இதயங்கள் பரிமாறி, இமைகளில் உணர்வுகளால் சங்கமிப்பது காதல்

  • by

காதல் வந்தால் சொல்லி அனுப்பு, உன் கண்களின் நான் குடியிருக்க வேண்டும். காலை மாலை எல்லாம் கனவு போல் உள்ளது, நி உடன் இருப்பதால் உயரமான கட்டிடங்கள் எல்லாம் உள்ளங்கையில் இருப்பதுபோல்  ஒரு உணர்வு இது போல் கிறுக்கி எடுக்கிறீங்களா, கவலைப்படாதீங்க காதல் பாடம் கற்போம் வாங்க, என்னடா இது காதலுக்கு வந்த சோதனை இதுக்கெல்லாம் கிளாஸாம், ஆமாங்க இதுக்குதான் கிளாஸ்,  காதல் குறித்து சரியான பார்வை நமக்கு இருக்க வேண்டியதை அவசியமுங்க, காதலிக்க போறீங்களா உங்களுக்கான் ஒரு அற்புத டிப்ஸ் இங்கு கொடுத்துள்ளோம். 

காதல்  கலந்துரையாடலில் வரும், தொடர்ந்து  காண்பதில் வரும், இமைகளில் மலரும், இதயத்தில் பரவும். உண்மையான காதல்  உள்ள பரிமாற்றத்தின் அடுத்த பரிமாணம் ஆகும். 

மேலும் படிக்க – ஈர்ப்பு விதியை தன் வசப்படுத்த நாம் செய்ய வேண்டிய செயல்கள்..!

உணர்வுகளால் இது உணர முடியும். புரிதல்களின் மாலை  காதல், விட்டுகொடுத்தலின் வீடு காதல், தோழமையாய் கலந்துரையாடலில் காதல் மலர்கின்றது. இது ஒளிவு ம்றைவு இல்லாதது. ஒவ்வொருவரின் வாழ்கையிலும் வந்து செல்லும் ஒன்றுதான் இதுகுறித்து நாம் முறையாக அறிந்து  காதல் செய்தல் சிறப்பு ஆகும். 

இதயங்களின் இணைவு காதல்

அண்ணலும்  நோக்கினான் அவளும் நோக்கினான், நோக்கியா போனைத்தாண்ட இருவரும் இளைப்பாற பேசி இலக்கணம் பேசி  நோக்குவதால் வருவதுதான், காதல் இதை உணர்ந்து செய்ய வேண்டும். இது தான் காதல் என அனைவரும் உணர்ந்து கொள்ளும்படி வாழ வேண்டும். 

காதலிக்க தகுதி வேண்டும்: 

காதல் செய்வது   கடினமல்ல அது எல்லோருக்கும் எளிது ஆனால் உணர்வு பூர்மான காதல் சிலர்தான் செய்ய முடியும். காதலிக்க சில தகுதிகள் உண்டு. தகுதிகள் இருக்கான்னு கேக்கதீங்க ஆமா,  காதலிக்க தனித்தகுதியுண்டு. 

ஆணோ, பெண்ணோ   உணர்வுகள் ஒத்து உள்ளங்கள் பரிமாறி ஒரு நூறு முறையாவது காதலிக்கும் முன் அல்லது காதலிக்கும் போதாவது உருப்படியாக பேசியிருக்க வேண்டும்.  ஸ்மார்ட் போனை மிஞ்சிய காதல் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். ஸ்மார்ட்டாக காதலிப்பது காதலுக்கு உகந்தது அல்ல, சிரத்தையுடன் காதலிக்க முடிந்தால்   காதலிக்கத் தொடங்குங்கள். 

மேலும் படிக்க – குடும்பச் சந்திப்பினால் ஏற்படும் நன்மைகள்…!!!

பார்த்தது காதல். பார்க்காமல்  காதல், போனில் காதல், கடிதத்தில் காதல் எதுவனாலும் உள்ளங்கள் அங்கு உரையாட வேண்டும். உண்மை இருவருக்குள்ளூம் இருக்க வேண்டும். நட்பாக இருவரும் பழகும்  உள்ள பரிமாற்றம் உங்களை உணர்த்தும். 

வாழ்கைக்கு துணையாக வரும் காதலியை வாழ்வாதரமாக  மதிக்க வேண்டியது அவசிம் ஆகும். வாழ்வின் துணையாக வரும் காதலரை சுவாசமாக நேசியுங்கள். 

காதலிக்க வேண்டும் தகுதி

விட்டுகொடுங்கள்: 

காதலில் விட்டுகொடுங்கள்  வீண் போகாது, வீண் வம்பு பேசாதீர்கள் விலை போகாதீர்கள் எதிர்பார்ப்பு இல்லாமல் வருவதுதான் காதல், எதையோ எதிர்பார்த்து வந்தால் அவற்றில் சலிப்பு வரும். 

சார்ந்திருத்தல்:

நட்பில் இல்லாத உணர்வு காதலில் இருக்கும். அது நட்பில் இருந்து வேறு பட்டிருக்கும் இதுதான் அது என உணர்த்த முடியாது அதுதான் காதல். 

மேலும் படிக்க – காதலர் தினத்தை வேறு வழியில் கொண்டாடுவது எப்படி?

அந்த காதல் வந்தால்  கழுதையின் காணம் கூட உங்களுக்கு கசக்காது. உரு வித சலனத்தில் சரிந்திருப்பீர்கள். உணர்வை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என வேற்று கிரகத்தில் இருந்து யோசிப்பீர்கள், எல்லாம் கையை விட்டு போவது போல்  இருக்கும் உங்களவர் உடன் இல்லையெனில் இதயம் இறுக்கமாகும். இதுபோல் வித்தைகள் கொண்டதுதான் காதல் அதை உணர்ந்து காதலியுங்கள்.  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன