சிவராத்திரியில் வில்வ பூஜை செய்து வளம் பெருக

  • by

சிவபெருமானுக்குரிய வில்வ இலை அர்ச்சனை என்பது மிகவும் சிறப்பு  வாய்ந்தது ஆகும். வில்வ இலையை கொண்டு செய்யும் அபிசேகம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒன்றாகும். சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வந்தால் ஏழு ஜென்ம பாவங்களும் போகும் என்பது நம்பிக்கையாக பின்பற்றபட்டு வருகின்றது. வில்வ இலையானது  சிவனின் அருள் பெற்று விளங்குகின்றது. 

சிவபெருமானுக்கு அர்ச்சனைக்கு உகந்தது வில்வம். வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன.

சிவபெருமானுக்குரிய இந்த வில்வ மரமானது மிகுந்த அருள் தரக்கூடியது. 
பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியன் உதிப்பதற்கு முன்னதாக பறித்து வைத்துக் கொள்வது நல்லது ஆகும். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்துவது  நல்லது ஆகும். 

வில்வமரம்

தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது நல்ல பயனைத் தரும்.  மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து பக்தியுடன் வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது  நம் முன்னோர்கள் காலம் முதல் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த சிவராத்திரிக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கின்றது.  சிவராத்தி கொண்டாட்டத்தில் வில்வதிற்கு தனியிடம் உண்டு.

வில்வ வழிபாடும் பயன்களும்:

சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும் இதனை  படைத்து வணங்குதல் வாழ்வில் சிறப்பான ஏற்றம் பெற செய்யும். ஒரு வில்வத்தினால் பூஜை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும். வில்வத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்  ஆகும். 

மேலும் படிக்க: சிவராத்திரியை நாம் ஏன் கொண்டாடுகிறோம் அதன் சிறப்புகள் என்ன?

வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம் என அழைக்கப்படுகின்றது.  வில்வத்தினை  சிரேஷ்ட வில்வம்,  கந்தபலம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கும் ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம் ஆகும்.

தல விருட்சங்களில் ஒன்றாகும்:

வில்வமானது சிவபெருமானின் தலவிருட்சங்களுள் ஒன்றாகும். இதனை பூஜித்து  வருபவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள். வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன.

வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் கொண்டு சிறந்து விளங்குகின்றது.
நமக்கு ஏற்படும் ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்ன வழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருகருகாவூர் திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருகருகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது.

சிவன் திருவாதிரை நட்சத்திரம் ஆகும்.  திருவாதிரையானது எரி நட்சத்திரங்களாக இருக்கின்றது. சிவனின்   வெப்பத்தை தணிக்க முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டு வருகின்றனர். 

வில்வமரம்

சிவ பெருமான்  இமயமலையில் இருந்து வருகின்றார். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்கும், அர்ச்சனைக்கும் வில்வத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுகின்றது. 

  வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. 

மேலும் படிக்க:

அதிசயங்களுக்குள் அதிசயங்களான பழங்கால கோவில்கள் பாருங்க.

ஒரு வில்வம் ஒரு  கோடிபயன்: 

ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் ,துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும். வில்வத்தினை  பயன்படுத்தி நமது சிக்கல்களை அனைத்தும் நீக்கலாம். வில்வமானது பலவகையான நன்மைகளும் உண்டாகும்.வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது.

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.

வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.  வில்வத்தினை சிவனுக்கு சாற்றி வணங்குதல் சிறப்பானதாகும். 


வில்வமரம்

வீடுகளில் வில்வ மரம்: 

வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்ல பலன் தரக்கூடியது ஆகும்.. நம் வீட்டில் வில்வமரம் நட்டு வளர்ப்பதால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும். 

 வில்வ மரமானது அஸ்வமேதயாகம் செய்த பலன் உண்டாக்கித் தரும். வில்வத்தை ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியத்தை உண்டாக்கி தரும்.  கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்க பெற்று வாழ்வாங்கு வாழ்க்கை வாழ வில்வத்தைப் பயன்படுத்தி வளம் பெறலாம்.

வில்வ தரிசனமானது 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த மகாபலன் தரும். மேலும் இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கப் பெறலாம். சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சனை மூலம் சிவனின் திருவருட் சிவபெருமானின் திருவருளை கடாட்சத்தைப் பெறலாம். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை மேலும் எமபயம் ஒரு போதும் வராது. வில்வ மரம் விஜயம் தரும் ஒன்றாகும்.

மேலும் படிக்க: இறையருள் பெற இதை செய்தால் போதுமுங்க..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன