குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..!

  • by
foods that children should eat to increase immune power

குழந்தைகளை நாம் ஆரம்பத்தில் எப்படி வளர்கிரோமோ அதை பொருத்துதான் அவர்கள் எதிர்காலம் அமைகிறது. எனவே இவர்களுக்கு ஆரம்பத்தில் நாம் கொடுக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அவர்கள் உடல் மற்றும் எலும்புகளை வலுவாக்கிறது. இது தான் அவர்கள் முதுமை ஆகும் வரை அவர்களுக்கு பயனை தருகிறது. எனவே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் எந்த உணவுகளை அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் தரவேண்டும் என்பதை காணலாம்.

பால் பொருட்கள்

குழந்தைகளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்வதற்க்கு அவர்களுக்கு நாம் அளிக்கக்கூடிய பால் உணவில் இருக்கிறது. இதில் போதுமான அளவு புரோட்டின் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதினால் அவர்களுக்கு காலையில் பால் உணவுகளை தரலாம். பால், தயிர், மோர், வெண்ணை போன்றவைகள் அவர்களுக்கு வலு சேர்க்கிறது.

மேலும் படிக்க – உடலுறவு கொள்வதால் கொரோனா வைரஸ் பரவுமா..!

மஞ்சள் தூள்

குழந்தைகள் சாப்பிடும் உணவுகளில் மஞ்சள் தூளை நாம் போதுமான அளவு சேர்த்தாலே போதும். அது அவர்களின் உடலில் இருக்கும் நச்சுகளை அழித்து அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது. இதில் ஏராளமான எதிர்ப்பு பண்புகள் இருப்பதினால் அவர்களுக்கு எந்த ஒரு தொற்றுக்களும் உண்டாகும் பாதுகாக்கும் செயளை மஞ்சள் செய்கிறது.

வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் சி அதிகமாக இருக்கும் உணவுகளை உங்கள் குழந்தைகளுக்கு தாருங்கள். அதிலும் மீன் உணவுகள், ஆரஞ்சு, எலுமிச்சை, வைட்டமின் சி மாத்திரைகள், வைட்டமின்-சி எண்ணெய்களை அவர்களின் உணவில் சேர்த்திடுங்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அவர்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலையும் தரும்.

காளான்கள்

காளான்கள் ஒரு பூஞ்சை வகையை சேர்ந்தது. ஆனால் இதை உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. இதில் செலினியம், வைட்டமின் சி, கோலின் போன்ற சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது. இதில் கேன்சர் நோயை எதிர்க்கும் பண்புகள் உள்ளது. அதே போல் டயபடீஸ் நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு. இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும் குழந்தைகளுக்கான உணவாகும்.

மேலும் படிக்க – ஆரோக்கியத்தில் ஆளிவிதையின் பங்கு!!!

உலர்ந்த பழங்கள் மற்றும் பருப்புகள்

பாதாம், பிஸ்தா, உலர்ந்த திராட்சை, அக்ரூட், முந்திரிப் போன்ற உணவு வகையில் ஏராளமான ஊட்டச் சத்துகள் கொண்டுள்ளது. எனவே சிறுவர்களுக்கு காலை உணவாக இதை கொடுப்பதன் மூலமாக அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.

இந்த உணவுகளை அவர்களுக்கு கொடுப்பது மூலமாக அவர்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதன் மூலமாக கொரோனா மட்டுமல்லாமல் எந்த ஒரு தொற்றுக்களும் அவர்களை அண்டாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன