ஈர்ப்பு விதியை தன் வசப்படுத்த நாம் செய்ய வேண்டிய செயல்கள்..!

  • by
Follow this Law Of Attraction to attract people

நாம் எப்போதும் யாராவது ஒருவர் நம்மைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும் அல்லது நம்மை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுவோம் ஆனால் பெரும்பாலான நேரங்களில் நாம் யாரையும் ஈற்க முடியாமல் தனிமையில் வாழ்வோம். எனவே உங்களைச் சுற்றி பல வியூகங்களை அமைத்து எல்லோரும் உங்களை பற்றி பேசி உங்களை சுற்றி இருப்பதற்கு நாம் ஒரு சில செயல்களை செய்ய வேண்டும், அது என்னவென்று இங்கே காணலாம்.

உங்கள் வாழ்க்கைக்கு தேவையானதை பற்றி சிந்தியுங்கள்

உங்களிடம் எது இருக்கிறதோ அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதை தவிர்த்து இல்லாதவற்றை பற்றி எண்ணுவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ஒரு சிலரோ இருப்பதை குறைவாக மதிப்பிட்டு அதைவிட பெரிய ஒரு பொருளை வாங்கும் எண்ணத்தில் இருப்பார்கள் எனவே எப்போதும் உங்கள் சிந்தனையில் நீங்கள் வைத்திருக்கும் பொருள் மிக அழகானது, அற்புதமானது அதில் எந்த கோளாறும் இல்லை என்று நினைத்துக்கொண்டே இருங்கள். இதன் மூலமாக உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் நடைமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும்.

மேலும் படிக்க – எல்லைகளை கடந்த எல்லோருள்ளும் பயணிக்கும் காதல்!

கனவு நிஜமானால் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்

எப்போதும் நீங்கள் என்னவாக வேண்டும் அல்லது எப்படி வாழவேண்டும் என்பதை கனவு கானுங்கள். இதன் மூலமாக உங்கள் வாழ்க்கையை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு கனவிலும் மற்றவர்களுடன் எப்படி நியாயமாக நடந்து கொள்வது, நீங்கள் நினைத்துப் பார்க்காத உயரத்தை எட்டிய பிறகு உங்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை, எல்லாவற்றையும் கனவுகள் மூலமாக கண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பல சமயங்களில் புதுப்புது சிந்தனைகள் கனவுகள் மூலமாகத்தான் கிடைக்கும். எனவே அதை உடனே எழுதி வைத்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை உயர்த்துங்கள்.

செய்ய வேண்டியவையை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்

ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நேரத்திற்கு ஏற்றார் போல் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களை ஊக்குவித்து உங்கள் செயல்களை விரைவில் மற்றும் எளிதில் செய்ய உதவும்.

ஐந்து நிமிட அமைதி

ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து நிமிடம் யாரிடமும், எதைப்பற்றியும் பேசாமல் கண்களை இருக்க மூடிக்கொண்டு எதைப்பற்றியும் சிந்திக்காமல் அமைதியாக அமர்ந்திருங்கள். இதன் மூலமாக உங்கள் மனம் ஒருநிலைப்பட்டு உங்கள் சிந்தனையின் ஆற்றல் அதிகரிக்கும்.

மேலும் படிக்க – காதலர் தினத்திற்கான ட்ரெண்டிங் பரிசுப் பொருட்கள்!

உங்கள் கஷ்டங்களை போக்கும் வழிகள்

திடீரென உங்களுக்கான மனக்கஷ்டங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அதில் இருக்கும் நன்மைகளை ஆராயுங்கள். இது நடந்ததினால் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் எல்லாம் ஏற்பட்டது என்பதை உணர்ந்து உங்கள் கவலைகளை மறந்து விடுங்கள்.

அதிகம் கற்றுக் கொள்ளுங்கள்

ஏதாவது ஒரு வேலையை செய்யும்போது அது தோல்வி அடைந்தால் உடனே அதை எப்படி சரி செய்யலாம் என்பதை உடனடியாக கற்றுக் கொள்ளுங்கள். இதன் மூலமாக நீங்கள் எப்போதும் நேர்மறையாக இருக்க முடியும்.

மனம் விட்டுப் பேசுங்கள்

உங்களுக்கு ஏதாவது ஒன்று மற்றவர்களிடமிருந்து தேவை என்றால் அவர்களிடம் அதை மறுக்காமல் கேட்டு விடுங்கள். இதனால் அவர்களுக்கு எந்த இழப்பும் இல்லை எனில் அது உங்களுக்கு லாபகரமாக இருக்கும்.

மேலும் படிக்க – இதுதான் உண்மையான நட்பு..!

ஒவ்வொருநாளும் உங்களிடம் நீங்களே பேசிக் கொள்ளுங்கள். அதாவது கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்பதை உங்களிடம் இனைந்து திட்டங்களை தீட்டுங்கள்.

இதைப்போல், சிறிய உடற்பயிற்சிகள் மற்றும் உங்களுக்கு எது தேவையோ அந்த புகைப்படங்களை வீடு முழுக்க ஒட்டி வைப்பது, எல்லாவித தடைகளையும் தகர்த்து முன்னேறுவது மற்றும் எப்போதும் கடினமான செயலை தேர்ந்தெடுத்து அதை உங்களால் முடிந்தவரை விரைவில் முடிப்பது என எல்லாவற்றையும் புதுவிதமாக பார்த்து உங்கள் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள். இதன் மூலமாக எல்லா வித ஈர்ப்பும் உங்களை சுற்றி இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன