ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவு பழக்கமுறை

  • by

ஐந்து  வயதில் ஆரோக்கியத்தில் சிக்கல், 18 வயதில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல் போன்றவை ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் எங்கின்றனர். லோசுகர்,  ஹை பிபி போன்ற கோளாறுகள் மனிதனை மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாக்குகின்றன. அதிக ஜங் புட், போனில் மூழ்கி போதல், உணவில் அக்கறையற்ற போக்கு ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. 

நமது   வாழ்வியலில் ஏற்படும் மாற்றங்கள் உடலையும் மனசையும் பெரிதும் பாதிக்கச் செய்கின்றது.  உடலையும் , மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொளவது நமது கடமை இல்லையெனில் மருத்துவ மனையில்  செலவு செய்ய வேண்டியது வரும். 

மேலும் படிக்க – தூங்குவதற்கு முன்பாக நாம் செய்ய வேண்டியவை..!

 உடலும் மனசும் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும்:

அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகளை இங்கு கொடுத்துள்லோம். அதனை பின்பற்றி வாருங்கள் ஆரோக்கியதுடன் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உடலும் மனசும் ஒரே நேர்கோட்டில் இயங்க வேண்டியது அவசியம்  ஆகும்.  

தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடிப்பது நல்லது அதுவும் காலை வேளையில் குளிர்ச்சி அதகரிக்கும் பழம் இரவில் கொஞ்சம் சூடு அதிகரிக்கும் பழச்சாறு குடியுங்கள் சிறப்பானது ஆகும்.  பழைய சோறு கஞ்சி, கடித்துக்கொள்ள வெங்காயம் தரும், மோர் தரும் ஆற்றலுக்கு நிகர் எதுவும் இல்லை.

காய்கறிகள்

 பழ ஜூஸ் பிரஸ்ஸாக உடனுக்கு உடன்  தயாரித்து குடித்தல் நல்லது, அவற்ரில் ஐஸ் கட்டி சேர்க்காமல் இருத்தல் மிக முக்கியம் ஆகும்.  நாட்டுச்சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.  

எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை சாப்பிடலாம் ஆனால் அதற்கு பின் நீங்கள் கவனிக்க வேண்டியது  எதாவது நடைப்பயிற்சியாவது மேற்கொள்ளுங்கள். முடிந்தவரை காய்கறிகளை பழங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிடுதல் நலம் பயக்கும். 

மேலும் படிக்க – நமது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க சீஸ் உண்மையில் உதவுகிறதா..!

பயிறு வகைகள்:

வேகவைத்த பயிறு வகைகள் பாசிப்பயறு, சுண்டல், மொச்சை, அவரை, தட்டப் பயிறு, கொள்ளு ஆகிய தானியங்கள்,  நாட்டு காய்கறிகள் உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் நல்லது ஆகும். 

 இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு மற்றும் சுட்டு எடுக்கும் பண்டங்கள் எதுவேணாலும் நீங்கள் சமைத்து சாப்பிடலாம். 

உண்ணும் உணவில் அதிக காரம், இனிப்பு  இல்லாமல் உங்கள் சுவைக்கு ஏற்ப சாப்பிடலாம்.  காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது  நல்லதாகும்.

மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல்  ஆகியவற்றை சாப்பிடவும். வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது அதனை நாம் எடுத்துக் கொள்வதில்தான் உள்ளது. 

 பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட், பச்சை காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட்கள், இரவில் நட்ஸ் ஊரவைத்து அதனை காலையில் சாப்பிட்டு  வரலாம். 

பழங்கள்

புளிப்பான உணவுகளை முடிந்தவரை காலையில் சாப்பிடுவதை  குறைத்துக்கொள்ளவும். புளிப்பான உணவுக்கு தக்காளி சேர்த்து சமைக்கலாம். 

தண்ணீர் தேவைப்படும் போது குடிக்க வேண்டும். ஒரே முடக்காக தண்ணீர் குடிக்க கூடாது கொஞ்சம் கொஞ்சமாக முழுங்குதல் நல்லது. 

தினமும் 15 முதல் 30 நிமிடம் நடந்து சென்று  வருதல் நல்லது ஆகும். மன அழுத்தம் குறையும் உடலில் தளர்வு கிடைக்கும். தேவையற்ற மன சலனங்கள் எல்லாம் குறையும். 

தினமும் அதிகாலை  அல்லது சூரியன் வருவதற்கு முன் எழுந்து கொள்ளுதல் சிறப்பானது. காலையில்  ஆரோக்கியம் தரும் ராகி கஞ்சி, மால்ட் குடித்து வரவும். 

மேலும் படிக்க – இஞ்சியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா???

பசி எடுத்து சாப்பிடுதல் சிறப்பு:

பசி எடுத்தால் மட்டும் சாப்பிடவும், முதலில் பசி என்றால் என்ன என்பது தெரிந்து  சாப்பிட வேண்டும். பசி எடுத்தப்பின் சாப்பிட வேண்டும் அவ்வாறே சாபிடும் உணவை நன்கு மென்று  விழுங்க வேண்டும். வாயை மூடி மென்று விழுங்க வேண்டும். அத்துடன் நின்று கொண்டு சாப்பிடக்கூடாது.  சாப்பிடும் அரை மணி நேரம் முன்பு அதே போல் சாப்பிட்ட பின்பு அரை மணி நேரம் வரை தண்ணீர் குடிக்க கூடாது.  இப்பிடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான அளவு மட்டும்தான் சாப்பிட முடியும். சாப்பிட்ட உணவானது உடனடியாக   ஜீரணம் ஆகும். 

தினமும் வெந்தய தண்ணீர்  மற்றும் சீரகத் தண்ணீர் குடித்து வருதல் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். கீரை வகைகள் எலும்பிச்சை மற்றும் ஆரஞ்சு சாப்பிட்டு வருதல் நல்லது ஆகும்.மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன