சமந்தாவின் பஸ்ட் லுக் பீல் இப்படி இருக்குங்களாம் ..!

fisrt look samantha in jaanu telugu movie

தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் பிரபலமான சமந்தா தமிழிலும் அதே படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து மாஸ்கோவின் காவிரி, பானா காத்தாடி என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான சமந்தா இன்று மிகப்பெரிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தனது நடிப்புத் திறமையால் எட்டாத உயரத்திற்குச் சென்று உள்ள சமந்தா சிறந்த கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதை எடுத்து நடிப்பதில் முக்கியத்துவம் அளிக்கிறார்.

கடந்த வருடம் வெளியான சீமராஜா, யுடர்ன், பேபி, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் அனைத்தும் சமந்தாவின் நடிப்பை பெரிதாக பேசியது. இதில் யுடன் மற்றும் பேபி திரைப்படம் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

மேலும் படிக்க – பிக் பாஸ் யாஷிகா ஆனந்த் வாழ்க்கை முறைகள்..!

கடந்த வருடம் பிரேம் குமார் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையில் தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்த 96 திரைப்படத்தின் ரீமேக்கை ஜானு என்ற பெயரில் எடுத்து வருகிறார்கள். இதில் திரிஷா கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்து வருகிறார். அதேபோல் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் எங்கேயும் எப்போதும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சர்வானந்த் அவர்கள் நடிக்கிறார்.

தமிழில் இயக்கிய பிரேம்குமார் அவர்களே இயக்குவதினாள் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. கலாச்சார அடிப்படையில் இரு மாநிலங்களும் ஓரளவுக்கு ஒத்துப்போகும் என்பதினால் ஜானு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வர க்ரியேஷன் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேஷ் ரசிகர்களை விட தமிழக ரசிகர்களை இந்த பதிவை அதிகமாக பாராட்டியுள்ளார்கள். 96 படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்தப் படத்தை தெலுங்கு மொழியிலும் பார்ப்பதற்கு மிக ஆவலாக இருக்கிறார்கள்.

ஒருபுறம் இவரின் கணவர் நாகசைதன்யா வெற்றிப்படங்களை தந்து கொண்டு வரும் நிலையில், சமந்தாவும் அவருக்கு இணையாக படங்களில் நடித்து வெற்றிப் படமாக மாற்றி வருகிறார். இந்த வரிசையில் 96படம் இவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என்று சமந்தா கூறியுள்ளார். உணர்வுகளும், உண்மையின் கசப்புத் தன்மையும் மிக அற்புதமான முறையில் வெளிப்படுத்தி இருக்கும் திரைப்படம் தான் 96. எல்லோரின் முதல் காதல் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். ஆனால் ஒரு சிலரோ அந்த முதல் காதலின் நினைவாக இன்றுவரை வாழ்ந்து வந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கும் படம்தான் 96.

மேலும் படிக்க – விஜய் தேவர் கொண்டாவின் வாழ்க்கை முறைகள்..!

ஆக்க்ஷன், மசாலா, காமெடி என பலர்வற்றை எதிர்பார்க்கும் ஆந்திர ரசிகர்களுக்கு இந்தப் படம் எவ்வித மாற்றத்தை உண்டாக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காதல் உணர்வு என்பது எல்லோருக்கும் இருக்கும் என்பதினால் இந்த படம் நிச்சயம் வெற்றி அடையும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன