என்றும் பதினாறாக பளப்பளக்க இதை செய்யுங்க

  • by

  நமது  வாழ்வில்  ஆளமையுடன் ஆள் பாதி ஆடை பாதி என்று மாறிவிட்டது. அதிலும் அழகங்கரிப்பு என்பது  அனைவருக்கும் அத்தியாவசியம் ஆகிவிட்டது. அழங்கரிப்புகாக வீட்டில் இருந்து வந்தாலும் சரி, காஸ்மெட்டிக்ஸிலிருந்து வந்தாலும் சரி சரியான தயாரிப்பு எனில் கண்ணை மூடி கொண்டு பயன்படுத்த மக்கள் தயாராக இருக்கின்றனர்.  ஏனெனில் காலம்ற்றத்திற்கேற்ப தங்கள் திறனுடன் ஒப்பனையிலும் ஒப்பற்ற  பார்வை செலுத்த இன்றைய இந்தியாவில் இது என்றும் மங்கா டிரெண்டிங் எனலாம். 

  சரும பாதுகாப்பு

இன்றைய  சூழலில் எல்லோரும் இளமையாக இருக்க விரும்புகிறார்கள். தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதில் அதிக கவனமுடன் இருக்கின்றனர்,  அதற்காக சரியான தூக்கம், மற்றும் உடற்பயிற்சி அனைத்திற்கும் மெனக்கெட்டு  நேரத் ஒதுக்கீடு செய்கின்றனர்.

 பயன்படுத்தும் ஒப்பனை வகைக்கு ஒருவர் செலுத்த வேண்டிய சில கவனம் இருக்கின்றது. ஒப்பனை மூலம் அந்த இளமையை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது என்பது குறித்து அறிவொம் வாங்க. 

பவுண்டேசனில் பக்காவா இருக்கனும்: 

 நீங்கள் பயன்படுத்தும்  பவுண்டேசன் சரியானதாக உங்கள் தோல் நிறத்திற்கு ஏற்றதா, நீண்ட நேரம் சருமத்தில் நிக்குமா என்பதை எல்லாம் ஆராய்ந்து  வாங்குங்க. பவுண்டேசன் பயன்படுத்துவது அவசியம், அதில்  உள்ள தகவல்கள் தரம் குறித்து  தெரிந்து கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க:திராட்சை வினிகர் தெரியுங்களா சத்துக்கள் நிறைந்தது!

 என்னதான் பவுண்டேசன் போட்டாலும் அது வெளியே தெரியாத மாதிரி சரி செய்ய வேண்டும் அது போன்ற  ஒன்றை வாங்க வேண்டும்.  இயற்கை சரும  லுக் வேண்டும்.  பவுண்டேசனில் தரம் அது தோலுக்கு எந்த அளவிற்கு ஏற்றது. அதன்  போக்கு எவ்வாறு இருக்கும் என தெரிந்து அதனை வாங்கி பயன்படுத்தவும். 

இளைய வயதினர் பவுண்டேசன் பயன்படுத்தும் பொழுது பெரிய அளவில் இல்லாமல்  சாதரணமாக கோட்டிங் பயன்படுத்தினால் போதுமானது ஆகும்.  30 மற்றும் 40 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு,  லிக்விடிட்டி பவுண்டேசன் பயன்படுத்துவது  நல்லது ஆகும்.  

பவுண்டேசன் போடுவதற்கு முன்பு தோல் பாதுகாப்பு அவசியம் நமது பவுண்டேசன் நீண்ட நேரம் இருக்க வேண்டும் அதற்கேற்றார் போல்  பிரைமர்  பயன்படுத்த வேண்டும் ரோஸ் பிரைமர் அல்லது ஆலோவீரா  எந்த கலவையானாலும் சரி அது உதவியாக இருக்கும். 

சருமத்திற்கேற்ற பிளஸ்  தேவைப்படும்: 

சரும நிறங்களுக்கு இளமை பிரகாசத்தை சேர்க்க ப்ளஷ் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அதை மிகக் குறைவாக வைப்பது சிறப்பு அது மேலும் மற்றவர்  கவனத்தை ஈர்க்கும். அதற்கு பதிலாக கன்னத்தில் எலும்புகளில் அதைப் பயன்படுத்தவும், மேல்நோக்கி மற்றும் வெளிப்புறமாக இயக்கவும். மேலும்,   நாம் தேர்ந்தெடுக்கும் சேடோவில் கவனம் அவசியம் தேவை பிளஸ் செய்வதில் கவனமும்  சருமத்திற்கேற்றது அவசியம் ஆகும். 

கன்சீலர்: 

கன்சீலர் முகத்தில் உள்ள கருமையை மறைக்கும் இது ஆங்காங்கே உள்ள கரும் புள்ளிகள் மறைக்க பேட்ச் வொர்க் செய்ய உதவும். இந்த கன்சீலர்  சந்தையில் விதவிதமாக பிராண்டுகளில் கிடைக்கின்றன உங்கள் தோலுக்கேற்ற தயாரிப்பை வாங்கிப் பயன்படுத்துங்கள். 

ஐ சேடோ, ஐபிரஸ் எனப்படும் கண் அழகு என்பது எல்லா வயதினரும்  அதிக கவனம் செலுத்த வேண்டிய  முக்கியமானது  ஆகும் கண்ணில் ஐ சேடோ அழகாக போட்டு  ஐ லைனரில் லைனிங் செய்வதெலாம்  ஒரு கலைங்க அதை முயற்சி செய்யுங்க  சிறந்த முயற்சி அழகை அதிகப்படுத்தும். புருவங்களுக்கு பெண்சில் அதன் பின்  இமைகளுக்கு காஜல் என பலவுள்ளன. 

லிப்ஸ்டிக் உதடுகளுக்கு அழகு என்பது அவசியம் அதுவும்  இதழ்களுக்கு ஏற்ற கலர் காம்பினேசன் பார்த்துதான் அதையும் போட வேண்டும்.லிப் பாம்  லிப் லைனர் என பல உள்ளன.   இவையெல்லாம்  சரியாக செய்யத்தெரிந்தால் நீங்களும் எப்பொழுதும் லுக்காக இருக்க முடியும். 

மேலும் படிக்க: பற்க்களின் பாதுகாப்புக்கு இதை செய்யுங்கள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன