காதல் கல்யாணத்திற்கு பின்பும் தொடர உதவும் மூன்று விஷயங்கள் இவை தான்!

  • by
follow this to have love even after marriage

இந்த பரபரப்பான வாழ்வில் பரபரப்பில்லாத மனம் அவசியம். பரபரப்பில்லாத
மனதிற்கு எப்போதும் துருபிடிக்காத காதல் அவசியம்.  இதென்ன புதுமையாக இருக்கிறது துருப்பிடிக்காத காதல் என்று யோசிக்கிறீர்களா?

முக்கோண காதல் கதை நமக்கு பரிச்சயமான ஒன்று. ஆனால், காதலின்
முக்கோணம் அதை பலருக்கும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அப்படி தெரிந்திருந்தால் காதலிக்கும் போது வரும் பிரிவுகளும் காதலுக்கு
பின்வரும் கல்யாணத்தில் ஏற்படும் பிரிவுகளும் வந்து இருக்க வாய்ப்புகள்
இருந்திருக்காது. 
 
யாரிடமும் உணரமுடியாத ஒரு நெருக்கத்தை ஒருவரிடம் மட்டும் நாம் உணரும்
போதுதான் அது வாழ்வின் முக்கிய புள்ளியான காதல் என்று நமக்கு புரிய
வைக்கிறது. காதல் வாழ்வில் எல்லா வயதிலும் நிச்சயம் இருக்க வேண்டிய ஒரு
உணர்வு. இந்த நெருக்க உணர்வு பரிச்சயமே இல்லாத பழகியே பார்க்காத 
பக்கத்து வீட்டு பெண்ணிடமும், ஆணிடமும் வருவதை உளவியலாளர்கள்
இனக்கவர்ச்சி என்று கூறுகிறார்கள். இது டீன் ஏஜில் வரும் விஷயம் மட்டுமல்ல
நம் வாழ்வின் தலை எழுத்தை மாற்ற போகும் ஒரு விஷயம். 

மேலும் படிக்க – காதலர் தினத்தை வேறு வழியில் கொண்டாடுவது எப்படி?
 

நெருக்கம் ஈர்ப்பு அற்பணிப்பு

இந்த மூன்று விஷயங்களும் இக்கால காதலில் அதிகமாகவே இருக்கிறது.
ஆனால் இதற்கான முழுமையான அர்த்தம் புரிந்து இருப்பதாக தெரிவதில்லை.
இந்த மூன்றில் அர்த்தம் மட்டும் சரியான முறையில் புரிந்து கொள்ளப்பட்டதாக
இருந்தால் காதலர்களுக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினமாக தான் இருக்கும். 

நெருக்கம்( Intimacy )

இதை நம்மில் பலர் தவறாக புரிந்து கொள்கிறாம். உடலளவில் ஒன்றி இருப்பது
மட்டும் நெருக்கமாகாது. நெருக்கம் என்பது மனதளவிலும் ஒன்றி இருக்க
வேண்டும். அப்போதுதான் அந்த உறவு சிறப்பானதாக இருக்கும். காதலின் போது
இருக்கும் நெருக்கம் கல்யாணத்திற்கு பின்வரும்  பணி சுமையால் கலைந்து
மறைந்து போவதுதான் நெருக்கம் குறைய முதல் காரணம். காதலின் போது இருக்கின்ற இருக்கும் கவர்ச்சியும் சில வருடங்களில் காணாமல் போய்விடும். இவ்வளவுதானா வாழ்கை என்கிற நிலைவந்து விடும். 

இவற்றை எல்லாம் தவிர்க்க நெருக்கத்தின் அடையாளங்களாய்
ரசித்தவற்றையும், ரகசியங்களையும், குறும்புகளையும் தன்னுடைய மனைவி
ரசிப்பார் என்பதற்காக அழகிய பொய்களைபும் ஒளிவு மறைவின்றி சொல்லும்
இடங்களில் தான் நெருக்கம் அதிகரிக்கும். 

ஈர்ப்பு ( Passion) 

கண்டதும் காதல் என்ற நம் கலாச்சாரத்திற்கு மிக முக்கியமாக இருப்பது இந்த
ஈர்ப்பு தான். ஆணும் பெண்ணும் காலத்திற்பகற்ப வசீகரங்களை தங்களுக்குள்
நிரப்பிக் கொண்டால் தான் இந்த ஈர்ப்பு கல்யாணத்திற்கு பின் தொடர செய்ய
முடியும். காதலிக்கும் போது தன்னை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நிச்சயம் நினைப்பதுண்டு. ஆனால்,
கல்யாணத்திற்குப் பின் நம்மில் பலர் வீட்டில் திருத்தமாய் இருப்பதே இல்லை.

மூன்று நாள் அழுக்கு கைலியுடனும் முதுகில் பல ஓட்டைகளை கொண்ட பனியனுடன் 
திரியும் தம்பதியினரிடம் இந்த ஈர்ப்பு சற்று குமறவாக தான் உள்ளது. 
ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள், கல்யாணத்திற்குப் பின்பு இதெல்லாம் மறந்து
போவது கூட கணவன் மனைவி இடையே ஈர்ப்பை குறைகிறது.திருத்தமாக
ஆடைஅணிவதும், புன்கையுடன் முகத்தை வைத்திருப்பதும், பொலிவுடன்
கூடிய உடலமைப்பும் ஈர்ப்பை எப்போதும் இயல்பாய் வைத்திருக்க உதவும். ப
கட்டாய் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் பொலிவாய்
இருக்க வேண்டும் என்பது நிச்சயம் அவசியம் தான். பகட்டாய் இருக்க தான்
பொருளும் நகையும் தேவைப்படும் பொலிவிற்கு ஒரு சிறு புன்னகை மட்டுமே
போதுமானது .

மேலும் படிக்க – எல்லைகளை கடந்த எல்லோருள்ளும் பயணிக்கும் காதல்!

அற்பணிப்பு(Commitment ) 

நம் தமிழ் கலாச்சாரத்தில் பந்தத்தை தொலைத்து விடக்கூடாதென இன்னும் பல
அழுத்தங்களையும் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு வாழ்கை நடத்தும்
தம்பதியினர் சகிப்புத் தன்மையுடன் இருக்க காரணம் இந்த அற்பணிப்பு தான்.
காதலிக்கும்போது அவளுக்காக எதையும் செய்வேன் என்று கூறும் பல
கல்யாணத்திற்குப் பின் எதற்காக செய்ய வேண்டும் என்று கூறும் போதுதான்
அர்ப்பணிப்பு என்ற சொல் காணாமல் போகிறது .இந்திய திருமணங்கள் பல
தோற்றுப் போகாமல் இருப்பதற்கு இந்த  கமிட்மெண்ட் என்ற அர்ப்பணிப்பு தான்
தான் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

மற்ற நாடுகளில் எல்லாம் இவை அனைத்தும் காதல் திருமணத்தில் தான்
நடக்கும். ஆனால் நம் இந்திய திருமணத்திலும் அது அப்படியே தலைகீழாக
இருக்கிறது. முன்பின் தெரியாதவர்களை கமிட் செய்ய வைத்து அவர்கள்
இடையே ஈர்ப்பை நெருகத்தையும் உருவாக்கிய பின்தான்  இந்தியாவில் 99
சதவீத திருமணங்கள் இப்படித்தான் நடக்கின்றன. இதில் நெருக்கம் ஈர்ப்பு
அற்பணிப்பு இவை மூன்றும் இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயமாக
இருக்கிறது என்று கூறிவிட முடியாது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன