கண்ணுக்கு மை அழகு, காதல் ஓவியம் பேசும் கண்களுக்கு எது அழகு!

  • by

கண்களிலிருந்து தான் முதலில் எல்லோருடைய அழகும் வெளிப்படும். அத்தகைய அழகு வாய்ந்த கண்களின் ஆரோக்கியம் மற்றும் அழகை நாம் சரியாக பராமரிக்க வேண்டும். ஒருவரை பார்த்தவுடன் நம் மனதிற்கு பிடிக்க செய்வது கண்கள்தான். ஏனென்றால், கண்களுக்கு பொய் சொல்ல தெரியாது.

நம் மனதில் என்ன நினைக்கிறோமோ அதை கண்கள் வழியாக உணர்த்த முடியும். இதனாலேயே பலபேர் உங்கள் எண்ணம் எத்தகையது என்பதை கண்களை பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த கண்களின் ஆரோக்கியம் மற்றும் அழகை எப்படி அதிகரிப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க – அழகழகான குர்த்தி ஆடைகள் அணிந்து பாருங்கள்

கண்களின் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்று நாம் என்னதான் அழகு சாதன பொருட்களை கண்களுக்கு வாங்கிப் பயன்படுத்தினாலும் நம் கண்கள் சரியாக தெரிந்தால் தான் அது அனைத்தும் பயனடையும் இல்லையெனில் நாம் மூக்கு கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் மட்டுமே பயன்படுத்த நேரிடும் இதை வைத்துக்கொண்டு கண்களுக்கான ஒப்பனை செய்வது என்பது சிரமமாக இருக்கும். எனவே முதலில் கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு வைட்டமின் ஏ உணவுகளை உட்கொள்வது நல்லது. பால் பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சு பழங்கள் மற்றும் காய்களை சாப்பிட வேண்டும். இதை தவிர்த்து கண்களுக்கு நீர்சத்து அதிகம் தேவை இதனால் தண்ணீரை சரியான அளவில், சரியான நேரத்தில் குடிக்க வேண்டும்.

உங்கள் சரும நிறத்திற்கு ஏற்றார் போல் கண்களுக்கான மேக்கப் பொருட்கள் கடைகளில் விற்கிறார்கள். முடிந்தவரை நாம் தரமான மேக் அப் பொருட்களையே வாங்க வேண்டும். இல்லையெனில் அது உங்கள் கண்களை பாதிப்படைய செய்து விடும். கண்களின் அளவு மற்றும் சருமத்தின் நிறம் இவைகள் இரண்டையும் வைத்துதான் நம் கண்களை அழகுபடுத்த முடியும்.

முதலில் நம் முகத்தில் நல்ல தரமான பவுண்டேஷனை போட வேண்டும். பிறகு விருப்பமான ஐ ஷேடோ போட வேண்டும். காலை வேளைகளில் லைட்டான ஷேடோகளையும் மாலை மற்றும் இரவு வேலைகளில் டார்கான ஷேடோகளை பயன்படுத்துவது நல்லது. பின்பு நாம் ஐலைனர்களை வைத்து நம் கண்களை வரைய வேண்டும். எல்லோரும் திக்காக இருக்கும் ஐலைனரருக்கே முக்கியத்துவம் தருகிறார்கள். அதனால் உங்கள் கண்களின் அளவைப் பொறுத்தே நாம் ஐ லைனரை பயன்படுத்த வேண்டும். பெரிய கண்கள் உடையவர்கள் திக்கான ஐ லைனர்கள் சரியாக இருக்கும் அதுவே சிறிய கண்களை உடையவர்கள் சிறிய அளவில் பயன்படுத்துவது நல்லது. அதேபோல் கண்களின் கீழ் பகுதியில் அதிகமாக தடவுவதை தவிர்க்க வேண்டும்.

இதன் பிறகு மஸ்காராவை நாம் பயன்படுத்த வேண்டும். காலை சமயங்களில் ஒரு கோட்டிங்கும், மாலை மற்றும் இரவு நேரங்களில் இரண்டு, மூன்று கோட்டிங் போட்டால் கண்களை அழகாக காண்பிக்கும். இப்போது மஸ்காரா நீளம் மற்றும் பிரவுன் போன்ற நிறங்களில் வெளிவரத் தொடங்கிவிட்டது. இதனால் உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்றாற்போல் இதை வாங்கி பயன்படுத்தலாம்.

கடைசியாக கண் மையை பயன்படுத்த வேண்டும். காஜல் என்று அழைக்கப்படும் இந்த கண்மை நம் கண்ணிற்கு மிக அருகில் போன படுவதால் இதை தரமானதாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் இது கண்களுக்கு அருகில் போடப்படுவது நாள் அது நமக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.

மேக்கப் போடுபவர்கள் இரவு வீடு திரும்பிய உடன் கண்களில் இருக்கும் மேக்கப்களை அனைத்தையும் அகற்றி விட்டு தான் தூங்கவேண்டும். இதற்காக நீங்கள் சோப்பு மற்றும் இதர கண் எரியும் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து. இதற்காகவே கடைகளில் விற்கப்படும் கிளன்சர்சை பயன்படுத்துவது நல்லது. பின்பு இரவு நேரங்களில் ஒருதுளி விளக்கெண்ணையை கண்களில் விட்டு உறங்குவதினால் இது உங்கள் கண்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.

மேலும் படிக்க – வீட்டிலேயே மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்வது எப்படி?

ஒருசிலர் கண்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் கண்களுக்கு கீழ் கருவளையம் உண்டாகியிருக்கும். இது தூக்கமின்மை அல்லது சரியான வைட்டமின் உணவுகளை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு ஏற்படும். இதை தடுப்பதற்கு நீங்கள் வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை வட்ட வடிவில் நறுக்கி கண்கள் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். இதைத்தவிர்த்து குறைந்தது 8 மணிநேரம் நன்றாகத் தூங்கவேண்டும். ஒரு சிலருக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும் அதை தவிர்ப்பதற்கு இரவு நேரங்களில் உறங்குவதற்கு முன் சூடான பாலில் தேன் கலந்து குடித்தால் உங்களுக்கு ஏற்படும் மன பிரச்சனைகளைத் தீர்த்து ஆழ்ந்த உறக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். எனவே இந்த வழிகள் அனைத்தையும் பயன்படுத்தி உங்கள் கண்களின் அழகு மற்றும் ஆரோக்கிய த்தை அதிகப்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன