ஊரடங்கால் செலிபிரட்டிகள் சேட்டை இயற்கையின் ஆஸ்வாசம் அரங்கேற்றம்

  • by

இந்தியாவில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வரும் நிலையில் 4067 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சையானது அரசு அளித்து வருகின்றது.  கொரானா தொற்று தீவிரமாகி வருவதால் மக்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். வேலைவாய்ப்பை லட்சக்கணக்கானோர் இழந்துள்ளனர். கொரானா தொற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ள அனைவரும் சமுக விலகலை பின்பற்ற வேண்டும். கை கழுவ வேண்டும்.  சுற்றுப்புறத்தூய்மை அவசியம் போன்றதை வலியுறுத்துகின்றனர். 

கோவித்  வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள், மக்கள் நடமாட்டத்தை முழுமையாக குறைத்துள்ளது. மேலும்   கைகளை அடிக்கடி சுத்தமாகக் கழுவ வேண்டும். வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை  தெரிவித்து கொரானா பரவலை தடுக்க ஆயுத்தமாகியுள்ளது.

ஊரடங்கில் ஊடகங்களில் செலிப்பிரட்டிகளின் சேட்டைகள்: 

வீடுகளில் முடங்கியிருக்கும் பலர் ஊடகங்கள் பார்ப்பது, புத்தகம் படிப்பது, தூக்கம், சமூக வலைதளம்,  போன்றவற்றில் நேரத்தை செலவிட்டு வரும் நிலையில், நடிகர், நடிகைகளும் தங்களது ஊரடங்கை எவ்வாறு எல்லாம் செலவழிக்கின்றனர் என்ற வீடியோவை வெளியிட்டு தங்கள் மார்க்கெட்டை தக்க வைக்க விதவிதமான ஒர்க்கவுட்கள், வீட்டு வேலை, சுத்தப்படுத்துதல், சமைத்தல் போன்ற பல நடவடிக்கைகளை முன்னிருத்தி செயல்படுகின்றனர். 

மேலும் படிக்க:கொரோனாவுக்கு எதிராக போராடும் வீடுகளில் இருக்க வேண்டியவை..!

அந்தவகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டில் இருந்து விளம்பர படத்தில் நடிப்பது சமைப்பது உள்ளிட்ட பதிவுகளை  வெளியிட்டுள்ளார். விஜய் டிவியின் புகழ், மணிமேகலை கிராமத்தில் முறுக்கு சுடுவது, தீனா, தனது வீட்டு வேலைகள் வீடியோவாக்கி வைரலாக்கியுள்ளார். ஸ்ரேயா தன் கணவருடன் பாத்திரம் கழுவுதல் பேட்மிண்டன் சாய்னா வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்தல் காத்ரீனா கைப் வீட்டில் தான் செய்யும் ஒர்க் அவுட்கள் மற்ற பெரிய நடிகர்கள் பிரதமருக்கு கொரானா நிதி அனுப்புதல் என தங்கள் பெயர்களை கொரானா காலத்தில் உலாத்தவிட்டுள்ளனர். 

சமூக வலைதளங்களில் சாகசங்கள்:

யூ டியூப்  செலிபிரட்டிஸ்கள்  விதவிதமான ரெசிபிகளை கொடுத்து கொண்டிருக்கின்றனர்.  இவர்களுக்கான லைக்குகள் எல்லாம் பட்டையை கிளப்புகின்றன. அத்துடன் பேஸ் புக்,  மற்ற ஆப்கள் எல்லாம் தங்கள் அலப்பறைகள் எல்லாம் கூட்டுகின்றன. வீட்டிலுள்ள மக்களுக்கு இந்த செலிப்பிரட்டிகள் செய்யும் வீட்டு சேட்டைகள், காமெடிகள் மற்றும் மற்ற ஒர்க்கவுட்கள் எல்லாம் பன்னாக இருந்தாலும் அதுவும் ஒரு வித டைம் பாஸாக இருக்கின்றது எனலாம். விதவிதமான டிரெண்டுகளில் மக்கள் கலக்கிவருகின்றனர். இவர்களுக்கு என ரசிகர்கள் கூட்டங்கள் கமெண்ட்ஸ்கள், லைக்ஸ்கள் எல்லாம் பிச்சுக்கொண்டு போகின்றது. இதற்கிடையில் மீம்ஸ் கலாட்டாக்கள் கொரானவை வைத்து டிரெண்டாக்கி கொண்டு இருக்கின்றன. 

இவ்வளவு வீட்டில் கொண்டாட்டங்கள் இருந்தாலும் சமூக விழிப்புணர்வு கொண்ட இளைஞர்கள் சமூக சேவையில் தங்களை ஈடுபத்தி  வீடில்லாதோர்கள் மற்றும் முதியோர்க்கு உதவி வருகின்றனர். சென்னையில் சில இளைஞர்கள் கர்பிணி பெண்களுக்காக தங்கள் வாகனங்களை இலவசமாக இயக்குகின்றனர்.

மேலும் படிக்க:மருத்துவர்கள் மற்றும் காவலர்களுக்கு தேவையான அடிப்படை உபகரணங்கள்..!

கடமை கண்ணியம் கட்டுபாடு காவல்துறை:

நாடு முழுவதும் காவல்துறை அயராது  பாடுபடுகின்றது. நாட்டில் துணை ராணுவமும் இறங்கி பாதுகாப்பு பணியினை ஊருக்குள் செய்கின்றது. இந்த தருணம் நாட்டில் உள்ள காற்று மாசு, ஒலி மாசு குறைவால் இயற்கை தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டுள்ளது.  பறவைகள், கடல் வாழ் உயிர்கள் மனித இனம் வரவு குறைவால் நிம்மதியாக இருக்கின்றன.  

மனிதம் அடங்கியதால் மாஸ் காட்டும் இயற்கை:

வீதியிலுள்ள செடி, கொடிகள் எல்லாம் பூத்துக்குலுங்குகின்றன. ஓளி, ஒலி, டிராபிக் குறைவு இவை எல்லாம்  இயற்கைக்கு இன்னும் சவுகரியமாக போய்விட்டது ஆறு, நதிகள் எல்லாம் துள்ளிக் குதித்து ஓடுகின்றன.  ஆக மொத்தம் கொரானா மனித இனத்துக்கு ஒன்று கத்துக் கொடுத்துவிட்டது உயிர் பயம். இயற்கையுடன் இயைந்து வாழ்தல் இவை எல்லாம் கொரானா கொடிய நோய் செய்த சாத்னை. இனிமேலாவது இயற்கையுடன் இயைந்து வாழ்வோம்.

மேலும் படிக்க: ஆச்சரியமளிக்கும் கொரோனாவுக்கான டிபி மருந்து..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன