சத்துக்களை தரும் மீன் எண்ணெய் அறிவோமா!

  • by

 மீன் எண்ணெய் பற்றி நம் மக்கள் அறிந்து கொள்ளுதல் என்பது அவசியம் ஆகும்.  இது ஆரோக்கியமானது இவற்றில் உள்ள சத்துக்கள் நாம் அதனை முழுமையாக அறிந்து பயன்படுத்துத;ல் அவசியம் ஆகும். 

பெரும்பாலான இயற்கை மருத்துவ முறைகளில் அதிக அளவு மூலிகைகள், செடி கொடிகளை மருந்துகளாக பயன்படுத்தி வருகின்றோம்.  நமது வாழ்வில் சில சமயங்களில் விலங்குகளிலிருந்து பெறப்படும் சில பொருட்களும் நோய்களை குணமாக்குவதற்கு பயன்படுத்துகின்றோம். 

மேலும் படிக்க – போதைப் பழக்கத்தில் இருந்து வெளியே வருவது எப்படி..!

இந்திய  நாட்டில் பல ஆண்டுகளாகவே மீன் எண்ணெய் மாத்திரைகளை உடல் நலம் பெறுவதற்கு மருத்துவரின் அறிவுரைப்படி சாப்பிட்டு வரும் வழக்கம் இருக்கிறது. இது தயாரிப்பு எளிதானது ஆகும்.  மீன் எண்ணெய் என்பது மீன்களின் ஈரல் பகுதியில் இருந்து பெறப்படுகிறது. இந்த மீன் எண்ணெயானது பொதுவாக கானாங்கெளுத்தி, சூரை மீன் போன்ற மீன்களில் இருந்து மீன் எண்ணெய் எடுக்கப்படுகின்றன. 

அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் அட்லாண்டிக் காட் எனப்படும் பண்ணா மீன் கல்லீரலில் இருந்து பெறப்படும் மீன் எண்ணையே மிகுந்த வீரியம் மிக்கதாக இருக்கின்றன அதனை மக்கள்  பயன்படுத்துகின்றன. 

 மீன் எண்ணெய்களானது பண்ணா மீன் ஈரல் இயற்கையிலேயே அதிக அளவு வைட்டமீன்கள் கொண்டது ஆகும். இந்த பண்ணா மீனில் ஈரலில் இருந்து தயாரிக்கப்படும் ஒன்றாகும்.  இது குழந்தகளுக்கு ஏற்படு ரிக்கெட்ஸ் என்னும் எலும்பு குறைப்பாட்டு நோயை குணப்பத்துகின்றது. 

உடலில் ஏற்படு காயங்களை குணப்படுத்துவதில் இத் முக்கியப் பங்கு வகிக்கின்றது. உள்காயம் மற்றும் வெளிக்காயத்தின் போது உடலில் வீக்கங்கள் ஏற்படுகின்றன அதனை குணமாக்குகின்றது. 

உடலி ஏற்படும் வீக்கம் என்பது அடிப்பட்ட இடங்களில் வெளிப்புற கிருமிகள் பாதிக்காமல் இருக்க இயற்கையாக நிகழும் ஒரு நோயெதிர்ப்பு செயலாக இருக்கிறது.  

சில  விபத்துக்களுக்கப் பின்  நேரம் அளவு கடந்த காலத்திற்கு வீக்கம் இருப்பது உடலுக்கு பல்வேறு வகையான பாதிப்புகளையும், நோய்களையும் ஏற்படுத்தக்கூடும். மீன் எண்ணெய் மாத்திரைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கின்றது.

எலும்பை பலப்படுத்தும்:

எலும்புகளுக்கு ஒரு பெரிய ஆறுதலாக இது இருக்கின்றது. ஆண் பெண் இருவருக்கும் ஏற்படும் எலும்பு பிரச்சனைகளை தீர்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கின்றது. உடலில் வீக்கங்கள் எங்கிருந்தாலும் அவை குறைகிறது இது உடலுக்கு ஆற்றல்  தருகின்றது. மீன் எண்ணெயில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் இருக்கின்ற ப்ரீ ராடிக்கல்ஸ் மூலக்கூறுகளை கட்டுப்படுத்தி, வீக்கங்களில் நோய் பாதிப்பு ஏற்படாமல் காக்கின்றது. 

மேலும் படிக்க – கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!

பொதுவாக ஆண், பெண் அனைவருமே முப்பது வயது தாண்டிய உடனே அவர்களின் எலும்புகள் வலிமையை அதிகரிக்க என்ன செய்யலாம் என பல்வேறு  ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. எலும்புகளை பலபடுத்தும் மாபெரும் ஒரு சக்தியாக இது உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.  மீன் எண்ணெயானது பெரியவர்களின் மூட்டு வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

பெண்களுக்கு உற்ற மருந்து:

 பெண்களுக்கு மாதவிடாய்   நின்ற பிறகும் எலும்புகள் மிகவும் வலிமையிழக்க வாய்ப்புள்ளது அத்தகைய நேரத்தில்,  30 வயதைக் கடந்த ஆண்களும், பெண்களும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொள்வதால் அதிலிருக்கும் வைட்டமின் டி சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கால்சியம் சத்துக்களோடு  நமது உடலின் எலும்புகளை வலிமை அடைய செய்து உடலுக்குக் கூடுதல் பலத்தை தரவல்லதாக இருக்கிறது.

ஆரதைர்ட்டிஸ் என அழைக்கபடும் மூட்டுகளின் வலி பலருக்கு பாதிப்பை உண்டு செய்கின்றது. மேற்கத்திய ஆய்வின்படி  மருத்துவ ஆய்வில் ஆர்த்தரைடீஸ் பிரச்சினை இருப்பவர்களுக்கு தொடர்ந்து ஒரு மீன் எண்ணெய் மாத்திரை வீதம், மூன்று மாதங்களுக்கு கொடுத்து வந்தால்  அவர்களுக்கு ஏற்படும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் மற்றும் காலையில் கை, கால் மூட்டுக்களில் ஏற்படும் விரைப்புத் தன்மை வெகுவாக குறைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது.  மூட்டுவலி, கீழ்வாதம் பிரச்சினைகளால் அவதிபடும் மருத்துவர்களின் ஆலோசனை படி மீன் எண்ணெய் மாத்திரைகள் சாப்பிட்டு வருவதால் மேற்கூறிய ஆர்த்தரைடீஸ் பிரச்சனை குணமாகும். 

இதய நோய்கள் தடுக்கும் மீன்எண்னெய்:

ஜப்பான் நாடுகளில் இதய நோய்கள் அதிகமான பாதிப்பு ஏற்படுகின்றது. அதனை தடுக்கும் சக்தானது மீன் எண்ணெய்க்கு உண்டு . மீன்ணெயில் உள்ள ஓமேகா 3 கொழுப்பானது இதயப் பிரச்சனைகளை தீர்க்கவல்லது.  மேலும் இது கெட்ட கொழுப்பை கரைக்கின்றது. நரம்புகளின் அடைப்பை குணப்படுத்துகின்றது. ரத்த ஓட்டத்தை சீராக்குகின்ற்து. 

மனதை குணப்படுத்தும்: 

மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளி இருந்து பாதிக்கப்படுவோர்க்கு இது  குணமாக்கும் தன்மையுடன் செயல்படுகின்றது. மனோ ரீதியான் சிக்கலை தீர்ப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கின்றது. வைட்டமின் டி, ஒமோகா 3 கொழுப்பு அமிலங்களை அதிகப்படுத்துகின்றது. மற்றும் மூளையில் செரட்டோனின் ஹார்மோன்களின் உற்பத்த்ஜியை அதிகரிக்கின்றது இதனால் மன அழுத்தம் குறைகின்றது. 

அலசரை குணப்படுத்துகின்றது.   உணவு பசிக்கும் போது சாப்பிடாமல் விட்டால் அலசர் வரும் அதனால்    மிகுந்த அவதிகுள்ளாக நேரிடும் அதனை தடுத்துகின்றது. வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்றுகின்றது. சாப்பிட உணவு செரிமானத்திற்கு  உதவுகின்றது. 

சருமத்தை  பாதுகாவலன்: 

கோடை காலங்களில் வெய்யில் பாதிப்பு அதிகமாக காணப்படும். சருமம் அதிக அளவில்  வறண்டு காணப்படும். சருமத்தை பாதுகாக்கின்றது. புற ஊதா கதிர்கள் தோலில் பாதிக்காமல் இருக்க உதவுகின்றது.  வைட்டமின் டியானது உடலில் தேவைப்படும் அளக்வை பெற மீன் எண்ணெய் சாப்பிட்டு வருதல் அவசியம் ஆகும். சருமத்தை பாதுகாத்து பொலிவுறச் செய்யும். 

மேலும் படிக்க – கூடுதல் எடையை குறைக்க வேண்டுமா!

மூளை வளர்ச்சி, உயிரணுக்கள்  பாதுகாக்க: 

மூளை வளர்ச்சியை தூண்டும் மீன்  எண்ணெயில் உள்ல கொழுப்பு சத்துக்கள், கொழுப்பு அமிலங்கள் அதிகமாக காணப்படுகின்றன. மனிதர்களின் மூளை வளர்சிக்கு இது உதவுகின்றது.  ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. ஞாபகத்திறன் அதிகரிக்கின்றது. இது ஆண்களின் உயிரணுக்களை பாதுகாக்கின்றது மேலும் உற்பத்திக்கும் உற்றதுணையாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன