பஞ்சபூதங்களை உடலில் முத்திரைகளாக்கி வாழலாம்

  • by

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களை   கொண்ட பால்வெளி அண்டமானது சிறப்பானது ஆகும். நமது உடலை காக்கும் ஐந்து சக்தி ஆட்கொண்டுள்ளது ஆகும்.  நமது உடலின் கட்டை விரல், நெருப்பை ஆதிக்கமாக கொண்டது ஆகும். சுட்டுவிரல் காற்றை கொண்டதாகும். நடுவிரல் ஆகாயத்தையும், மோதிர விரல் நிலத்தையும், சுண்டு விரல் நீரை  ஆதிக்கமாக கொண்டு செயல்படும் அமைப்பாகும். 

ஆதிமுத்திரை: 

 நினைவுத்திறன் வாழ்வில் நிலைக்க சுட்டுவிரல் கட்டை விரலை  தொட்டு கண்மூடி அமர்ந்தால் இது மூளைக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும்.  நினைவாற்றல் அதிகரிக்கும், மன அழுத்தம் ஆகியவை குறையும். மூட்டுவலி அதிகரிக்கும். உடலில் ஏற்படும்  வலிகள் அனைத்தும் சரியாகும். இந்த முத்திரை தோல் நோயை முழுமையாக சரி செய்யும். உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். 


பத்மாசனம் அல்லது வஜ்ராசனம்  தியானத்தில் ஆசனத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து கைகளை  படத்தில் வைத்து இதனை செய்து வந்தால் பாதுகாப்பு உணர்வு அதிகரிக்கும். 

சின் முத்ரா:

பத்மாசனம், சுகாசனம்   போன்ற ஆசனத்தில் கிழக்கு நோக்கி தரை விரிப்பில் அமர்ந்து  உட்கார அமர வேண்டும். கண்கள் மூடி கட்டை விரல் ஆள்காட்டி விரலின் நுனியைத் தொட்டவாறு இருக்க, விரல்களை அழுத்தாமல் இருத்தல் இருக்க வேண்டும். 
மனதினுள்  மந்திரங்கள்   உச்சரித்தவாறு இருப்பது மேலும் மிகுந்த பலனைத் தரும். இரு கைகளிலும் முத்திரை வைத்து  ஐந்து நிமிடம் இந்த நிலையில் மந்திரம் உச்சரிக்கலாம்.

சின் முத்ரா செய்வதால்  வளி மண்டலத்தில் உள்ள அண்ட ஆற்றலை உடல்  பெறும் உடலில் ரத்த ஓட்டம் சீராகும்

பிராண முத்ரா:

பிராண முத்ராவை  தரை விரிப்பில் கிழக்கு நோக்கி அமர வேண்டும். சுவாசம் இயல்பாக இருக்கட்டும். கண்கள் மூடிய நிலையில் இருக்கட்டும். கட்டை விரலின் நுனிப் பகுதியை, சுண்டு விரல் மற்றும் மோதிர விரலின் நுனிப் பகுதியுடன்  இணைத்து வைத்துக் கொள்ளவும். ஆள்காட்டி விரலும், நடுவிரலும் நேராக நீட்டியவாறு இருக்கட்டும். 15 நிமிடங்கள் வரை இந்நிலையில் இருக்கவும்.

நரம்புத் தளர்ச்சி தடுக்கப்படும் , உடல் சோர்வு நீங்கும் ,நினைவாற்றல் பெருகும் மூட்டுவலிகள் குணமாகும். பிராண சக்தி அதிகரிக்கும். 

மகா சிரசு முத்ரா:

 கிழக்கு நோக்கி அமைதியாக அமர வேண்டும். கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் மூன்றின் நுனிப் பகுதியையும் ஒன்றாக இணைத்து வைத்துக் கொள்ளவும். மோதிர விரலின் நுனிப் பகுதி உள்ளங்கையைத் தொட்டவாறு இருக்க வேண்டும். சுண்டு விரல் நீட்டியபடி இருக்கட்டும்.  பத்து நிமிடம் வரை இந்த நிலையில் இருக்கும் பொழுது சிறப்பு பெறலாம். 

 தீராத தலைவலி குணமாகும்,  தலை பாரம் சைனஸ் பிரச்னை நீங்கும், மனஅமைதி ஏற்படும். ஜீரண உறுப்புகளின் செயல்பாடு துரிதமாக இயங்கும். 

மேலும் படிக்க: துளசி, மஞ்சள், கிராம்பு கொண்டு தயாரிக்கும் கசாயம்..!

இருதய முத்ரா:

 கண்களை மூடி அமர்ந்து  கட்டை விரல், மோதிர விரல், நடுவிரல் மூன்று விரல்களின் நுனிப் பகுதியும் தொடுமாறு இணைத்து வைத்தால் அது இதய முத்திரை எனப்படும். இது  கட்டை விரலின் அடிப்பகுதியில் உள்ள கோட்டை ஆள் காட்டி விரலை மடக்கி தொட்டவாறு வைத்துக் கொள்வது முறையாகும்.. சுண்டு விரல் நீட்டியவாறு இருக்க வேண்டும்.. 

 நுரையீரல் சிறாகும்,   அதிக கொடுப்பு இரத்தத்தில் படிவதைத் தடுக்கும்  இதயத்தைல் ஏற்படும் அடைப்பள் சீராகும். ரத்த ஓட்டம் சீராக  ஓடும். 

மேலும் படிக்க: தினமும் செய்யப்படும் உடற்பயிற்சியினால் உங்கள் நோய்களை தடுக்கலாம்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன