காதலில் உண்மையுடன் உணர்வாக இருக்க வேண்டும்

  • by

காதலில் இது அவசியமானது ஆகும். நீங்கள் காதலிக்கின்றிர்களா அப்படி எனில் சொல்லுங்கள் உங்கள் அன்புக்குரியவரிடம்  எத்தனை பொய்கள் சொல்லி இருக்கின்றீர்கள் என பாத்துக் கொள்ளுங்கள். 

பொய் சொல்லும் பொழுது அவசியமானதா என்பதை அறிந்து அந்த சூழல் மற்றும் இடத்திற்கு ஏற்ப பொய சொல்லலாம். ஆனால் அப்படியில்லால் அடுக்கு அடுக்காக உங்கள் அன்புக்குரியவரிடம் பொய் சொல்லிவிட்டிர்கள் என்று வைத்து கொண்டால் வாழ்வு என்பது எவ்வாறு வளம் பெறும் இதனை அறிந்து கொண்டு செயல்படுங்கள். 

மேலும் படிக்க: காதலில் இந்த இணைப்பு இருக்க வேண்டும்!

காதல்

 விழைவு: 

செய்த செயலில் உண்மை இல்லை எனில் அதன் விழைவு பின்னாளில் என்னவாக இருக்கும் என்பதை அறிந்து செயல்படுங்கள். வாழ்வில்  அன்பு என்பது நம்பிக்கை, காதல் பரிமாற்றம் ஆகும். அதனை நாம் எவ்வாறு கையாள்கின்றோம் என்பதில்தான் வாழ்வு இருக்கின்றது. உங்கள் வாழ்வில் நீங்கள் எப்பொழுது கடைப்பிடிக்க வேண்டிய  ஒன்று உண்டு எனில் அது பொய்களை தவிர்த்தல் ஆகும். 

காதல்

சரியான நேரம்: 

காதலிக்க எல்லா நேரமும் சரியானதுதான் ஆனால் அதற்காக அவர்வர்களுக்கு என்று இலக்கு  என்ற ஒன்று இல்லாமல் காதலிக்கின்றேன் பேர்வழி என இருவரும் நேரத்தை செலவழித்து வாழ்க்கையை தொலைத்துவிடகூடாது. எதிர்கால வாழ்க்கை என்ன அதற்கு இருவரின் பங்கு எந்த அளவிற்கு அவசியமானது எவ்வாறு அதனை செயல்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து செயல்படுத்துவது அவசியம்  ஆகும். 

காதல்

 வாலிப காதல் வாழ்க்கை காதல்: 

வாலிபத்தில் வந்தாலும் அதற்குபின் வந்தாலும் அன்பாக உணர்ந்து வர வேண்டும் அதுதான் காதல் ஆகும்.  வாலிபத்தில் வருகின்ற காதலில் பொறுப்பு குறைவாக இருக்கும். ஆனால் வயதாகி வரும் பொழுது காதல் பொறுப்புகளின்  இருப்பிடமாக இருக்கும். இது நம்மை இனிமையான இடத்திற்கு கொண்டு செல்லும். ஆகவே எப்பொழுது காதல் வந்தாலும் இருக்க வேண்டியது பொறுப்புணர்வு அது இருந்தால் போதும் வாழ்க்கை வளம் பெறும். 

மேலும் படிக்க: காதலர் தினத்தை இதுபோல கொண்டாடி உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.!

காதலர் தின வாழ்த்துக்கள்: 

காதலர் தின வாழ்த்துக்களில் இது இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அதாவது இந்த நாளில் காதல் சொல்ல போகிறவர்கள், ஏற்கனவே காதலில் இருப்பவர்கள் யாரானாலும் சரியாக திட்டமிட வேண்டும். உங்கள் வாழ்க்கையில் இருவருக்கான இல்லறப் பொறுப்பு மற்றும் இலக்கு ஆகியவற்றை அறிந்து திட்டமிடும் பொழுது  காதல் வாழ்க்கை இல்லற வாழ்க்கையிலும் இனிதாக அமையும். இல்லறம் இனிதாக அமையும் பொழுது சுகமான தருணங்கள் கிடைக்கப் பெறலாம். 

மேலும் படிக்க: இமைகளை நோக்கி இதயத்திலிருந்து சொல்லவும் காதலை

இல்லறத்தில் இருக்க வேண்டியது ஒற்றுமை, பொறுப்புணர்வு சரியான புரிதல், விட்டுக் கொடுத்தல் ஆகியவை சரியாக இருந்தால் இழப்பதற்கு என்று எதுவும் இருக்காது.

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன