சங்கடஹர சதுர்த்தியின் விரதம்..!

  • by
fasting to be followed on sankadahara sathurthi

எந்த ஒரு சுப காரியங்களாக இருந்தாலும், நாம் முதலில் வைத்து வணங்கப்படும் கடவுள்தான் விநாயகர். இவருக்கு இருக்கும் விரதத்தின் பெயர் தான் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம். சங்கடஹர என்றால் கஷ்டங்கள் சேருதல் என்பதற்கான பொருள், எனவே நம் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தையும் தீர்ப்பதற்காக பவுர்ணமி முடிந்த நான்காம் நாள் செய்யப்படும் விரதம்தான் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம்.

முதன்மை மற்றும் எளிமையான விரதம்

விநாயகரைப் போலவே, விரதங்களுக்குள் முதன்மையானதும் எளிமையானதும் இந்த சதுர்த்தி விரதம்தான். முதன்முதலில் சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பிறகுதான், கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பொதுவான நீதியானது. அடக்கமின்றி தன்னைப் பார்த்து சிரித்த சந்திரனை, ஒளியில்லாமல் போகும்படி சபித்தார் விநாயகர். கடும் தவத்துக்குப் பிறகு ஒரு சதுர்த்தி தினத்தில், சந்திரனின் சாபத்தை நீக்கினார் கணநாதர். எனவே, சந்திர பலம் பெற விரும்புவோர் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க – நவகிரக கோள்களும் அவற்றிற்குரிய தானியங்களும்

விரதம் இருக்கும் முறை

சங்கடஹர சதுர்த்தியின் விரதம் செய்வதற்கு நாம் அன்றைய தினத்தில் அதிகாலை எழுந்திருக்க வேண்டும். பிறகு நன்கு குளித்து விட்டு அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். பிறகு பிள்ளையாரை 11 முறை சுற்றி வலம் வரவேண்டும். பிறகு அருகம்புல்லை விநாயகருக்கு அர்ச்சனை செய்ய கொடுத்து, பின்பு நெற்றியில் குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போடவேண்டும். இந்த விரதத்தின் போது நாம் காலையில் இருந்து மாலை வரை எந்த உணவுகளையும் உண்ணக்கூடாது.

படையல் படைக்கவும்

கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் பச்சரிசியை ஊறவைத்து அது நன்கு ஊறிய பிறகு அதில் வெள்ளத்தையும் மற்றும் வாழைப்பழத்துடன் சேர்த்து பிசைந்து பசுவுக்கு கொடுக்க வேண்டும். கணபதி யுடன் சேர்ந்து பசுவையும் வழிபாடு செய்வதன் மூலமாக கூடுதல் பலன் நமக்குக் கிடைக்கும். அதேபோல் வீட்டில் பால், தேன், கொய்யா, வாழை, சுண்டல் போன்றவைகள் மூலமாக நெய்வேத்தியம் செய்து விநாயகருக்கு படைக்கலாம். விநாயகருக்கு பிடித்த வன்னி இலையை கொண்டு பூஜை செய்வது சிறப்பாக இருக்கும்.

விநாயகருக்கு ஸ்லோகம்

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை,

‘மூஷிக வாகன மோதக ஹஸ்த 

சாமர கர்ண விளம்பித சூத்ர 

வாமன ரூப மஹேஸ்வர புத்ர 

விக்ன விநாயக பாத நமஸ்தே…’

மேலும் படிக்க – ஊரடங்கிள் மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா..!

என்ற ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கினால் எல்லாச் சங்கடங்களும் நீங்கி, சகல சௌபாக்யங்களையும் பெறலாம். இதைத் தொடர்ந்து, மாலை நேரங்களில் இவர்களுக்கு செய்யப்படும் பூஜை சிறப்பாக அமையும். அதன் பிறகு உங்கள் விரதத்தை நிறைவு செய்து படையல் செய்த உணவுகளை உண்ணலாம்.

அனைத்து கடவுள்களுக்கும் பாடம் புகட்டிய விநாயகரின் செயலை அறிந்து அவரை எல்லாவித சுபகாரியங்கள் மற்றும் கோவில்களில் முதலில் வைப்பார்கள். எனவே ஒவ்வொரு மாதமும் அமாவாசை அல்லது பௌர்ணமி நாட்களில் விநாயகருக்கு விரதமிருந்து அவரை வணங்குவதன் மூலமாக உங்கள் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும், செல்வமும் நிறைந்திருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன