உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரசும், ஆயுதமாக மாறியுள்ள சோப்பும்!

  • by
facts about corona virus and how to be safe

கரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதுவரையில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3000 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. 57 நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி உள்ளதாக உல சுகாதார அமைப்பு இந்த வைரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

வெவ்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் மரணங்களும் 

சீனாவில் இதுவரையில் 80, 793பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த கரோனோ வைரசினால். இறந்தவர்களின் எண்ணிக்கை 3169.

இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்கள் 12000, இறந்தவர்களின் எண்ணிக்கை 827.

ஈரானில் பாதிக்கப்பட்டவர்கள் 9000 இறந்தவர்களின் எண்ணிக்கை 354. 

தென்கொரியாவில் பாதிப்புக்குள்ளானவர்கள் 7869. இறந்தவர்கள் 66 பேர் .

மேலும் படிக்க – சர்பத் குடிப்பதினால் நமக்கே கிடைக்கும் நன்மைகள்..!

ஸ்பெயின் ல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் 2182. இறந்தவர்களின் எண்ணிக்கை 49.

ப்ரான்ஸ் ல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1784. இறந்தவர்களின் எண்ணிக்கை 33.

ஜெர்மனியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1908 இறந்தவர்களின் எண்ணிக்கை 3 பேர் .

ஜப்பானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1278.இறந்தவர்களின் எண்ணிக்கை 19.

அமெரிக்காவிற்குள் பாதிக்கப்பட்டவர்கள் 1267. இறந்தவர்களின் எண்ணிக்கை 37.

இந்தியாவில் இதன் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மொத்தம் 76 பேர்.

கரோனோ வைரலை அழிக்க சோப்பு ஒரு மிக முக்கிய ஆயுதமாக இருக்கிறது

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாலி தோர் டர் சன் என்ற பேராசிரியர் சோப்பை கொண்டு கை கழுவுவதன் அவசியத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வைரலாகப் பரவி வரும் அந்த கருத்துக்கள் சிலவற்றை பார்க்கலாம்.

 பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையும் தங்கள் முகத்தை தொட்டு கொள்வார்கள். 
 வைரஸ் நம் கையில் பட்டு விட்டால் கை கழுவினால் தவிரவைரஸ் தொற்று போகாது.
  நீரைக்கொண்டு மட்டும் கைகழுவினால் போதாது. ஏனெனில் கரோனோ வைரஸ் ஓட்டும் இயல்பு உள்ளது. வெறும் தண்ணீரில் கழுவினால் போகாது. சோப்பு நீர் என்பது முற்றிலும் வேறானது. 
 சோப்பில் ஆம்பி ஃபீல்ஸ் எனப்படும் கொழுப்பு போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. இவை வைரஸின் வெளிபுறம் உள்ள லிப்பிடுகள் போல இருப்பவை.
  சோப்பு மூலக்கூறுகள் வைரஸ் லிப் பிடுகளுடன் போட்டி போடுகின்றன. வைரஸை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பசையை குறைக்கிறது. வைரஸ் இருக்கும் நம் தோலுக்கும் இடையே உள்ள தொடர்பை சோப்பு மூலக்கூறுகள் தடுத்து விடுகின்றன இவற்றின்  கூட்டு செயல்பாட்டால் வெகுவிரைவில் வைரஸ்களை தனியாக கழற்றி கழன்று விடுகின்றன.
  நமது தோல் சுருக்கங்கள் நிறைந்ததாக இருப்பதால் நம் கைகளை சோப் பால் நன்றாக நீரில் முழுமையாக தேய்த்து கழுவ வேண்டும். அப்போதுதான்  சோப்பு இண்டு இடுக்குகளில் பரவி வைரஸ்களை அழிக்கும்.
  தொற்று நீக்கிகள் துடைப்பு காகிதங்கள், க்ரீம்கள் போன்றவற்றை காட்டிலும் சோப்பு அதிக அளவுக்கு பயனுள்ளவை.ஏனென்றால் கைகளையும் கால்களையும் துடைக்கும்போது உங்கள் கைகளின் உள்ள வைரஸ்களை கொல்லும் அளவு உங்கள் கைகள் முழுமையாக சுத்தம் அடையும் என்று சொல்ல முடியாது .

சோப்புகளை வைத்து எவ்வளவு நேரம் கைகளைக் கழுவ வேண்டும்

முதலில் சோப்பைக் கைகளில் தேய்த்துக்கொண்டு உள்ளங்கைகளை ஒன்றுடன் ஒன்று தேய்க்க வேண்டும். அதன்பின் விரல்களுக்கு இடையே தேய்க்கவேண்டும். அடுத்ததாக கைகளுக்கு பின்புறம் தேய்க்க வேண்டும். அதை அடுத்து கட்டை விரலுக்கு அடிப்புறம் தேய்க்கவேண்டும். விரல்களின் பின்புறம் தேய்க்கவேண்டும். நகங்களுக்கு சோப்பு நீர் செல்லும்படி நன்றாக தேய்க்க வேண்டும்.  இதன் பின் கைகளை கழுவி துடைக்க வேண்டும்.

மேலும் படிக்க – கற்பூரவல்லி, துளசி, வேப்பில்லை, இது கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றுமா..!

இந்த செயல்முறையை பயன்படுத்தி நம் கை கழுவினால் மட்டுமே வைரஸ் நம் உடலுக்குள் செல்வதை நம்மால் தடுக்க முடியும். க கோரானா வைரஸ் முதல் தடவையாக இப்போதுதான் உலக அளவில் பெரும் கொள்ளை நோயாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த கொள்ளை நோயை கட்டுப்படுத்த முடியும் என்பதை சீன மருத்துவர்கள் நிரூபித்திருக்கின்றன.

சுய தூய்மை மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் வைரஸின் தொற்று பரவாமல் தடுக்க முடியும். நமக்கு வரும் கோடையை நினைத்து வருந்தி கொண்டிருப்போம் ஆனால் இந்த கோடை காலத்தில்தான் கரோனா வைரஸ் பரவுவதற்கு கொஞ்சம் குறைவான சாத்தியங்கள் இருப்பதாக கூறப்பட்டு வருகின்றன.

அதாவது 27 டிகிரி வெப்பநிலை குறைவாக உள்ள நிலையில் தான் இந்த கரோனா வைரஸ் உயிர்ப்பு தன்மையுடன் இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன