டிவிட்டர் இணைய தளத்தில் வார்த்தை போர் சின்மயி, அஜீத் ரசிகர்களால் இணைய உலகம் பரபரப்பு..!

fight between singer chinmayi and ajith fans in twitter

சிறந்த பாடலை பாடியதற்காக தேசிய விருது, பல ஃபிலிம்பேர் அவார்ட்ஸ், விஜய் அவார்ட்ஸ் மற்றும் நமக்கு பிடித்த ஏராளமான பாடல்களைப் பாடிய பெருமையைக் கொண்ட சின்மயி சமீபகாலமாகவே இணையதளத்தில் தங்களுடைய பெயர் பாதிக்கும் வகையில் ஏராளமான கருத்துக்களை வெளியிடுகிறார்கள். கடந்த ஆண்டு வைரமுத்துவின் மேல் புகார், என தனுஷ், திவ்யதர்ஷினி மற்றும் பல சினிமா பிரபலங்களை வாட்டி வதக்கி எடுத்தார். பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை எதிர்த்து, இதற்காக குரல் கொடுக்கும் எண்ணங்களில் சினிமா துறையில் இது போன்ற பல பிரச்சனைகள் இருக்கிறது என்று வெளிப்படையாக பேசி பல பிரச்சினைகளில் சிக்கினார். பலரும் இவருக்கு மனவியாதி என்றபோது மாதர் சங்கத்தினர் மற்றும் சில சினிமா பிரபலங்கள் இவருக்கு உதவி செய்யும் வகையில் இவருக்காக குரல் கொடுத்தனர். இருந்தாலும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் இவரின் கருத்துக்கள் நீடிக்கவில்லை.

சின்மயின் பாடல்கள் மட்டும் வெற்றி பெற்று கொண்டு இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் டுவிட்டர் வாயிலாக நடிகர் அஜித்தின் ரசிகர்களிடம் சண்டையிட்டு வந்தார். இதற்கு காரணம் நடிகர் மாதவன் பதிவிட்ட ஒரு ட்வீட் தான். கடந்த வாரம் நடிகர் மாதவன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதற்கு தலை என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தார். உடனே ஒரு பிரபல நகைச்சுவை நடிகரின் புகைப்படத்தை வைத்துள்ள ஒரு நபர் தலை என்ற வார்த்தையை அஜித்துக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும், வேறு யாருக்கும் அதை பயன்படுத்தும் தகுதிகள் இல்லை என்று எதிர்க்கும் எண்ணத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க – மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வாழ்க்கை முறை..!

அந்த புகைப்படம் மற்றும் அஜித் ரசிகர் பதிவிட்ட வார்த்தைகளை சின்மயி மற்றவர்களுக்கு பகிர்ந்து அஜித் ரசிகர்களை கிண்டல் செய்தார். உடனே அஜித் ரசிகர்கள் அனைவரும் சின்மயிக்கு எதிராக வார்த்தை போர் தொடர்ந்தார்கள். ஒரு சில பிரபல நடிகர்களின் பெயரை பயன்படுத்தி சின்மயி அவ்வப்போது தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள் என்ற கருத்தை வெளியிட்டார்கள். ஒரு சிலரோ அவருக்கு விளம்பரப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு தேவைகள் எதுவும் இல்லை அவரும் ஒரு சிறந்த கலைஞர் என்றார்கள்.

அஜித் ரசிகர்கள் இழிவுபடுத்தும்படியான வார்த்தைகளை பயன்படுத்தி சின்மயியை கிண்டல் செய்தார்கள். இதனால் அதை அப்படியே பேஸ்புக்கிலும் சின்மயி பதிவு செய்தார். இந்த செய்தி பத்திரிக்கைகளிலும் வெளியாகத் தொடங்கியது. இருந்தாலும் அஜித் ரசிகர் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு சின்மயியை இப்படி இழிவு படுத்தியவர் உண்மையில் அஜித் ரசிகராக இருக்க முடியாது என்று பல உண்மையான அஜித் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். இருந்தாலும் மற்றவர்களின் கருத்தையும், எண்ணத்தையும் நாம் அனுமதிக்க வேண்டுமே தவிர அதற்கு எதிராக பேசுவது தவறு. இதைதான் ட்விட்டரில் பலரும் செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் வாழ்க்கை முறை..!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள் இருக்கும். அந்த கருத்துக்கு எதிராக நம்ம வாதாடலாம்மே தவிர அந்த கருத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது தவறு. இதையேதான் அஜித் ரசிகர் என்ற அடையாளத்தை வெளியிட்ட அந்த நபரும் செய்துள்ளார்கள். எனவே தனி மனித சுதந்திரத்தை மதித்து எல்லோரின் கருத்தயும் மதிப்பது வைப்பது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன