உடல் எடை குறைக்க எளிய வழிகள்

  • by

பிட்னசுக்கு அதிக முக்கியத்துவம் தருபவரா நீங்கள்  வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக உங்களால் ஒர்க் அவுட் செய்ய முடியவில்லையா, இனியும் ஒர்க் அவுட் செய்ய முடியாத சூழலா, ஆனால்  உடல் எடை குறைய வேண்டுமா நிச்சயம் குறைக்க முடியும். ஆனால் அதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில முறைகளை பின்பற்றி வாருங்கள் முதல் 3 மாதத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் உடலில் கிடைக்கும். 

உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க வேண்டும். ஆனால் ஒர்க் அவுட்கள் செய்ய முடியாத வேலைப்பளு ஆகிய சிக்கல்கள் இருக்குமானால்  நீங்கள் கொஞ்சம் உறுதியாக இருந்தீர்கள் என்றால் மூன்று மாததில் என்னால் உடை குறைவுக்கு உத்திரவாதம் கொடுக்க முடியும்.

மேலும் படிக்க: உடற்பயிற்சிகள் இல்லாமல் ஒரே இடத்தில் வேலை செய்கிறீர்களா!

உடல் எடைகுறைப்பு

 பசித்து சாப்பிடுங்கள்: 

நீங்கள் ஓட வேண்டாம் நடக்க வேண்டாம் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறைகளை பின்பற்றுங்கள். தினமும் உங்களை நீங்கள் கண்காணிக்க வேண்டும்.   உங்கள் அலுவலகத்துல் வீட்டில் என எங்கு இருந்தாலும் உங்களுக்கு பசிக்கும் வரை காத்திருந்து சாப்பிடச் செல்லுங்கள். பொதுவாக உடல் உழைப்பு  செய்வோர்களுக்குத்தான் பசி வேளைக்கு எடுக்கும். ஆனால் மூளை வேலை செய்வோர்களுக்கு மூன்று வேளையும் பசிக்காது. ஆகையால் உங்களுக்கு பசித்துச் சாப்பிடச் செல்லுங்கள். முதலில் பசி என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். 

கண்ணில் பட்டதை சாப்பிட   முனைய வேண்டாம். கொஞ்சம் முறையாக  சாப்பிடுங்கள் பசி எடுக்கும் பொழுது வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கும்.  உடல் வேலை செய்யும் கலைப்பு என்பது ஏற்படாது. நீங்கள் அலுவலக வேலை செய்பவராக இருந்தால் ஒரு நாளைக்கு இரு முறைதான் பசிக்கும். 

உடல் எடைகுறைப்பு

மென்று முழுங்கவும்: 

பசித்து சாப்பிடுவது போல்  சாப்பாட்டை மென்று சாப்பிடுங்கள்.  சாப்பாட்டை நன்கு மென்று கூழாக்கி முழுங்கவும்.  சாப்பிடுவதற்கு முன்பு அரை மணி நேரம் முன்பு அரை மணி நேரம் பின்பு   கழித்துதான் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த முறை செய்து வாங்க. மென்று விழுங்கும் பொழுது வாயானது மூடிய நிலையில் இருக்க வேண்டும். வாயை திறந்து பேசிக் கொண்டே சாப்பிடக்கூடாது. இது கடினமானது இதனைப் பின்பற்றுங்கள் உடல் லேசாகும் குறைவாக சாப்பிடுவீர்கள். 

மேலும் படிக்க: பிட்னசில் அசத்தும் அமலா பால் ஆக்டிவாக களத்தில்

தொடர்ந்து செய்ய வேண்டும்: 

பசித்து சாப்பிடுதல், உணவை மென்று விழுங்குதல் மற்றும் தண்ணிர் சாப்பிடும் பொழுது குடிக்காமல் இருத்தல் இவை முறையாக மூன்று மாதம் செய்து  வந்தால் கேரண்டியாக சொல்கிறேன் உடல் எடையில் மாற்றம் கிடைக்கும். 6 மாதத்தில் 10 கிலே வரை உடல் எடை குறைக்க முடியும். 

உடல் எடைகுறைப்பு

தண்ணீர் குடிக்கும் பொழுது வாயில் வைத்து குடியுங்கள் மெதுவாக ஒவ்வொரு சிப்பாக  விழுங்கவும். மொடமொட வென விழுங்க கூடாது. தண்ணீர் முறையாக குடித்து வந்தால் தேவையான சத்துக்களை பெறலாம். உடலுக்கு தேவையான ஆற்றல்களைப் பெறலாம். 

கழிவுகளை   வெளியேற்றுதல்:

உடல் எடை குறைய வேண்டும் நீங்கள் நினைத்தது  போல் 20 கிலோவரை குறைய் வேண்டும் என்றால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டும்.  உடல் கழிவுகளை வெளியேற்ற தினமு இரவு சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடி வெது வெதுப்பான ஒரு கிளாஸ் தண்ணீரில் சாப்பிட்டு வர வேண்டும் .  சாப்பிட்டு வந்தால் கழிவுகள் வெளியேறும், உடல் எடை குறையும் ஆரோக்கியமாக செயல்பட முடியும்.  

கழிவு நீக்கம் செய்ய கடுக்காய் பொடியுடன் இனிமாவையும் எடுத்து வந்தால்  உடல் எடை குறையும். ஆனால் இதனை தொடர்ந்து செய்து வந்தால் தான் முடியும். ஆகையால் கொடுக்கப்பட்டுள்ள    குறிப்புகளை முறையாகப் பின்பற்றி வாருங்கள். தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். மென்று விழுங்கும் பொழுது அதிக சாப்பாடு சாப்பிட முடியாது வாயும்  வயிறும் தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்ளும். சாப்பிடும் பொழுது கவனம் முழுமையும் நம்மிடம் இருக்க வேண்டும். 

மேலும் படிக்க: வாழ்வில் யோகம் பெற யோகா செய்யுங்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன