சிறுநீரகத்தை  சிறப்பாக செயல்பட வைக்கும் உணவு வகைகள்.!

  • by
food habits to follow to have good urinary system

இதயத்திற்கு அடுத்து நம் மனித உடலில் அதிக வேலைகள் செய்யும் மிக
முக்கியமான உறுப்பு சிறுநீரகம். ஆனால் நம் உணவு பழக்கவழக்கம் முறைகளினால் சிறுநீரகத்தை நாம் முறையாகப் பேணி காப்பதில்லை. இதன் விளைவே சிறுநீரக நோய்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில் சிறுநீரக செயலிழப்பை முற்றிலுமாக சரிசெய்ய முடியாது.

ஆனால் அதை தற்காலிகமாக தள்ளிப்போட முடியும்.இதை முழுமையாக குணப்படுத்த எந்த மருத்துவத் துறையிலும் மருந்துகள் இல்லை. நோயின் தீவிர நிலை அதிகரிக்காமல் இருக்க நாம் உட்கொள்ளும் உணவின் தேர்வு மிக மிக முக்கியமானதாக உள்ளது.

சிறுநீரகத்தின் வேறு சில வேலைகள்

10 லட்சத்துக்கும் மேற்பட்ட நெப்ரான்களை உள்ளடக்கியது தான் சிறுநீரகம்.
சிறுநீரகத்தில் நாளொன்றுக்கு 50,000மில்லி லிட்டர் தண்ணீர் செலுத்தப்படுகிறது.
அதில் 1500 மில்லி லிட்டர் தண்ணீரை சிறுநீராக தினசரி வெளியேற்றுகிறது.
இதனுடன் நம் உடலில் உள்ள தேவைக்கு அதிகமான உப்புக்கள், உடலுக்குள்
வந்துவிட்ட நச்சுக்கள் இவை அனைத்தும் இந்த சிறுநீரக பாதையில் தான்
பயணிக்கின்றன. கழிவை வெளியேற்றுவது மட்டுமல்ல வைட்டமின் டி
தயாரிப்பும், ரத்த சிவப்பணுக்களின்  உற்பத்திக்கு தேவையான
“எரித்ரோபோயட்டின் ” உற்பத்தி செய்வது இந்த சிறுநீரகம் தான். ரத்த அழுத்தம்
ஒரே சீராக இருக்க வேண்டும் எனில் “லெனின் ” எனும் சுரப்பு அளவாக சுரக்க வேண்டும். அந்த லெனின் சுரப்பை அளவோடு சுரக்கச் செய்வது நம் சிறுநீரகத்தின் மிக முக்கிய வேலையாகும்.

மேலும் படிக்க – கோடைக் காலங்களில் உடலில் குளிர்ச்சியாக வைப்பதற்கான வழிகள்..!

யாருக்கெல்லாம் அதிகம் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது

சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு விஷயத்தையும் நாம்
செய்யாமல் இருந்தாலே சிறுநீரகத்தை நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
மனிதன் தினசரி மூன்று முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது மிக
முக்கியமான தேவையாக உள்ளது. நம்மில் பலரும் வேறு சில காரணங்களுக்காகவும், பணிச்சுமை காரணமாகவும் இவ்வளவு தண்ணீர் அருந்துவது இல்லை.

சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைத்திருக்க கூடாது. அதிக வலி நிவாரணி எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் விரைவில் செயலிழக்க தொடங்குகிறது. காரணம் அவர்கள் வலிநிவாரணி காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளின் கழிவுகள் சிறுநீரகத்தின் வழியாகவே தான் வெளியேறும். அவ்வாறு நடக்கும்போது மாத்திரை கழிவுகளை சுத்திகரிக்க சிறுநீரகத்திற்கு வேலை அதிகமாக இருப்பதால் விரைவில் கெட்டுப் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சுய வைத்தியம் எடுத்துக்கொள்வதை நிறுத்துவது நல்லது.

நீரிழிவு நோயை ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டில் வைத்திருக்க தவறினால்
பின்னாட்களில் அது சிறுநீரகத்திலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

சிறுநீர்  நன்கு வெளியேற சாப்பிட வேண்டிய உணவுகள்

உணவில் மற்றம் எந்த நோய்க்கும் இல்லாத கவனம் சிறுநீரகத்திற்கு மட்டும்
அதிகம் அவசியமாகிறது. சிறுநீரகத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய எந்த ஒரு
விஷயத்திற்கும் இடம் கொடுக்கக் கூடாது. அலட்சியமாக இருப்பதை கொஞ்சம்
தவிர்த்துவிட்டு உணவில் அதிகம் கவனம் செலுத்தினால் சிறுநீரகத்தை சரிசெய்யலாம்.

வாழைத்தண்டு 
வாழைப்பூ 
முள்ளங்கி
பார்லி 
வெள்ளரி போன்ற காய்கறிகளை வாரத்தில் நான்கு நாட்களாவது சாப்பிடுவது
மிக அவசியம்.

உணவில் அதிக உப்பை தவிர்ப்பது மிக முக்கியம். அதிக உப்பு சிறுநீரகத்தின்
பணிக்கு சிரமம் கொடுக்கும். நாம் உண்ணும் உணவில் நீர், புரதம் ,சோடியம்
மற்றும் பொட்டாசியம் இரும்புச்சத்து இவற்றை சரியான அளவில் எடுத்துக்
கொண்டால் சிறுநீரக நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். 

நமக்கு புரத உணவு என்றதுமே அசைவ உணவுகள் தான் நினைவில் வரும் ஆனால் இந்த அசைவ உணவில் இருக்கும் உப்பு சிறுநீரகத்தில் அதிக அளவு ஒரு சென்றுவிடும். அதற்கு பதில் பாசிப்பயிறு எடுத்துக்கொள்ளலாம். பாசிப்பயறின் புரதம் சிறுநீரக நோய்க்கு நோயாளர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.

பழங்களை எவ்வாறு தேர்வு செய்வது 

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைந்த
அளவில் உள்ள பழங்களையே அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

பொட்டாசியம் அதிகம் உள்ள பழங்கள்

வாழை, எலுமிச்சை, ஆரஞ்ச், நெல்லிக்கனி போன்ற பழங்களை தவிர்க்கலாம் மேலும் இதில் நிறைய பொட்டாசியம் சத்துக்கள் அடங்கியுள்ளன. குறைந்த அளவு பொட்டாசியம்
சத்துக்கள் உள்ள பைனாப்பிள் பப்பாளி கொய்யா முதலிய பழங்களை சிறுநீரக
பாதிப்பு உடையவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

சோடியம் அதிகம் உள்ள பழங்கள் 

கேரட் ,காலிஃப்ளவர், பீட்ரூட், நூல்கோல் பருப்பு  கீரைகள் இவற்றில் சோடியம்
உப்பு அதிகம் உள்ளதால் இந்த காய்கறிகளையும் உணவில் தவிர்க்க வேண்டும்.
காய்கறி மற்றும் கீரைகளை அதிக நீர்விட்டு நன்கு வேகவைத்து அந்தத்
தண்ணீரை வடிகட்டி வடித்துவிட்டு பின்பு சாப்பிட வேண்டும். இந்த முறையில்
சமைப்பதால் உப்புகள் அதிக அளவு உணவில் சேராமல் பார்த்துக்கொள்ள
முடியும்.

மேலும் படிக்க – கற்பூரவல்லி இலையில் இருக்கும் மூலிகை குணம்

முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை தேநீர்

போகியன்று தன் வீட்டு வாசலில் கட்டும் பூளைப் பூ சிறுநீரகப் நோய்க்கு மருந்தாகப் பயன்பட்டது. வெண்ணிற பூக்களால் ஆன அந்த சிறுகண்பீளை வயல் பகுதிகளில் களைச் செடியாக வளரும். நீர்முள்ளி செடி  நெருஞ்சிமுள், பூனை மீசை எனும் செடி இவற்றை சரியாக அடையாளம் தெரிந்து கொண்டு தேநீராகி தினசரி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோயாளிகளுக்கு ஒரு அருமருந்தாக இது பயன்தரும்.

நம் உடலிலிருந்து எந்த அளவிற்கு சிறுநீர் வெளியேறுகிறது அதை பொறுத்து நீர்
அருந்தும் அளவையும் நாம் மாற்றிக் கொள்ளலாம். இதைப்போல் ரத்தத்தில் மற்றும் சிறுநீரில் உள்ள உப்பைப் பொறுத்தே நம் உணவில் சேர்க்கும் உப்பின் அளவு இருக்க வேண்டும். பொட்டாசியம் அதிகம் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .இது இதயத்தை திடீரென செயழிக்க செய்ய கூட வாய்ப்புகள் உள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன