ஒரே கல்லை குடைந்து கட்டப்பட்டிருக்கும் கோவில் !!!

  • by
famous valliammai temple made of single rock

வள்ளியம்மை கோயில் என்றழைக்கப்படும் இந்த இடம் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள  வாலாஜா பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. முருகரும் அவரது மனைவியான வள்ளி பிறந்து வளர்ந்த இடம் என்று இந்த இடம் சிறப்பு பெறுகிறது இந்த வள்ளியம்மை  என்ற கோயில். இந்தக் கோவிலில் முருகர் வள்ளி அம்மையுடன் நமக்கு காட்சி தருகிறார். 

சரவணப் பொய்கை குளம்

இங்கு அமைந்துள்ள குளத்திற்கு சரவணப் பொய்கை குளம் என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்தக் குளத்திற்கு அருகேயும் வள்ளியம்மையின் கோவில் ஒன்று அமைந்திருக்கிறது. இந்த குலத்தினை அடுத்த உள்ள படிக்கட்டுகளில் ஏறித்தான் முருகனை வழிபட முடியும். இந்தப் படிக்கட்டுகளில் ஏறிச் செல்லும் போது ஆங்காங்கே சில மண்டபங்களையும் நம்மால் காண முடியும். 

மேலும் படிக்க – புண்ணிய நதியான கங்கை பூமிக்கு வந்த வரலாறு!!

8 கால்  மண்டபம்

சில மண்டபங்கள் தற்போது புதுப்பிக்கப்பட்ட வையாக உள்ளன. ஆனால் அங்கு உள்ள 8 கால்  மண்டபம் மட்டும் மிகவும் பழமை வாய்ந்ததாக காணப்படுகிறது. மேலும் இங்கு உள்ள மண்டபங்களை புதுப்பிக்கும் பொழுது, இந்த எட்டுக்கால் மண்டபத்தையும் அகற்றும் பணி நடைபெற்றது. ஆனால் இந்த கல்லை அகற்றும் போது அங்கிருந்து வாசனை நிரம்பிய புகை வந்ததாகவும் அதனால் அதற்குள் சித்தர்கள் யாரேனும் தியான நிலையில் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. அவர்களை பார்த்ததாகவும் சிலர் கூறுகின்றனர். அதனால் அந்த இடத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அந்த எட்டு கால் மண்டபத்தை அப்படியே விட்டுவிட்டனர். அந்தப் பகுதியில் இப்பொழுதும்  சித்தர்கள் தவம் புரிந்து வருவதாக நம்பப்படுகிறது. இந்த படிகளை கடந்து நாம் கோயிலுக்குச் செல்லும் போது அங்கு பார்க்கும் விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த கோவில் ஒரு கல்லினால் குடைந்து செய்யப்பட்டிருக்கிறது. 

மேலும் படிக்க – நீரை நாம் ஏன் வழிபடுகிறோம், அதற்கான காரணம் என்ன..!

நுழைவாயில் 

இங்கு நுழைவாயிலில் உள்ள ஒரு சன்னிதியில் வள்ளி அம்மனின் உருவம் பாறையில் செதுக்கப்பட்டு உள்ளது. இங்கு அதற்கும் ஆடைகள் அணிவித்து தீபாராதனைகள் நடைபெறுகின்றன. வள்ளியம்மையை வணங்கிவிட்டு நாம் உள்ளே சென்ற பார்த்தோமேயானால், அந்த வழி மிகவும் சிறியதாக உள்ளது. உயரம் குறைந்தவர்கள் கூட குனிந்து செல்லும் வகையில் இதன் வாயில் அமைந்துள்ளது. அதன்பிறகுதான் நம்மால் முருகனை வணங்க முடியும். அங்குள்ள பாறைகள் நம் மேல் விழுந்து விடுமோ என்ற அச்சமும் நமக்கு உண்டாகும். பாறைகளைக் குடைந்து அதனுள் முருகனை வைத்து வணங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியிருக்கும் என்று நினைக்க நினைக்க நமக்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன