வாழ்கையில் கடினமான சூழலை எதிர்கொள்ளும் வழிகள்

  • by

 வாழ்கையில்   சவாலான சூழலை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்ற  தெளிவு அனைவருக்கும் இருக்க வேண்டும். திருமணமான தம்பதியர்களிடையே நீ பெரிதா,  நான் பெரிதா என்ற காம்ளக்ஸ், காதலர்களிடையே சரியான புரிதல் இல்லாமல் இருத்தல், தொழில் அதிபர்களிடையே லாபமின்மை தொடர்பான சிக்கல்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் அவர்கள் சார்ந்த துறைகள், உறவுகளிடையே சிக்கல் ஏற்படுவது  என்பது இயல்பானது ஆகும்.

மேலும் படிக்க: ஒரு சராசரி மனிதனின் தினசரி வாழ்க்கை..!

 சிக்கலான  தருணங்களில் ஆண்கள்: 

சிக்கலான  காலங்களில் ஆண்கள் தங்களது  மனக்கசப்பை தாங்க முடியாமல் தவிக்கின்றனர். அப்பொழுது அவர்களுக்கு மது, புகைப்பிடிப்பது அனைத்தும் வழக்கத்தில் மூழ்குகின்றனர். மேலும் மனமானது அவர்களிடம் ஒரு நிலையில் இருக்காது. அது போன்ற நேரத்தில் பலருக்கும் தாம் என்ன செய்கின்றோம் என்ற தெளிவு இருப்பது இல்லை. இது போன்ற நேரத்தில் கோபத்தில் கண்டபடி செயல்படுவார்கள். இதனைப் போக்க ஆண் பிள்ளைகளுக்கு சிறு வயது முதல் கடினமான சூழநிலைகளைப் பழக்கப்படுத்தி அவர்களை வாழ்வில் தயார்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். கடினமான சூழநிலைகளில் பயிற்சி பெறும் ஆணின் வாழ்க்கையானது எந்த சறுக்கலிலும் விழாது. 

மேலும் படிக்க: சேமிப்பை பின்பற்றி செழிப்புடன் வாழ்வோம்

சவாலான சூழல்கள்

சவலான சூழலில் பெண்கள்: 

தங்கள் வாழ்க்கை துணை, வீட்டில் உள்ள குடும்பத்தினர், செய்யும் வேலையில் உள்ள பளு, சுற்றத்தாரிடம்  ஒரு பெண் அனுசரித்து செல்ல முடிகின்றது என்றால் அவளுடைய வாழ்வில் அது அதிகமாக கற்றுக் கொடுப்பட்டிருக்கும். வாழ்க்கையில் அவளின் இயற்கையான மனநிலையுடன் இது இன்னும் சிறப்பாக அமைந்துள்ளது. இதனால்தான் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவார்கள். 

பெண்களுக்கு எல்லா சூழல்களிலும் முன் அனுபவம் இருந்தாலும் இல்லையென்றாலும் அவர்கள் பெரும்பாண்மையான சூழல்களில்  மன உறுதியுடன் செயல்படுவார்கள். அவர்களின் உறுதி தன்மையால் வீட்டையும் தான் சார்ந்த துறையையும் அவர்கள் சுயமாக எதிர்கொண்டு வாழ்வில்  வெற்றியும் பெறுவார்கள். பெண்கள் இயற்கையாகவே திடமான மன நிலையை கொண்டவர்கள் அவர்கள் தாங்கள் சந்திக்கும் சூழலை எல்லாம் எளிதாக கையாளகூடியவர்கள் ஆவார்கள். ஆனாலும் அவர்களும் தடுமாறும் சூழல்கள் இருக்கத்தான் செய்கின்றது.

சவாலான சூழல்கள்

வாலிபத்தில்  வசப்படாது: 

ஆண்களானாலும் பெண்களானாலும்  அவர்களுடைய வாலிப வயது என்பது பாதுகாக்கப்பட வேண்டிய வயதாகும். இருவருக்கும் அப்பொழுதைய  சூழலை கையாளத் தெரியாது. இது கொஞ்சம் பிசகினாலும் ஆபத்தான சூழல்களை எதிர்கொள்ள நேரிடும்.   டீன் ஏஜ் ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் பள்ளி, வீடுகளில் எதார்த்த வாழ்க்கையானது கற்றுக் கொடுக்கபட வேண்டும். அவர்களுக்கு கட்டுபாட்டுடன் கூடிய சுதந்திரம் கொடுப்பது அவசியம். உங்கள் வீட்டு ஆணோ, பெண்ணோ  வீட்டுக்கு வர தாமதமானால் ஏன் தாமதம், எதற்கு தாமதம் என பாருங்கள் அதுபோல் வினாவினை எழுப்புங்கள் அவர்கள் கொடுக்கும் விடையில் திருப்தியில்லை எனில் அதனை ஏற்றுக் கொள்ளாதீர்கள் அந்த வயது மிகுந்த குழப்பங்கள், பிடிவாதங்கள் நிறைந்த வயது, இயற்கையில் திருவிளையாடல்கள் எல்லாம் நடைபெறும் வயதாகும் அப்பொழுது உங்கள் வீட்டுக் குழந்தைகளை கட்டுபடுத்தினால் போதுமானது ஆகும்.  வாலிப பருவத்தில் நல்லது, சரி என்பது எல்லாம் இரண்டாம் பட்சமாகத் தான் தெரியும், ஆகையால் அந்த வயதுக்காரர்களை கண்காணித்து வழி நடத்துவது அவசியம் ஆகும். 

வாழ்வில் மன அழுத்தம், தேவையற்ற குழப்பங்கள் சந்திக்காத மனிதர்களே இருக்க மாட்டார்கள். எதாவது ஒரு  சூழலில் மனிதன் தங்கள் வாழ்வில் தவறு செய்வது இயற்கையானதுதான் ஆனால் தான் செய்த தவறு என தெரிந்துபோனால் அதனை சரி செய்யத்தான்   நாம் வழிநடத்த வேண்டும்.

சவாலான சூழல்கள்

வயதானவர்களின் அனுபவம்:

நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் நமது வாழ்க்கைப் பாதையை சரியாக செய்து  முடிப்பார்கள் அதனை நாம் அறிதல் அவசியம் ஆகும். உங்கள் வாழ்கையில் நீங்கள்  செல்லும் பாதை சரியாக உள்ளதா என்ற சந்தேகம் இருந்தாலோ, அல்லது செய்து முடிக்கும் பணியில்  ஒழுங்கு இல்லை எனில் நிச்சயம் அவர்களிடம் கலந்துரையாடுங்கள் உங்கள் திறன் அறிந்து அதற்கான நல்ல ஒரு உபாயம் கொடுப்பார்கள் அவர்களின் கணிப்பானது உங்களுக்கு இறைவன் கொடுக்கும் எச்சரிக்கை மணியாக நினைத்து செயல்படுங்கள் வீட்டிலுள்ள பெரியோர்களின் கணிப்பு என்றும் சரியாகத்தான் இருக்கும். அவர்கள் சொல்படி  கேட்டு நடந்தாலே நமது வாழ்வானது வளம் பெறும். 

மேலும் படிக்க: உங்கள் திறமையை கண்டுபிடிப்பது எப்படி?

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன