பாடி லோஷனை எப்படி பயன்படுத்துவது மற்றும் அதை எப்படி தேர்வு செய்வது?

follow these instructions on how to use a body lotion

சருமப் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதினால் நாம் இயற்கையாக பல முயற்சிகளை எடுத்து நம் சருமத்தை பாதுகாத்து வருகிறோம் ஆனால் சில சமயங்களில் அதற்கு அடங்காத சரும பிரச்சனைகள் கடைகளில் கிடைக்கும் பாடி லோஷன்கள் மூலமாக நாம் சரி செய்ய முடியும். அதை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் மற்றும் அதை நாம் கடைகளில் எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பொதுவாக நமக்கு எப்போது பாடி லோஷன் தேவைப்படுகிறது என்றால் நம் சருமம் மிகவும் வறட்சியாகவும் அல்லது எண்ணைப்பசை யாகவும் இருக்கும் போது பாடி லோஷன் அதிகமாக தேவைப்படுகிறது. ஏனென்றால் நமக்கு தேவைப்படும் ஈரப்பதம் நம் சருமத்தில் இல்லாமல் போனால் நமது சருமம் வறட்சியடைந்து அது காயங்களை உண்டாக்கும் இதிலிருந்து தப்பிப்பதற்காக தான் நாம் பாடி லோஷனை பயன்படுத்துகிறோம்.

மேலும் படிக்க – பண்டைய கால மனிதர்கள் வழுக்கைகளை அகற்றும் விசித்திர வழிகள்.!

எப்போதும் நம் சருமத்திற்கு ஏற்ற சரியான பாடி லோஷனை வாங்கவேண்டும் இதில் இரண்டு வகைகள் உள்ளன முதலில் இருப்பது கெட்டியாக இருக்கும் இரண்டாவது வகை தண்ணியாக இருக்கும். கெட்டியானதை விட தண்ணியானதே  சிறந்ததாக இருக்கும் ஏனென்றால் அது மிக எளிதில் நமது சருமத்திற்கு உள்நுழைந்து நம்முடைய சரும பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். ஆனால் உங்கள் சருமத்திற்கு கெட்டியாக இருக்கும் பாடி லோஷன் தான் சரியாக வரும் என்றால் நீங்கள் அதை தேர்வு செய்து கொள்ளலாம்.

பாடி லோஷனை பயன்படுத்தும் சரியான நேரம், எப்போது நம் குளித்து முடித்துவிட்டு வெளியே வருகிறோமோ அப்போது இதை பயன்படுத்துவது சரியாக இருக்கும். ஒரு சிலரும் நம் உடம்பில் இருக்கும் ஈரத்தை துடைப்பதற்காக துண்டுகளை வைத்து நன்கு துடைத்து விடுவார்கள். இது நம் சருமத்தில் இருக்கும் ஈரத்தை உறிஞ்சும் சருமத்தையும் சேதப்படுத்திவிடும். ஆதலால் இதற்கு முன் நாம் பாடி லோஷனை பயன்படுத்துவது நல்லது.

பாடி லோஷனை நாம் உள்ளங்காலில் இருந்து தடவவேண்டும். பிறகு நம் முழுங்கால், தொடை என நமது முகம் வரை இதை பயன்படுத்த வேண்டும். பொதுவாக ஒரு சிலர் கை, கால்களில் மட்டும் இதைப் பயன்படுத்துவார்கள் அப்படி செய்யாமல் நம்முடைய உடல் முழுவதும் இதை பயன்படுத்துவது நல்லது.

மேலும் படிக்க – முகப்பருக்களை வருமுன் தடுப்பது எப்படி?

பாடி லோஷனை நீங்கள் கடைக்கு சென்று வாங்கும்போது அதில் குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்கு பார்க்க வேண்டும். அதில் பாதாம், பிஸ்தா, எண்ணெய்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி செய்திருந்தால் அதை நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம். அதேசமயத்தில் ஏதாவது ரசாயனங்கள் மற்றும் இரவுக்கு என்று தனியாக இருக்கும் படி லோஷன்களை தவிர்ப்பது நல்லது. சில கடைகளில் ஆர்கானிக் மாடி லோஷன்கள் கிடைக்கின்றன இது வீட்டிலேயே செய்வதினால் எந்த ஒரு இரசாயனங்களும் இல்லாமல் தூய்மையாக இருக்கும் எனவே இதை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.

1 thought on “பாடி லோஷனை எப்படி பயன்படுத்துவது மற்றும் அதை எப்படி தேர்வு செய்வது?”

  1. Pingback: நீண்ட நேரம் லிப் வண்ணமாக இருக்க இதை பயன்படுத்தி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன