அரசாங்கம் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்..!

  • by
follow government instructions to tackle corona virus

எல்லா நாடுகளிலும் அதிகளவில் பரவி வரும் இந்த கரோனா வைரஸ் இன்றுவரை பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறித்துள்ளது. இதன் ஆரம்ப நிலையில் எல்லா நாட்டு அரசாங்கங்களும் கரோனா வைரஸ் பாதிப்படையாமல் இருப்பதற்கு ஏராளமான விதிகளை உண்டாக்கியது அதனால் மக்கள் அதை சரியாக பயன்படுத்தாதினால் தான் இந்த வைரஸ் இந்த அளவுக்கு பெருகி உள்ளது. எனவே இந்த தவறை நாம் செய்யாமல் இந்திய அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதை கேட்டு நடந்து கொள்ள வேண்டும்.

சுகாதாரத்துறை

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு சுகாதாரத்துறை இருக்கும். அதை தவிர்த்து இந்தியா முழுவதும் இருக்கும் சுகாதாரத்துறை மற்றும் மாநில துறைகளுக்கு அளிக்கப்படும் கட்டளைகளை அவர்கள் பயன்படுத்தி நமக்கு அறிவுரை கூறுகிறார்கள். எனவே இதை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே செய்து நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இடையே ஏற்படும் போட்டி அல்ல எனவே இதை அறிந்து இது ஒரு நாட்டு பிரச்சினையாக எடுத்துக்கொண்டு நம் நலன் கருதி சொல்பவர்களை மதித்து அதை பின்தொடர்வது புத்திசாலித்தனம்.

மேலும் படிக்க – கரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பாக அலுவலகத்திற்கு செல்லும் வழிகள்..!

கட்டுப்பாட்டு விதிகள்

இந்தியா முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை அனைத்துவிதமான ரயில் சேவைகளுக்கு தடை விதித்துள்ளார். உணவுகள் மற்றும் பொருட்களை கொண்டு வரும் ரயில்கள் மட்டுமே மார்ச் 25ஆம் தேதி வரை இயங்கும். எனவே நீங்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும். மற்ற மாநிலத்தில் இருந்து உங்கள் வீட்டிற்கு செல்வதாக இருந்தாலும் மார்ச் 31-ஆம் தேதி வரை பொறுத்திருந்து செல்வதே சிறந்தது.

வெளியே சுற்றுவதை தவிருங்கள்

தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்று நம்முடைய அரசாங்கம் கட்டளையிட்டுள்ளது. தேவையில்லாமல்  வெளியே சுற்றாமல் அவர்களின் கட்டளையை மதித்து உள்ளே இருப்பது சிறந்தது.

இளைஞர்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும்

பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளித்துள்ளார்கள். அதற்கான காரணம் அவர்கள் சுதந்திரமாக வெளியே சுற்றுவதற்கு அல்ல அவர்களுக்கு எந்த ஒரு நோய் தொற்றுகள் உண்டாகாமல் இருப்பதற்கு இந்த விதியை விதித்தார்கள். எனவே இளைஞர்கள் பொறுப்புடன் இச்சமயங்களில் செயல்பட வேண்டும். வெளியே சுற்றும் போது நண்பர்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற அனைத்தையும் தவிர்த்து தங்கள் குடும்ப நலனைக் கருதி இளைஞர்கள் வீட்டிலேயே இருப்பது நாட்டிற்கு செய்யும் மிகப்பெரிய செயலாகும்.

மருத்துவர்களுக்கு உதவுங்கள்

உங்களுக்கு கரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை சந்திப்பது சிறந்தது. அதேபோல் மருத்துவர் சொல்வதைப்போல் கேட்டு அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு மருத்துவர் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளை பார்க்கும் சூழ்நிலை ஏற்படும் என்பதை அறிந்து நாம் நம் கடமையை சரியாக செய்ய வேண்டும்.

தூய்மையாக இருங்கள்

தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளியே செல்பவர்கள் மீண்டும் வீட்டிற்கு வரும்பொழுது தூய்மையாக இருக்க வேண்டும். எனவே உங்கள் ஆடைகள், கையுறைகள், முகமூடிகள் போன்ற அனைத்தையும் சுத்தப்படுத்துங்கள். அதைத் தவிர்த்து நேரடியாக உங்கள் வீட்டில் உள்ள நண்பர்களுடன் பேசுவதை தவிர்த்து உங்களை முழுமையாக தூய்மைப்படுத்திய பிறகு அவர்களுடன் உரையாடலாம். அதேபோல் நீங்க வாங்கி வரும் பொருட்கள் ஒன்றுக்கு பலமுறை சுத்தப்படுத்தி பயன்படுத்துங்கள்.

மேலும் படிக்க – உங்கள் தினசரி வாழ்க்கையை கரோனா வைரஸ் எப்படி பாதிக்கிறது..!

இடைவெளிவிட்டு இருங்கள்

குழுவாக இல்லாமல் ஒரு நபர்களிடம் இருந்து மற்றொரு நபர்களுடன் எப்போதும் இடைவெளிவிட்டு இருக்க வேண்டும். கூட்டங்கள் அதிகமாக உள்ள இடங்களைத் தவிர்க்க வேண்டும். இந்த நிலை நிரந்தரமல்ல எனவே ஒரு சில வாரங்கள் இதை கடைபிடித்தால் நம் நாட்டில் ஏற்படும் பேரழிவை நம்மால் தடுக்க முடியும்.

ஒவ்வொரு குடிமகனும் தங்கள் கடமையை உணர்ந்து வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளியே செல்பவர்கள் அரசாங்கம் சொல்லும் வழிகளை பின்தொடர்ந்து பாதுகாப்பான முறையில் சென்று வரவேண்டும். கரோனா பாதிப்புகள் உள்ள அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இது மற்றவர்களுக்கு பரவாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். எனவே அனைத்தையும் சரியாக கடைப்பிடித்து நம் நாட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன