மகத்துவமான மாசி மகம் கொண்டாட்டங்கள்

  • by

கும்பகோணத்தில் மாசி மகம் திருவிழா கும்பகோணத்தில் உள்ள சிவன் பெருமாள் கோவில்களில்  கோலகலத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. மகத்தில் பிறந்தவர் ஜெகத்தை ஆள்வார் என்பது பழமொழி ஆகும். எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும்   மாசி மாதம் மகம் நட்சத்திரமானது சிறப்பு வாய்ந்தது ஆகும். 

தச்சனின் மகளாள் உமாதேவியா மாசி மாதம் மகத்தில் தாட்சயிணியாக பிறந்திருப்பார்.   சிவபெருமானுக்கு தாட்சணியாக பிறந்த உமாதேவியை மணமுடித்து வைத்தார் தச்சன். மாசி மாதத்தில் விஷ்ணுவின் வாஹாக அவதரித்த நாளாகும்.  

மாசியில் மோட்சத்தை அளிக்கும் கேதுபகவான்  நட்சத்திரமான மகத்தில் கடலாடுவது சிறப்பாகும்.  தீர்த்தமாடி குல தெய்வத்தை வேண்டிவந்து தானங்கள் செய்வது சிறந்தது ஆகும்.  இந்த மாசி மகமானது சிவன் விஷ்ணு முருகருக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் கும்பகோணத்தில் நடைபெறும் தீர்த்தவாரி திருவிழா நடைபெறும்.  மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். பெண்களின் சுமங்கலில் வழிபாட்டை மாசி மாதத்தில் நல்ல யோக திதியில் வெள்ளிக் கிழமையில் தாழி சரடு மாற்றலாம். 

கும்ப கோணத்தில் மாசி மகத் திருவிழாவானது சிறப்பு வாய்ந்த விழாவாகும். 12 சிவன் கோயிகள்,  5 பெருமாள் கோவில்களில் விழாவானது கொண்டாட்டமாக இருக்கும். மாசி மகத்தன்று அதிகாலை 4.30மணிக்கு தொடங்கி பக்தர்கள் நீராட தொடங்குவார்கள். உற்சவர் புறப்பாடு தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெறும். 

மேலும் படிக்க: திருவோண விரதத்தின் சிறப்புகள்..!

மார்ச் 8 ஆம் நாள் விரத நாள் காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வர வேண்டும். நாள் முழுவதும் சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். சிவன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வது சிறப்பாகும்.  ஒரு நேரம் சாப்பிட்டு வர வேண்டும். மாசி மகத்தன்று தீர்த்தவாரி உற்சவத்தில் நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைப் பெறலாம். 108 திவ்ய தேசங்களில் நீராடுவது சிறப்பாகும். 

ராமர், ராவணனை வதம் செய்வதற்காக சிவனருடள் பெற வேண்டி அகத்திய முனிவரின் ஆலோசனையை அடுத்து காசியில் தங்கி விஸ்வேசுவரரை தியானித்து உருத்திராம்சம் பெற்றார். 

மேலும் படிக்க: தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன