ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்..!

  • by
food that will improve your memory power

ஒருவரின் தரத்தையும், குணத்தையும் தீர்மானிக்கப்படுவது அவர்களின் சிந்தனைத் திறனை பொறுத்து தான். நீங்கள் அடிக்கடி மறக்கும் விஷயங்களை உங்கள் வீட்டில் உள்ளவர்களோ அல்லது உங்கள் மேல் அதிகாரிகளோ ஞாபகம் வைத்திருப்பார்கள், அதற்கான காரணம், அதன் முக்கியத்துவத்தை அவர்கள் முழுமையாக அறிந்திருப்பார்கள். இது போல் நம் வாழ்க்கையில் முக்கியம் இல்லை என்று நினைக்கும் எல்லா விஷயங்களும் நம் நினைவிலிருந்து மறைந்து விடும். இது போன்ற பிரச்சினைகளில் சிக்காமல் நம்முடைய சிந்தனை திரையில் எல்லாமே நினைவில் இருக்க வேண்டுமென்றால் ஒரு சில உணவுகளை நாம் உண்ண வேண்டும், அந்த உணவு பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்.

காபி மற்றும் கிரீன் டீ

காபியில் இருக்கும் கஃபின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சிந்தனைத் திறனை அதிகரிக்க உதவுகிறது என ஆய்வில் தெரிந்துள்ளது. நீங்கள் தினமும் காலையில் காபி குடிப்பவர்களாக இருந்தால் உங்கள் சிந்தனையை பற்றி எந்த கவலையும் தேவையில்லை. அதே சமயத்தில் காபியில் நாம் சரியான அல்லது குறைந்த அளவே சர்க்கரையைப் பயன்படுத்த வேண்டும். அதேபோல் கிரீன் டீயும் உங்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதில் முழு கவனத்தை செலுத்த கிரீன் டீ உதவுகிறது.

நீங்கள் தேர்வுக்குத் தயாராகிறீர்களா, அல்லது உங்கள் மூளை புத்திசாலித்தனமாக இருக்க பயிற்சி செய்ய விரும்புகிறீர்களா? எங்கள் நிபுணரிடம் இருந்து ஆலோசனை பெறுங்கள்.

மீன் மற்றும் முட்டை

நம் மூளையின் ஆற்றலுக்கு கொழுப்புகள் மிக அவசியமான ஒன்று எனவே கொழுப்புகள் அதிகமாக உள்ள மீன் உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக நமது மூளைக்கு தேவையான அனைத்து புரதங்களும் கிடைக்கின்றன. முட்டையில் வைட்டமின் பி12, பி6 போன்றவைகள் இருப்பதினால் மூளைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் இது அளிக்கிறது. இது உங்கள் ஞாபக சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கிறது.

மஞ்சள்

இந்தியர்களின் உணவு மஞ்சள் இல்லாமல் பூர்த்தி அடையாது, எனவே நாம் தினமும் பயன்படுத்தி வரும் மஞ்சளால் நமது மூளைக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. மூலையில் செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. அதைத் தவிர்த்து மஞ்சளில் எதிர்ப்புத் தன்மை அதிகமாக உள்ளதால் மூளைக்கு கூடுதல் பலமாக அமைந்து, மூளையில் உள்ள செல்களை பாதுகாக்கிறது.

மேலும் படிக்க – ஊரடங்கின் பொழுது உடல் பருமன் பிரச்சினையை தடுப்பது எப்படி..!

ப்ரோக்கோலி மற்றும் ஆரஞ்சு

ப்ரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் கே உங்கள் மூளை செயல்பாட்டை சீராக்க உதவுகிறது. உங்கள் ஞாபக சக்தி மற்றும் சிந்தனைத் திறனை அதிகரிப்பதற்கு தினமும் சிறிதளவு பிரக்கோலியை உண்டாலே போதும். அதேபோல் ஆரஞ்சில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால் உங்கள் உடலில் எந்த ஒரு நோய் தொற்றுகளும் தாக்காமல் பாதுகாக்கிறது. இதுவே உங்கள் மூளையின் செயல்பாட்டை சீராக்கி உங்கள் சிந்தனை திறனை அதிகரிக்கிறது. அதைத் தவிர்த்து அல்சைமர் மற்றும் மூளை சம்பந்தமான வியாதிகளை ஆரம்பத்தில் தடுக்கிறது.

பூசணி விதை மற்றும் நட்ஸ்

பூசணி விதையில் சக்தி வாய்ந்த எதிர்ப்புத் தன்மை இருக்கிறது. இதனால் உடல் மற்றும் மூளைகளில் எந்த பாதிப்புகளும் உண்டாகாமல் பாதுகாக்கப்படுகிறது. இதில் மெக்னீசியம், காப்பர் மற்றும் ஜிங்க் போன்ற சக்திகள் இருப்பதினால் உங்கள் சிந்தனை திறனை அதிகரிக்க உதவுகிறது. இதைப்போல் நர்ஸ், வால்நெட் போன்ற உணவுகளிலும் தேவையான புரதம் இருக்கிறது. இது உங்கள் மூளைக்கு தேவையான சக்தியை அளித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க – உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஐந்து ஆசனங்கள்..!

இதைத் தவிர்த்து டார்க் சாக்லேட் என்று அழைக்கப்படும் உண்மையான சாக்லேட்டை நாம் சாப்பிடுவதன் மூலமாகவும் நம்முடைய ஞாபக சக்தியும் அதிகரிக்கும். எனவே உங்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறு இதுபோன்ற உணவுகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் அல்லது சிந்தனைத்திறன் வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று சிறப்பான முறையில் பயன்படுத்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன