பால் குடிப்பதற்கு முன்பு இது போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.!

food items that you should avoid before drinking milk

நாம் எடுத்துக்கொள்ளும் பாலில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இதில் வைட்டமின்கள், கனிம சத்துகள், புரோட்டீன்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு என ஏராளமான சக்திகள் இருப்பதினால் நம் பிள்ளைகளுக்கு மற்றும் வயதானவர்களுக்கு பாலைக் கொடுத்து அவர்களை வழிபடுத்துகிறோம் இதனால் முதியவர்களுக்கு ஏற்படும் தசை இழப்பை குறைந்து தங்களது தசையை சரி செய்ய உதவுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் நமக்கு ஏற்படும் நோய்களை எதிர்க்கிறது. இவ்வளவு ஆரோக்கியம் இருக்கும் இந்தப் பாலை நாம் சரியான நேரத்தில் சரியான உணவுக்குப் பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் அது நமக்கு ஆபத்தாக முடிந்துவிடும்

சிட்ரஸ் பழங்கள்

பால் குடிப்பதற்கு முன்பாக நாம் ஒரு சில உணவுகளை தவிர்க்க வேண்டும் அதில் முதலில் இருப்பது சிட்ரஸ் பழங்கள், அப்படி என்றால் புளிப்பான பழங்களாகும். பால் குடிப்பதற்கு முன்பாக நாம் எலுமிச்சைபழம் வகையான ஆரஞ்ச், சாத்துக்கொடி போன்ற பழங்களை தவிர்க்க வேண்டும். இதை நீங்கள் உட்கொண்டால் உங்களை அறியாமல் நீங்கள் வாந்தி எடுத்து விடுவீர்கள் இதனால் குறைந்தது இரண்டு மணி நேரம் இடைவெளி விட்டு தான் பால் குடிக்க வேண்டும்.

மேலும் படிக்க – உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும் ஓமவல்லி.!

மீன் வகைகளை 

பெரியவர்கள் எப்போதும் மீன் சாப்பிட்டு விட்டு பாலை குடிக்ககூடாது என்று கூறியிருப்பார்கள். அது உண்மைதான் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மற்றும் சரும பாதுகாப்புக்கு மீன் மிகவும் நல்லது ஆனால் நாம் மீன் உண்ட பிறகு பாலை குடிப்பதன் மூலம் நமக்கு செரிமான மண்டலத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதை தவிர்த்து நமது உணவே விஷமாக மாறும் அளவிற்கு இந்த இரண்டின் கலவையும் மோசமானதாகவே இருக்கிறது. எனவே முடிந்தவரை மீனை பால் குடிப்பதற்கு முன்பு தவிர்க்க வேண்டும்.

பாகற்காய் மற்றும் முள்ளங்கி

பாகற்காய் கசப்பாக இருப்பதால் நம் உடலில் இருக்கும் கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் நமக்கு பல வகையான ஆரோக்கியத்தை தருகிறது. ஆனால் நாம் பால் குடிப்பதற்கு முன்பு இதை எடுத்துக் கொள்வதன் மூலமாக நம் முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமாக உண்டாகிறது. மற்றும் முள்ளங்கியை உட்கொள்வதன் மூலமாக நமது சருமத்திற்கு தீங்கு ஏற்படுகிறது.

மேலும் படிக்க – உடற்பயிற்சிகள் இல்லாமல் ஒரே இடத்தில் வேலை செய்கிறீர்களா!

பருப்பு வகைகள் மற்றும் வெண்டைக்காய்

உளுத்தம் பருப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு பின்பு பால் குடிக்கக்கூடாது உளுத்தம்பருப்பு மட்டும் அல்லாமல் எந்த ஒரு பருப்பு வகைகளையும் நாம் பால் குடிப்பதற்கு முன்பு எடுத்துக்கொள்ளக்கூடாது. இதனால் நமது அடிவயிற்று வலி வாந்தி மற்றும் உடல் பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அதேபோல் வெண்டைக்காயை பால் குடிப்பதற்கு முன்பு உட்கொண்டால் உங்கள் அழகை பாழாக்கிவிடும். உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் வர இது வழிவகுக்கிறது எனவே பால் குடிப்பதற்கு முன்பு இந்த உணவை தவிர்த்துவிடுங்கள்.

இது அனைத்திற்கும் ஒரே தீர்வு இரவு உணவு அருந்திய பிறகு குறைந்தது இரண்டு மணி நேரம் இடைவெளி விட்டு பாலை குடிப்பது நல்லது அல்லது அதிகாலை எழுந்தவுடன் பாலை அருந்துங்கள் முடிந்த வரை இந்த உணவு வகைகளை பாலுடன் சேர்த்து உண்ணாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன