அனைவரும் கற்கலாம் தையல் (ம) எம்பிராய்டரி!

  • by

தையல் துறை என்பது ஓய்வில்லாத துறை. இந்த துறை மூலம் பெயர், பணம், நன்மதிப்பு என பல சுகங்களை ஏற்படுத்தும்; இதை கற்றுக் கொள்வது சிரமமில்லை கற்றுக் கொண்டுவிட்டால் இதில் பலவிதமான புதுமைகளை புகுத்தி உங்களை வேறு தளத்திற்கு அழைத்து செல்லும். இயந்திரத் தையலோ கைத் தையலோ தையல் கட்டு என்பது தையலின் அடிப்படை. இன்று பல தையல் முறைகள் வேறுபட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

தையல் மற்றும் எம்ப்ராய்டரியில் அடிப்படையை ஒருவர் கற்றுக் கொண்டுவிட்டால் பின்னர் உங்கள் வசதிக்கேற்ப உங்கள் சிந்திக்கும் திறன் வேறுபடும் அதன் மூலம் பல புதுமைகளை படைக்க முடியும். வாடிக்கையாளர்கள் மட்டுமே நோக்கம் என கொள்ளாமல் நீங்கள் தைக்கும் துணிகளை அனைவரும் ரசிக்கும் வண்ணம் வாடிக்கையாளருக்கு ஏற்ப அவர்களின் விருப்பங்களை அறிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்த வகையில் தைப்பது மிகவும் முக்கியம்.

துணிகளை வெட்டும் கலை :

வாடிக்கையாளரிடம் துணியை வாங்கிய பின் அவர் முன்னிலையில் அளவுகளை சரிபார்த்துக்கொள்வது அவசியம். பின்னர் துணியை வெட்டும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். வெட்டிமுடித்த அதை ஒரு துண்டு விடாமல் எடுத்து பையில் வையுங்கள். பல நேரங்களில் துணிகள் மாறிவிடுவதும் உண்டு. தைக்கும்போது அளவுகளை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்துகொண்டு தைப்பது முக்கியம் மேலும் ஒரே தையல் போடாமல் வருங்காலத்தில் வாடிக்கையாளருக்கு ஏற்றார் போல் 4-5 தையல் போடுவதும் நல்லது.

தையல் டிப்ஸ்கள் :

  • காட்டன் உடைகளை தைக்க கொடுக்கும் போது 1 நாள் முழுதும் நீரில் நனைத்து பின் காயவைத்து அய்ர்ன் செய்து கொடுங்கள்.
  • துணியின் நல்ல பகுதி பக்கம் காய வைத்தால், உள்புறம் உள்ள காட்டன் சுருங்கிவிடும் அயர்ன் செய்ய நேரம் எடுக்கும்.
  • துணி தைக்கவருபவர்களிடம் உண்மையான விலையை விட சிறிது பணத்தை குறைத்து வாங்கிக்கொள்ளுங்கள்.
  • துணி தைக்க நாள் கிழமை பார்க்காதீர்கள், அவசரத்திற்கு வந்தால் தைத்து கொடுங்கள்.
  • குறிப்பிட்ட நேரத்தில் துணிகளை கொடுத்துவிடுங்கள்,

தையல் துறை கிராமப்புறங்கள் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலும் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது; இந்தத் துறையை கற்க பலரும் ஆர்வமாக உள்ளனர் காரணம் இதில் எப்போதும் நல்ல சம்பாத்தியம் உண்டு என்பது மேலும் இது கற்பது எளிது என்பதாலும் 6 மாதங்களில் சிறந்த தையல் கலை நிபுணராக ஒருவரை மாற்றும் என்பதாலும் இந்த துறை எப்பொழுதும் மக்கள் மத்தியில் பிரபலம்.

குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம் இந்த தையல் கலையை நன்கு அறிந்த நிபுணர்கள் பலர் ஆன்லைனில் வீடியோ மூலம் பலருக்கு வகுப்புகளை வழங்கி வருகிறார்கள்.

உங்களுக்கு தையல் கலையில் விருப்பமிருந்தால் ஆன்லைன் தளத்தை பயன்படுத்தி இந்த ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளுங்கள்.

இப்பொழுது தையல் மற்றும் எம்பிராய்டரி நிபுணர் மோனிகா அவர்கள் லேடிஸ் சுடிதார் டிசைனிங், எம்பிராய்டரி போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளதால் மோனிகா அவர்கள் ஆன்லைன் மூலம் தையல் மற்றும் எம்பிராய்டரி வகுப்புகளை நடத்துவதால் பலர் பயன் பெறுகின்றனர்.

தையல் மற்றும் எம்பிராய்டரி வகுப்புகளை ஆன்லைனில் மோனிகாவுடன் கற்க…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன