அஜித்தின் வலிமை ரசிகர்களின் அதிர்ச்சிக்கு என்னதான் காரணம்.!

fans shocked after hearing this news from valimai team

சிறுத்தை சிவா உடன் தொடர்ந்து பல படங்களை நடித்து வந்த நடிகர் அஜித்குமார் திடீரென மாறுதலுக்காக அமிதாபச்சன் இந்தியில் நடித்து வெற்றியடைந்த பின்க் திரைப்படத்தை இயக்குனர் வினோத் அவர்களின் இயக்கத்தில் மொழிபெயர்த்து நேர்கொண்டபார்வை என்ற படத்தில் நடித்திருந்தார். சமூக அக்கறை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், விழிப்புணர்வு மற்றும் பெண் சுதந்திரம் என எல்லாவற்றையும் போற்றும் வகையில் இந்த படம் இருந்தது. நம் சமூகத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்ததினால் இந்த படமும் வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜீத் குமாரை வைத்து அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கினார் வினோத்.

எச் வினோத் இயக்கத்தில் அஜித்குமாரின் படத்துக்கு வலிமை என்ற பெயரை வைத்தார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தின் வெற்றியால் வினோத் அவர்களின் மேல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. என்னதான் நேர்கொண்டபார்வை வெற்றி அடைந்திருந்தாலும் அதன் கதை மற்றும் திரைக்கதை வேறு ஒருவருடையது. தத்ரூபமான முறையில் படமாக்கும் கலையை கொண்ட இவரின் வலிமை படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக நடிகர் அஜித் ஏகப்பட்ட கஷ்டங்களை எதிர்கொண்டு வருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க – இறுதிச்சுற்று ரித்திகா சிங் வாழ்க்கை முறை.!

வலிமை திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் அஜித். இவருக்கு ஜோடியாக காலா திரை படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக வரும் ஹீமா குரேஷி நடிக்கிறார். இவர் இந்தியில் பல தரமான படங்களில் நடித்துள்ளார், இதைத் தொடர்ந்து தமிழில் நடிக்கும் இரண்டாவது படம் வலிமை தான்.

வலிமை திரைப்படத்தில் பல ஆபத்தான சண்டை காட்சிகள் இருக்கும் நிலையில் இதற்காக நடிகர் அஜித்திற்கு பதிலாக துணை நடிகரை பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் இருந்தார் இயக்குனர். ஆனால், அஜித்தோ அவருக்கு டூப் யாரும் தேவையில்லை நானே அந்த காட்சிகளில் நடிக்கிறேன் என்று ரிஸ்க் எடுக்கிறார். உயிர் போகும் அளவிற்கு ரிஸ்கான சண்டை காட்சியில் அஜித் நடித்துவருகிறார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

வலிமை படத்திற்காக அஜீத் தன்னை மெழுகூட்டுவதற்காக தினமும் ஜிம்மிற்கு சென்று அதிகமான ஒர்க்கவுட்களை செய்து வருகிறார். இதனால் அவர் உடல் பெரிதளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் அவரின் வயது முதிர்ச்சியால் சில பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இருந்தாலும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் எண்ணத்தில் வலிமை படத்திற்காக அஜித் பெரிதளவில் உழைக்கிறார் என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க – ரவுடி பேபி சாய் பல்லவி வாழ்க்கைமுறை.!

இதுவரை அஜீத் இந்தளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் அளவிற்கு எந்த படமும் அமையாததால் கிடைத்த வாய்ப்பை மிக அற்புதமாக பயன்படுத்தும் வகையில் அஜித் தனது பங்களிப்பை வலிமை படத்திற்காக முழுமையாக அளிக்கிறார். தமிழகத்தில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட அஜித்தின் வலிமை படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன