ஆண் மலட்டுத் தன்மையை உண்டாக்கும் உணவுகள்..!

foods that reduce sperm count

ஒரு தம்பதியினருக்கு குழந்தை இல்லையென்றால் சமுதாயம் முதலில் அந்தப் பெண்ணைதான் குறை கூறுவார்கள். ஏன் அந்தப் பெண்ணின் சொந்தக்காரர்கள் கூட பெண்ணிற்கு தான் ஏதோ குறை இருக்கிறது என்று வருத்தத்திற்கு உள்ளாவார்கள். ஆனால், இவர்கள் ஒருபோதும் ஆண்களைப் பற்றி சிந்திப்பதில்லை. மலட்டுத்தன்மை ஏற்பட்டால் அதற்குக் காரணம் இவர்களில் யாராவது ஒருவராகவோ அல்லது இருவராக கூட இருக்கலாம். ஆனால் இந்த அளவுக்கு வெளிப்படையாக சிந்தனைகள் இப்போது இருக்கும் சமுதாயத்தில் அதிக அளவில் யாருக்கும் இருப்பதில்லை.

கருத்தரிப்பதற்கு முக்கியமான காரணம் பெண்களின் கருமுட்டைதான். ஆண்களின் விந்தணுக்கள் பெண்களின் கருமுட்டையில் இணையும் போதுதான் கரு உருவாகிறது. இந்த செயலில் ஏதாவது ஒரு கோளாறு ஏற்பட்டாலும் குழந்தை பிறப்பது தாமதமாகிறது. இதையே பல மருத்துவமனைகளில் குழந்தை பிறக்க செய்வதை ஒரு வியாபாரமாக செய்து வருகிறார்கள். நமக்கிருக்கும் பிரச்சினையை வெளியே சொல்ல முடியாத காரணத்தினால் குழந்தையை பெற்றெடுப்பதற்காக சில மருத்துவமனைகளில் ஏரி, இறங்குகிறோம். இருவருக்கும் சிகிச்சையை செய்து பல ஆயிரங்களை சம்பாதித்து விடுகிறார்கள். எனவே இருவர்களின் யாருக்கு குறை இருக்கிறது என்பதை கண்டறியுங்கள், பின்பு அதற்கான காரணம் மற்றும் சிகிச்சையை மேற் கொண்டால் உங்களுக்கு குழந்தை பிறக்கும்.

மேலும் படிக்க – உடல் எடை குறைக்க எளிய வழிகள்

ஆண்களிடம் குறை இருந்தால் அவர்களின் விந்தணுக்களின் செயல்பாடுகள் குறைந்திருக்கும். இதற்கான காரணம் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள்தான். ஆண்கள் முடிந்தவரை பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தவிர்க்க வேண்டும். ஆடு, மாடு, பன்றி போன்ற இறைச்சிகளை அதிகளவில் பதப்படுத்தி வைக்கிறார்கள். இதை அறியாமல் அதை நாம் உட்கொள்ளும் பொழுது நம்மை அறியாமல் நம்முடைய விந்தணுக்களின் தரத்தை இது குறைத்து விடுகிறது. எனவே இதுபோன்ற உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

ஆண்கள் அடுத்து தவிர்க்க வேண்டிய உணவு ட்ரான்ஸ் கொழுப்புகள். இந்த கொழுப்புகள் கூடிய உணவுகளை நாம் உண்ணும் போது நமக்கு இருதயக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் நமது விந்தணுக்களும் இதனால் பாதிப்படைகிறது.

சோயா பொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் அதிகமாக பயன்படுத்தும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் தவிர்க்க வேண்டும். சோயா பொருட்களில் ஈஸ்ட்ரோஜன் இருப்பதினால் இது நமது விந்தனுக்களுக்கு தீங்கானது. பூச்சிக் கொல்லிகளை காய்கறிகள் மற்றும் பழங்கள் வேகமாக வளர்வதற்கு மற்றும் அதன் மேல் எந்த ஒரு பூச்சிகளும் அண்டாமல் இருப்பதற்காக இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் பூச்சிக்கொல்லியின் தாக்கம் பழங்களில் சென்று விடுவதினால் இதை அருந்தும் போது நமது உடலில் கலந்து நமது விந்தணுக்களை பாதிப்படைய செய்கிறது.

மேலும் படிக்க – உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் ரோஜா இதழின் சாறு..!

பால், க்ரீம் மற்றும் சீஸ்களில் அதிக அளவிலான கொழுப்புகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பாலின் தரத்தை உயர்த்துவதற்காக ஒருசில பொருட்களை பசுமாட்டிற்கு கொடுக்கிறார்கள். இதனால், அதிக கொழுப்புள்ள பாலை உற்பத்தி செய்கிறது. இதை அருந்தும் போது நமது உடலில் பல மாற்றங்களை ஏற்பட்டு நமது விந்து அணுக்களை பாதிப்படைகிறது.

இதில் சொல்லப்பட்டிருக்கும் உணவுகளை நீங்கள் தவிர்த்தாலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஆண்மை குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. சராசரியாக கடந்த 30 வருடங்களில் 59% விந்தணுக்களின் உற்பத்தி குறைந்துள்ளது. இது அனைத்திற்கும் நம்முடைய உணவு மற்றும் பழக்க வழக்கங்களே காரணம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன