உணவு முறைகளே ஆரோக்கியத்தின் அடித்தளம்..!

  • by
food habits are the basement for healthy lifestyle

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள், அதனடிப்படையில் நாம் அனைவரும் எப்போது நோய் இல்லாமல் நம்முடைய வயதை கடந்து வருகிறோமோ அப்போதுதான் நாம் வாழ்வதற்கான அர்த்தம் நமக்கு புரியும். ஆனால் நம்முடைய வாழ்க்கை முறையின் மாற்றங்களினால் நாம் தேவையற்ற உணவுகளை உட்கொண்டு, நாம் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். ஒரு சிலருக்கு உடல் பருமன் பிரச்சினை ஏற்படுகிறது, மற்றவர்களுக்கு உடலில் இருக்கும் உறுப்புகளில் பிரச்சினை ஏற்படுகிறது. இது போன்ற அனைத்து பிரச்சினையையும் தீர்ப்பதற்காகவே நாம் சிறந்த டயட்டீஷியனை சந்திக்கிறோம்.

உணவே மருந்து

பண்டைய காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் தங்களின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கு உணவே மருந்தாக உட்கொண்டு வந்தார்கள். ஆனால் நாம் பசிக்கும் போதெல்லாம் கண்களில் தெரியும் உணவுகளை வாங்கி சாப்பிடுகிறோம், இல்லையெனில் மேலை நாடுகளில் பழக்கமாக கொண்டிருக்கும் ஆரோக்கியமற்ற உணவுகளை சமைத்து சாப்பிடுகிறோம். இதனால் நம்மை அறியாமல் நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் பாதிப்படையும், இது ஒரு வயதை எட்டியவுடன் அதன் செயல் திறன் குறைகிறது. இப்போதுவரை இதனால் பாதிப்படைந்தவர்கள், தங்கள் உடலை மீண்டும் ஆரோக்கியமாக மாற்ற வழிகள் எங்களிடம் உள்ளது.

மேலும் படிக்க – ஃபிட்டாக இருப்பதற்கு வெங்காயத்தை பயன்படுத்துங்கள்..!

டயட்டீஷியன்

நாம் 18 வயதைக் கடந்த உடன் நம்மை அறியாமல் நம் உடலில் ஒவ்வொரு பிரச்சனையாக உருவாகிறது. அதன் தாக்கம் காலப்போக்கில் ஒவ்வொரு உடல் உபாதைகள் மூலமாக வெளிப்படுகிறது. அதை ஆரம்பத்தில் அறிந்து அதற்கான தீர்வை நாம் உணவுகள் மூலமாக பெற முடியும். நம்முடைய வயது மற்றும் உடல் எடையைப் பொறுத்து நாம் சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். அதை நாம் இந்த செயலியின் உதவியால் சிறந்த டயட்டீசியன் உடன் கலந்துரையாடி நம்முடைய சரியான உணவு வகைகளை தேர்ந்தெடுக்க முடியும். சாதாரணமாக நாம் மருத்துவமனைக்கு சென்றால் நம்மை நிரந்தர வாடிக்கையாளராக வைத்துக் கொள்வதற்காக அவர்கள் நம்முடைய உணவு முறைகளில் மூலமாக நிரந்தர தீர்வை அளிக்க மாட்டார்கள். ஆனால் இந்த செயலியின் மூலமாக நீங்கள் கலந்துரையாடுவதன் மூலமாக உங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

பிடித்த உணவுகள்

பொதுவாக டயட் முறையை பின்பற்றுவதில் ஏராளமான சிக்கல்கள் ஏற்படும். ஒரு சிலர் தங்களுக்குப் பிடித்த உணவுகளை முழுமையாக தவிர்த்து, பிடிக்காத உணவுகளை உண்ண வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் இதுபோன்ற டயட்டீசியனுடன் நீங்கள் கலந்துரையாடும் பொழுது உங்களுக்கு பிடித்த உணவுகள் மூலமாகவே உங்கள் உடல் அழகை அதிகரிக்கும் வழிகளை காண்பிப்பார்கள். அதற்கு நீங்கள் சிறந்த உணவுகளை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மட்டுமே போதும், அதைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளையும் சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடலில் ஆரோக்கிய தன்மை எப்போதும் சமநிலையில் இருக்கும்.

மேலும் படிக்க – தேங்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

ஆரோக்கியத்தின் முதல் அடி

எப்போதும் சோர்வாக இருப்பவர்கள், செயல்திறனில் குறைபாடு உள்ளவர்கள், சிந்தனையில் சிக்கல் உள்ளவர்கள், மற்றும் எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பது போன்ற அனைத்து பிரச்சினைகளையும் நாம் உணவைக் கொண்டு சரி செய்ய முடியும். எனவே இதுவரை சாதாரண மனிதராக இருந்த நீங்கள் ஒரு புதிய மனிதராக உருவெடுக்க வேண்டும் என்றால் உங்கள் உணவு முறையை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு எங்கள் டயட்டீஷியனுடன் ஆலோசனை பெற வேண்டும். உங்கள் வாழ்க்கையில் எப்போதும் சுறுசுறுப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமென்றால் இந்த செயலுக்கான முதல் அடியை எடுத்து வையுங்கள்.

எல்லோர் வாழ்க்கையிலும் ஏராளமான ஏற்றம் மற்றும் இயக்கம் இருக்கும். ஆனால் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் ஏற்ற மட்டுமே இருக்க வேண்டும் என்றால் உங்கள் உடலை எப்போதும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு எங்களிடம் இருக்கும் சிறந்த வல்லுனர்களின் அறிவுரையைக் கேட்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை உங்களால் முழுமையாக உணரமுடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன