எடுத்துக்கொள்ளும் மோசமான உணவு முறைகளினால் நம் உடலில் நச்சுக்கள் அதிகளவில் சேருகிறது. இதை வாரத்திற்கு ஒரு முறை வெளியேற்றாவிட்டால் நமது உடல் நலம் பெரிதாக பாதிப்படையும். எனவே உடலில் இருக்கும் நச்சுகளை உணவுகள் மூலமாக எளிதில் வெளியேற்றும் வழிகளைக் காணலாம்.

பச்சைக் காய்கறிகள்

நம் உடலில் இருக்கும் நச்சுகளை அகற்ற அதிகளவில் உதவுவதும் பச்சைக் காய்கறிகள் தான். எனவே தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக பச்சை காய்கறிகளை சாப்பிடுங்கள். பீன்ஸ், கேரட், ப்ராக்கோலி, காலிஃப்ளவர், வெள்ளரிக்காய் போன்ற பச்சை காய்கறிகளை அப்படியே சாப்பிடலாம்.

பூண்டு

பூண்டில் அல்லிசின் என்னும் கெமிக்கல் இருப்பதினால் இது உங்கள் ரத்தத்தில் இருக்கும் நச்சுகளை அகற்றுகிறது. இது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்தை அதிகரிக்கிறது, எனவே நீங்கள் சமைக்கும் உணவுகளில் பூண்டை மறவாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். இதைத் தவிர்த்து தினமும் காலையில் பச்சையாக மென்று சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும். உங்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றம் வைரஸ்களை அகற்றும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு.

மேலும் படிக்க – போதைப் பழக்கத்தில் இருந்து வெளியே வருவது எப்படி..!

எலுமிச்சை மாதுளம்

நாம் எலுமிச்சை பழத்தை பழ சாறாக அருந்துவதன் மூலமாக நம் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேற்றலாம். இதில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் இருப்பதால் உங்கள் உடலில் உள்ள பிஎச் அளவை சமநிலையில் வைக்க உதவும்.

மாதுளைப்பழத்தில் அமினோ அமிலங்கள் அதிகமாக இருப்பதினால் உங்கள் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றி, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதன் மூலமாக உங்கள் உடல் சுத்தம் அடைகிறது.

கைக்குத்தல் அரிசி சீரகம்

கைக்குத்தல் அரிசியில் வைட்டமின் சி, மங்குனி மற்றும் புரோட்டீன் இருக்கிறது. எனவே உங்கள் உடலைத் தாக்கும் அனைத்து நச்சுக்களையும் அழிக்க உகந்தது. எனவே வார இறுதியில் வெள்ளை சாதத்தை சாப்பிடுவதற்கு பதிலாக கைக்குத்தல் அரிசியை சமைத்து சாப்பிடலாம்.

அதேபோல் சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரைக் குடிப்பதன் மூலமாக உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். இதிலிருக்கும் நார்சத்து உங்கள் செரிமான ஆற்றலை அதிகரிக்கும்.

ஆப்பில்

ஆப்பிளில் இருக்கும் வைட்டமின்கள் உங்கள் உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றும். எனவே வாரத்தில் ஒரு நாளாவது ஆப்பிளை முழு நேர உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். அதை தவிர்த்து தினமும் உணவு அருந்துவதற்கு பின்பு சிறிதளவு ஆப்பிளை சாப்பிடுங்கள் இது உங்கள் உடலுக்கு நல்ல பலனைத் தரும்.

மேலும் படிக்க – கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!

வெங்காயம், முட்டைக்கோஸ்

வெங்காயத்தில் உள்ள சல்பர் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். அதேபோல் முட்டைகோஸில் சல்பர் வைட்டமின் சி மற்றும் அயோடின் இருப்பதினால் நச்சுகளை அகற்ற உதவுகிறது.

இது அனைத்தையும் சாப்பிடுவது மட்டுமல்லாமல் முடிந்த வரை எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் குறைவாக எண்ணையை பயன்படுத்தி சமைத்த சாப்பிடுங்கள், இதன் மூலமாக உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி ஆரோக்கியமாக வாழ முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன