அஷ்டமியில் யாருக்கு என்ன செய்யனுமுனு பார்போம்

  • by

 பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்களைக் தன்னக்கத்து உள்ளடக்கியது ஆகும்.  திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம் ஆகியவை சேர்ந்ததே பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகின்றது. பஞ்சாகப்படி அஷ்டமியின் பயன்கள் யாருக்கு என்ன செய்யவுள்ளது இந்த திதி என அறிவோம். அதன்படி வாழ்வை வளமாக்குவோம். இது குறித்து மேலும் அறொவோம்.

ஆன்மாக்களுக்கு சிறந்தது:

நாம் வாழும் உலகில்   இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான அனைத்து ஆற்றல்களையும் வழங்குவதற்காக, உயிர்ச் சக்தி தருவதற்காக சூரியனையும், மன வலிமை தருவதற்காக சந்திரனையும் படைத்தார். அவர்களின் பணிக்காலத்துக்கான வரையறையையும் ஏற்படுத்தினார்.

 ஒவ்வொரு  திதிக்கும் நம் ஆன்மா தொடர்பு கொண்டு செயல்படுகின்றது. 

மேலும் படிக்க – பூஜை செய்வதற்கு ஏற்ற பொருட்கள்..!

அமாவசை தர்ப்பணம் ,பௌர்ணமி தரிசனம், மற்றும் தான தர்ம செயல்கள் எல்லாம்  திதியுடன் சேரும்பொழுது தெய்வத்தை சென்று அடையும் என்று சொல்லப்படுகின்றது.

 நமது ஆன்ம  அமைதி அடைய வேண்டியது அவசியம் ஆகும்.   தேய் பிறை புதன் கிழமை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார் என்ற  மரபு நம்மில் உள்ளது . இவரை வணங்கி தனக்கு அருளும் ஆசியும் சேர வேண்டும் என ஆயுளை அழிவில்லா பொருளை, ஆன்ம சாந்தியை, தரும் சனி தேவர் பணிந்தார் .

சோதிடம் சொல்லும் முறைகள்:

சோதிடத்தில் சனியும் புதனும் நண்பர்கள் என்றும் புதன் கிழமை வரும் அஷ்டமி அன்று செய்யும் காரியம்கள் அனைத்தும் மேன்மை தரும் என்று சொல்கிறது.

வியாழன் அன்று வரும் அஷ்டமி வளரும் பலனை (அட்சயம் )தரும் தன்மை உடையது என்றும் ,அதனை பின்பற்றுவது சிறப்பான பலன்கள் கிடைக்கச் செய்யும்.

வெள்ளியன்று வரும் அஷ்டமி குபேர தன்மைகளை தரும் என்றும் சோதிட நூல்கள் சொல்கிறது .

பொதுவாக அஷ்டமி  கம்சனை வதம் செய்ய கிருஷ்ணன் பிறந்த தினம் என்றும் ,தாய் மாமனுக்கு ஆகாது என்றும் சிலர் சொல்வர் .  108 அஷ்டமிக்கு அம்மை அப்பனை (சிவ சக்தி)தரிசனம் செய்வதவர்களை சனியும் அஷ்டம விதியும் ஒன்றும் செய்யாது அது விலகி செல்லும் என்று  மகா முனிவர் அகத்தியர் சொல்கிறார் .

மேலும் படிக்க – திருவோண விரதத்தின் சிறப்புகள்..!

சனியின் சாபம் ,கோபம் உள்ளவருக்கு மட்டும் தான் அஷ்டமியில் சில விபத்துகள் நடக்கும்.  சிலருக்கு இரவு துக்கம் சரியாக வருவதில்லை. சிலருக்கு காரிய தடைகள் வருகிறது என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன