ஈரோட்டின் நிலை நமக்கு வருமா..!

  • by
erode district is now corona free zone

சீனாவில் தொடங்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுக்க இருக்கும் நாடுகளில் பெரிதளவில் பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. இருந்தும் இது ஆரம்பித்த சீனாவில் இப்போது பாதிப்புகள் முழுமையாக குறைந்துள்ளது. அதைத் தவிர்த்து ஊரடங்கை முழுமையாக தளர்த்து சீன மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்கள். இது அனைத்திற்கும் காரணம் சீன மக்கள், சீன அரசுக்கு ஒத்துழைத்து வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தார்கள்.

ஈரோடு மாவட்டம்

டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களின் மூலமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதிலும் ஈரோடு மாவட்டத்தில் ஒரே அடியாக 70க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்தவர்கள். அச்சமயத்தில் ஈரோடு தான் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தது, ஆனால் இப்போது ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்து அவரவர் வீட்டிற்கு திரும்பி உள்ளார்கள். இதற்கு காரணம் அந்த ஊர்களில் இருந்த மக்கள் ஊரடங்கை சரியாக பின் தொடர்ந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வந்தார்கள்.

மேலும் படிக்க – மனிதனை சீராக இயக்க வைக்கும் மனதை வழி நடத்தும் ரிகி ஜார்ஜ் !

சென்னையின் நிலை

தமிழகத்தில் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் நேற்று ஒரு நாள் மட்டும் கிட்டத்தட்ட 120 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளார்கள், அதிலும் சென்னையில் 105 பேர் பாதிதுள்ளார்கள். இதுவரை சென்னையில் மட்டும் 675 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளார்கள். பிற மாவட்டத்தில் உள்ளவர்கள் அதிகமாக வசிக்கும் இந்த சென்னை மாநகராட்சியில் வைரஸ் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது  இது அனைத்திற்கும் மக்கள் ஊரடங்கை சரியாக பின் தொடராததுதான் காரணம்.

கோயம்பேடு

கடந்த வாரம் சென்னை கோயம்பேட்டில் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக காய்கறிகளை வாங்கி வந்தார்கள். ஊரடங்கை துளியும் பின் தொடராதே இதுபோன்ற முட்டாள்தனமான மக்களால்தான் வைரஸின் பாதிப்புகள் சென்னையில் அதிகரித்து கொண்டே வருகிறது. இவ்வளவு நாள் நாம் எதற்காக வீட்டில் அடைந்து கிடக்கிறேம், அதனால் எவ்வளவு பாதிப்புகள் நமக்கு நிகழ்ந்துள்ளது, என்பதை பற்றி துளியும் கவலை இல்லாமல் மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் ஒருவருக்கு பாதிப்பு இருந்தாலும் தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை கடந்து செல்லும். ஏற்கனவே கோயம்பேடு அருகே உள்ள சலூனில் பணிபுரிபவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல் மகாராஷ்டிராவில் இருந்து காய்கறிகளை கொண்டு வந்த ஓட்டுநருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – பற்க்களின் பாதுகாப்புக்கு இதை செய்யுங்கள்..!

மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

எனவே இனி வரப்போகும் நாட்களில் கொரோனா வைரசால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. எனவே ஊரடங்கு நிச்சயம் நீட்டிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, எனவே இந்த ஊரடங்கையாவது மக்கள் சரியாக பின்தொடர்ந்து, அனைவரும் அவரவர் வீட்டில் இருக்க வேண்டும். உலகிலுள்ள ஏராளமான நாடுகளில் ஊடரங்கு தளர்வுக்கு வந்துள்ளது. இது போன்ற நிலை இந்தியாவிலும் நிகழ்வு வேண்டும் என்றால் மக்கள் அரசாங்கம் சொல்வதை கேட்டு நடந்து கொள்ள வேண்டும்.

இன்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரே மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் தான், தற்போது அந்த பட்டியலில் இணைந்திருக்கும் ஈரோடு மாவட்டங்களின் செயல்களை பின்தொடர்ந்து நாமும் ஊரடங்கை சரியாக கடைபிடிக்க வேண்டும். இதனால் தமிழகமும் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக உருவெடுக்கும், இதற்கு அனைத்து மக்களும் உதவியாக இருக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன