உணவில்லாதவர்களுக்கு உணவளியுங்கள்..!

  • by
feed food to others during this lockdown

நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக முடங்கி உள்ளது, இதனால் வெளி மாநிலத்தில் வேலை செய்பவர்கள் வருமானத்திற்காகவும் மற்றும் உணவுக்காகவும் திண்டாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்வதற்காக ஏராளமான தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் இது போன்ற மக்களுக்கு இலவசமாக உணவுகளை அளித்து பாதுகாத்து வருகிறார்கள்.

மனித நேயம்

இந்தியாவில் பல பகுதிகளில் வேலை செய்யும் மக்கள் தங்கள் கிராமங்களுக்கு நடந்து செல்கிறார்கள். கிட்டத்தட்ட 700 கிலோமீட்டர் வரை இவர்கள் உணவு மற்றும் தண்ணீர் எதுவும் இல்லாமல் நடைபயணமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் மனித நேயமுள்ள மக்கள் தங்கள் வாகனங்களில் உணவுகளை தயாரித்து சாலைகளில் கிடப்பவர்களுக்கு உணவுகள், பிஸ்கட் மற்றும் குடிநீர் பாக்கெட்களை தந்து உதவுகிறார்கள். மனிதனைக் காக்க வேண்டுமென்றால் மனிதநேயம் உருவாக வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் மனித நேயம் உருவானால் மட்டுமே உலகில் உயிர்கள் நிம்மதியாக வாழும்.

மேலும் படிக்க – லாக் டவுன் ஏன் இவ்வளவு வலியை தருகிறது..!

தமிழ்நாட்டின் நிலை

இந்தியா முழுவதும் 26 ஆயிரம் முகாம்கள் அமைத்துள்ளார்கள். இதில் கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தங்கும் வசதிகள் உண்டு. இதை தவிர்த்து இங்கே இருப்பவர்கள் அனைவருக்கும் இலவச உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் மத்திய அரசு வழங்குகிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற நிலை, ஏற்கனவே சென்னையில் உண்டான வெள்ளத்தினால் ஏற்பட்டது. அச்சமயத்தில் தமிழகத்தில் இருக்கும் ஏராளமான மக்கள் சென்னைக்கு உணவுப்பண்டங்களை அனுப்பி உதவினார்கள். இதை தவிர்த்து பெங்களூர் மற்றும் ஒடிசா போன்ற நகரங்களிலிருந்து உதவிகள் குவிந்தன இது போன்ற மக்கள் இருக்கும் வகையில் மனித நேயம் அழியாது.

அம்மா உணவகம்

தமிழகத்தில் உணவுகளுக்காக யாரும் கஷ்டப்பட கூடாது என்பதற்காக அம்மா உணவகம் எப்போதும் அவர்களுக்காக திறந்திருக்கும். இங்கே யார் வேண்டுமானாலும் வந்து உணவு அருந்தலாம். எனவே வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு உழைப்புக்காக வந்த எவரும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால் இந்த செயலை தமிழக முதலமைச்சர் செய்துள்ளார். இங்கு அளிக்கப்படும் உணவுகள் பாதுகாப்பானது மற்றும் ஆரோக்கியமானது என்பதை நிரூபிக்கும் வகையில் அவரே இந்த உணவகத்திற்கு வந்து உணவுகளை ருசித்தார்.

நன்கொடைகள்

கொரோனா வைரஸ் இந்தியாவை பாதிக்காமல் இருப்பதற்காக இந்தியாவிலிருக்கும் ஏராளமான தொழிலதிபர்கள் தங்களால் முடிந்த பண உதவிகளை செய்து வருகிறார்கள். டாட்டா நிறுவனம் மற்றும் விப்ரோ நிறுவனம் கிட்டத்தட்ட ஆயிரம் கோடிகளுக்கு மேல் நன்கொடையாக அளித்து உள்ளார்கள். இதைத் தவிர்த்து ஏராளமான சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – லாக் டவுனின் போது பிரிட்ஜில் என்னென்ன வைத்துக் கொள்ளலாம்..!

எனவே உணவு தட்டுப்பாடு என்பது இந்தியாவில் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது. அதிலும் தன்னார்வமுள்ள சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் தங்களால் முடிந்த சிறிய உதவிகளை செய்து வருகிறார்கள். எனவே இதுபோன்ற சூழ்நிலையில்தான் மனித நேயத்தின் வலிமை மக்களுக்கு புரிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன